தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஸ்ருதிகா.. ஹிந்தி பிக் பாஸில் அசத்தல்.. "கெட்ட வார்த்தை கேஷூவலாக வருதாமே
சென்னை: நன்றி என்று ஒருவார்த்தை சொல்வதைவிட, அதற்கும் மேலானவர்கள் தமிழ் ரசிகர்கள் என்று ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, நடிகை ஸ்ருதிகா தெரிவித்துள்ளார்.. அத்துடன், ஹிந்தி பிக்பாஸ் வீட்டில், தான் விளையாடியது குறித்தும் விரிவாக பேசியிருக்கிறார்.
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 18வது சீசனில் ரசிகர்களின் பாராட்டை பெற்ற போட்டியாளர்களில் ஒருவர் ஸ்ருதிகா.. ஒவ்வொரு எபிசோடிலும் தன்னுடைய பேச்சால் இந்தி மக்களின் கவனத்தை திருப்பினார்.. வெளிப்படையான, யதார்த்த பேச்சுக்களால், ரசிகர்களையும் பெருக்கினார். சவாலான போட்டிகளை, பிக்பாஸ் வீட்டில் எதிர்கொண்டார். பேச்சு சக போட்டியாளர்களிடமும் வரவேற்பைப் பெற்றது.

ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் 13 வாரங்களும் 3 நாளும் இருந்த ஸ்ருதிகா திடீரென வெளியேற்றப்பட்டார்.. அதாவது மொத்தம் 94 நாள்கள் பிக் பாஸ் வீட்டில் விளையாடியிருந்தார் ஸ்ருதிகா.
மனநிலைமை: இந்நிலையில், galatta tamil யூடியூப் சேனலுக்கு ஸ்ருதிகா தந்த பேட்டியில், "எனக்கு இந்தி பிக்பாஸ் ரொம்ப ரொம்ப கஷ்டமா இருந்தது.. இங்கே தமிழ் பிக்பாஸ் வீட்டில், டான்ஸ் ஆடுவது உட்பட மற்ற ஆக்டிவிட்டிஸ் நிறைய இருக்கும். இதனால், மனநிலையும் மாறும்.
ஆனால், இந்தி பிக்பாஸில் அப்படி இல்லை.. அது சைக்கலாஜிக்கல் விளையாட்டு. அங்கே நான் எல்லார் கிட்டயும் சண்டை போட்டுட்டேன். என் சந்தோஷம் போலவே, கோபமும் வெளியே அப்பட்டமா தெரிந்துவிட்டது. அதேபோல, என்னுடைய கோபத்தை போலவே, வேறு வேறு போட்டியாளர்களிடமும், அதே போன்ற கோபத்தை பார்த்தேன்.
நடிப்பு: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நான் போனதுமே, அங்கு பேசுவதை பார்த்துட்டு, எல்லாரும் என்னை நடிப்பதாக சொல்லியிருக்கிறார்கள். என் கணவன் அர்ஜூன் சொல்லித்தான், இந்த விஷயம் எனக்கு சொன்னது..
பிக்பாஸ் வீட்டில் முதல் நாளே நான் பேசியதை, "ஷி இஸ் ஃபேக்" என்று இந்தி ஆடியன்ஸ் சொல்லியிருக்காங்க. ஆனால், அடுத்த 24 மணி நேரத்தில், குக் வித் கோமாளியில் நான் பேசிய வீடியோ கிளிப்பிங்ஸ்களை எல்லாம், கமெண்ட் செக்ஷனில் எடுத்து பதிவிட்டு, "எங்க ஸ்ருதிகா இயல்பே அப்படித்தான், அவள் நடிக்கவில்லை" என்று தமிழ் ரசிகர்கள் பதிலடி தந்திருக்கிறார்கள்.

தமிழ் மக்கள்: எனக்காக ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களும் பிஆர் வேலையை பார்த்ததாக அர்ஜூன் சொன்னார்.. நன்றி என்று ஒருவார்த்தை சொல்வதைவிட, அதற்கும் மேலானவர்கள் தமிழ் ரசிகர்கள்.
இந்தி பிக்பாஸ் வீட்டில், பயங்கரமான கெட்ட வார்த்தைகளை பேசுவார்கள்.. நம்ம தமிழ் பிக்பாஸ் வீட்டில்,
"வாடா, போடா, வாடி, போடி" என்பதே மோசமான வார்த்தையாகிவிடும்.. ஆனால், அங்கே அவங்களுக்கெல்லாம், கெட்ட வார்த்தைகள் சர்வசாதாரணமாக வருது.
கெட்ட வார்த்தை: எனக்கு இந்தி, தமிழில் கெட்ட வார்த்தைகள் தெரியும். ஆனால், கெட்ட வார்த்தைகளை தெரிந்து கொண்டு, அதை பேசாமல் இருப்பது ரொம்ப கஷ்டம். பிக்பாஸ் வீட்டில் எந்த சூழ்நிலையிலும் நான், ஒரேயொரு கெட்ட வார்த்தையைகூட நான் பேசவில்லை" என்றெல்லாம் பேசியிருக்கிறார் .
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications