வாவ் .. பிக் பாஸ் ஜூன் 23 முதல்... ரெடியா இருக்கீங்களா?
சென்னை: விஜய் டிவியில் வரும் ஜூன் 23 முதல் "நம்மவர்" கமல்ஹாசன் நடத்தும் தி கிரேட் ஷோ பிக் பாஸ் ஒளிபரப்பாக இருக்குது.
நடிகர் கமல் ஹாசன் கடந்த இரண்டு சீசன் பிக் பாஸ் ஷோவை வெற்றிகரமா நடத்தி முடிச்சு இருக்கார்.
மற்ற மொழிகளில் இந்த பிக் பாஸ் முடிய முடிய அடுத்தடுத்து சீசன் என்று போய்கொண்டு இருக்க தமிழில் மட்டும்தான் பிரேக் விட்டு வருஷத்துக்கு ஒரு முறை என்று நடக்குது.

முதல் சீசன் பிக் பாஸ்
கமல்ஹாசன் கூட முதல் சீசன் பிக் பாஸ் போல இரண்டாவது சீசன் இல்லை என்று அவ்வப்போது சலிச்சுக்குவார். ஆனால், போகப்போக இரண்டாவது சீசன் பிக்பாஸும் களைக்கட்டி.. இப்போது அதில் கலந்துக்கிட்ட ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த்...டைட்டில் வின்னர் ரித்விகா இவங்களுக்கு எல்லாம் சினிமாவில் நடிக்க வாய்ப்புக்கள் வந்துகிட்டே இருக்கு.

முதல் சீசன் ஓவியா
முதல் சீசனில் ஓவியாவுக்கு ஆர்மி ஆரம்பிச்சாங்க.. ரெண்டாவது சீசனில் மும்தாஜுக்கு ஆர்மி ஆரம்பிச்சாங்க ரசிகர்கள்.. மும்தாஜ் நிறைய பெர்சனல் விஷயங்களை தயங்காமல் பிக் பாஸில் பேசினார்.

ஆரவ் முதல் சீசன்
பிக் பாஸ் முதல் சீசனில் கவிஞர் சினேகனுக்கும், ஆரவ்க்கும் கடும் போட்டி நிலவி வந்தது. கடைசியில் ஆரவ் ஜெயிச்சார். அவர்தான் நடிச்சு வரும் ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இரண்டாவது சீசனில் வெளியிட்டார்.

ஜூன் 23
இந்த நிலையில்தான் பிக் பாஸ் 3 வது சீசன் வருகிற ஜூன் மாதம் 23 ம் தேதி ஒளிபரப்பாக உள்ளது.இதில் யார் யார் கலந்துக்க போறாங்கன்னு இன்னும் முறையான அறிவிப்பு ஒன்றும் வராத நிலையில், நடிகை ஸ்ரீரெட்டியுடன் பேசசு வார்த்தை... ராஜா ராணி சீரியல் புகழ் ஆலியா மான்ஸா கன்ஃபார்ம் என்று பேசிக்கறாங்க.

கமலே இந்த முறையும்
இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நம்மவர் கமல்ஹாசனை நெற்றிக்கு மேல் முடியில் கொஞ்சம் வெள்ளையுடன் பார்ப்பது கூடுதல் சந்தோஷமாக ரசிகர்களுக்கு இருக்கும் என்று தெரிகிறது. இதுதான் கமலின் பிக்பாஸ் கெட்டப்.

வெள்ளி முடி டிரண்டுக்கு
இப்போதுதான் வெள்ளை முடி டிரண்டுக்கு வந்திருக்கார் கமல்ஹாசன். இரண்டு விரல்களை ரவுண்டாக்கி ஒரு கண்ணில் இவர் பார்த்து பிக்பாஸ்னு சொல்வது ஐயோ அள்ளுது!












Click it and Unblock the Notifications