Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

PR யாரெல்லாம் வச்சிருக்கீங்க? பிக் பாஸ் கேட்ட கேள்வி.. அர்ச்சனா சொன்ன பதில்.. வரிஞ்சி கட்டிய போட்டியாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஜனவரி 4ஆம் தேதி காலை ஒரு டாஸ்க் பிக்பாஸ் கொடுத்திருக்கிறார். அதில் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களில் யார் யாரெல்லாம் பிஆர் டீ வைத்திருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதை பற்றி சொல்லுங்கள் என்று பிக் பாஸ் கூறி இருக்கிறார்.

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைவதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் டிஆர்பி அதிகரிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவும், ரசிகர்கள் அடிக்கடி பிஆர்டீம் உதவியோடு தான் உள்ளிருக்கும் சில போட்டியாளர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்று சொல்லி வருவதால் அதற்கு தெளிவு படுத்துவதற்காகவும் பிக் பாஸில் புதுவிதமாக முயற்சி எடுத்து இருக்கிறார்கள்.

Bigg Boss has given a task on who among the contestants in the house you think has PR

ஆனால் வழக்கம் போல இந்த டாஸ்கிலும் சண்டையில்தான் முடிந்திருக்கிறது. உள்ளிருக்கும் போட்டியாளர்கள் பலரும் அர்ச்சனா தான் பி ஆர் வைத்திருக்கிறார் என்று சொல்லி இருந்தனர். அதனால் கோபமான அர்ச்சனா தன் தரப்பு நியாயத்தை எடுத்து வைத்திருந்தார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி 94 வது நாள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த சீசன் முடிவுக்கு வர இருக்கிறது. இதனால் உள்ளிருக்கும் போட்டியாளர்கள் ஹாயாக சுற்றுலா வந்த மாதிரி சுற்றி திரிந்து கொண்டிருக்க இதை பார்த்து காண்டான பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பகையை மூட்டி விடுவதற்காக புது டாஸ்க் வைத்திருக்கிறார்.

ஆமாங்க அதான் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பிஆர் டீம் செட் பண்ணி வைத்துவிட்டு வாக்கு போட்டு ஜெயித்து விடுகிறார்கள் என்று பெரும் பஞ்சாயத்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதை அப்படியே பிக் பாஸ் போட்டியாளர்கள் வாயாலையே அதற்கு விளக்கத்தை கொடுக்கும் விதமாக புது டாஸ்க் ஒன்று ரூம் போட்டு யோசித்து வைத்திருக்கிறார்.

அதில் இந்த நிகழ்ச்சிக்கு வந்து ஓட்டுக்காக பணம் கொடுத்த யாராவது ஒருத்தரை பத்தி சொல்லுங்க என்று பிக் பாஸ் கொளுத்தி போட, முதலில் தொடங்கியது அர்ச்சனா தான். அர்ச்சனா விஜய் வர்மா என்று சொல்லியிருந்தார். அதற்கு விஜய் வர்மா அர்ச்சனாவை சொல்லி இருந்தார். ஏன்னா எனக்கு உங்களோட வளர்ச்சியை பார்த்து ஆச்சரியமாய் இருந்தது,

ரெண்டு நாள் நீங்க அழுதுட்டு தான் இருந்தீங்க.. ஆனா உங்களுக்கு அவ்வளவு ஒரு வரவேற்பு கிளப்ஸ் வந்துச்சு அதை பார்க்கும் போது எனக்கு நீங்க உண்மையாகவே ஏதோ செட் பண்ணிட்டு வந்திருக்கீங்கன்னு தோணுச்சி என்று விஜய் வர்மா சொல்கிறார். அடுத்ததாக பூர்ணிமாவும் இதை தான் சொல்கிறார். ஏன் பூர்ணிமா அப்படி சொல்றாங்கன்னா வின் தாமேஸ் போன்ற டாஸ்க்குகளில் எல்லாம் உங்க டீமுக்கு தான் அதிகமா ஓட்டு வந்துச்சு.

அதனால எனக்கு நீங்க பி ஆர் டி ம் வச்சி ஓட்ஸ் செட் பண்ணி வச்சுட்டு வந்து இருக்கீங்களோன்னு எனக்கு தோணுச்சு என்று சொன்னதையும் சொல்லிவிட்டு அர்ச்சனாவுக்கு ஐஸ் வைக்கிற மாதிரி இது பன்னுக்காக தான் சொன்னேன் என்று சொல்லி விட்டு போய்விட்டார். அடுத்ததாக மாயா மணி தினேஷ் போன்றோர் எங்களுக்கு தெரியல என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

ஆனால் தினேஷ் கூட்டம் போட்டு தன்னுடைய நண்பர்களோடு அர்ச்சனா பிஆர்டீம் செட் பண்ணி வச்சிருக்கா. நிகழ்ச்சியை பற்றி நன்றாக தெரிந்து வைத்துக்கொண்டு தான் இத்தனை நாட்கள் கழித்து வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்தார் என்றெல்லாம் பேசிய கதையும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் கடைசியாக விசித்திரா வந்து பேசியதுதான் பெரும் பிரச்சனையாக போனது.

விசித்திரா வழக்கம் போல தினேஷ் பி ஆர் டீம் செட் பண்ணிட்டு வந்திருக்காரு என்று சொல்லிவிட்டு அர்ச்சனா ஒரு புக்கே எழுதிட்டு வந்திருக்காங்க என்று போகிற போக்கில் சொல்ல அதுதான் அர்ச்சனாவுக்கு பெரிய அளவில் கோபத்தை ஏற்படுத்தியது. அதற்கு அர்ச்சனா விளக்கமும் கொடுத்து இருந்தார். என்னன்னா நான் கடைசி ஒரு வருஷமா என்னுடைய கொலாப்ஸ்ரேஷனை ஹேண்டில் பண்ணுவதற்காக ஒரு டீம் வச்சிருக்கேன்.

அவங்க தான் எனக்கு பிளாக் பண்ணி கொடுப்பாங்க. எனக்கு பேமென்ட் பேச தெரியாது. அதனால எனக்காக வச்சுக்கிட்ட பர்சன்ஸ் தான். வேற நான் எந்த பிஆர்டீமோ வைக்கல. நானே எனக்கு காசு இல்லாம தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்து இருக்கேன். கடந்த ஒரு வருஷமா எனக்கு எந்த நிகழ்ச்சியும் இல்லை காசும் இல்ல. எனக்குன்னு வந்த ஒரே வாய்ப்பு இதுதான்.

என்கிட்ட பணம் இருந்திருந்தால் கண்டிப்பா நான் இந்த நிகழ்ச்சிக்கு வரமாட்டேன். இந்த நிகழ்ச்சிக்கு வந்தா பல பேர் தப்பா பேசுவாங்கங்குறது எனக்கு தெரியும் ஆனாலும் நான் பணத்துக்காக தான் இந்த ஷோக்கு வந்து இருக்கிறேன். பணம் கொடுத்து பிஆர்டீம் செட் பண்ற அளவுக்கு எனக்கு வசதி கிடையாது.

அப்படி என்கிட்ட பணம் இருந்தா என்னுடைய பிசினஸில் நான் போட்டு இருப்பேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார் அதைத்தொடர்ந்து பெட்ரூமில் மாயாவும் பூர்ணிமாவும் பேசிக் கொண்டிருக்கும்போது எனக்கு தெரியும் நான் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பதால் ஒரு டீம் என்கிட்ட வந்து பேசுனாங்க.

அப்போ அவங்க கூட சொன்னாங்க பிக் பாஸ் வீட்டுக்குள்ள அர்ச்சனாவும் வராங்க அவங்களுக்கு நாங்க தான் பி ஆர் வேலை பார்க்கிறோம் என்று என்கிட்ட அவங்களே சொன்னாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அர்ச்சனா பூர்ணிமா பேசியதை கேட்கவில்லை விசித்திராவிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.

அப்போது எல்லாரும் ஒரு காரணத்தை சொன்னாங்க அதை கூட நான் ஏத்துக்குவேன். ஆனால் விசித்திரா நான் நோட் எழுதிட்டு வந்து இருக்கேன்னு சொன்னாங்களா அதை என்னால ஏத்துக்கவே முடியாது. எங்க அம்மா அப்பா பிக்பாஸ் வீட்டுக்குள்ள வரும்போது உங்ககிட்ட என்ன சொன்னாங்க? நீங்க என்னை பார்த்துக்கிட்டதுக்கு நன்றி சொன்னாங்கல்ல,

Bigg Boss has given a task on who among the contestants in the house you think has PR

அப்போ நான் நடிக்கின்றேன்னா எங்க அம்மா அப்பா உங்க கிட்ட வந்து அந்த வார்த்தை சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே. அப்போ நீங்க எங்க அம்மா அப்பா கிட்ட அதெல்லாம் ஒன்னும் இல்லைன்னு பெருந்தன்மையா பேசினீங்களே அப்போ அது நடிப்பு தானா? நான் நடிக்கிறேன் உங்களுக்கு தெரிஞ்சி இருந்துச்சுன்னா நீங்க அப்போ என்கிட்ட பாசமா இருந்ததும் நடிப்பு தானா என்று சரமாரியாக கேள்வி அம்புகளை எய்து கொண்டு இருக்கிறார். இந்த டாஸ்க் மற்றும் பிரச்சனை குறித்து உங்களுடைய கருத்து என்ன என்பதை சொல்லிவிட்டு போங்க...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+