தேங்காய் சீனிவாசன் பேத்தி ஸ்ருதிகா அசத்தல்.. தமிழ் பிக் பாஸில் திணறிபோன வாரிசு நடிகர்.. பிரபலம் நச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "சிவாஜி கணேசன் பேரன் என்று எங்குமே தன்னை அடையாளப்படுத்தி கொள்ளாமல், வெளியே வந்துவிட்டார் சிவக்குமார். ஒருவேளை தன்னை அடையாளப்படுத்தி கொண்டிருந்தால் இன்னும் சில நாட்கள் பிக்பாஸ் வீட்டில் விளையாடி இருப்பார்" என்று கூறியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு.

Cheyyaru Balu Official யூடியூப் சேனலில், செய்யாறு பாலு, பிக்பாஸ் தமிழ் மற்றும் பிக்பாஸ் இந்தி இரண்டையும் ஒப்பிட்டு பேசியிருக்கிறார். அந்த வீடியோவில் செய்யாறு பாலு தொடர்ந்து பேசும்போது, "இந்தி பிக்பாஸில் நடிகை ஸ்ருதிகா கலக்கி கொண்டிருக்கிறார்.. தேங்காய் சீனிவாசன் மகன் சங்கரின் மகள்தான் ஸ்ருதிகா.. இவரது அம்மா கல்பனா ஒரு பஞ்சாபி ஆவார்.. அதனால், ஸ்ருதிகாவுக்கும் இந்தி தெரியும்.

bigg boss hindi 18 sivakumar

ஆனாலும் ஸ்ருதிகா பேசிய இந்தியை, பிக்பாஸ் வீட்டில் கிண்டல் செய்தார்கள்.. ஆனால், போக போக விளையாட்டின் சூட்சுமத்தை புரிந்துகொண்டு, சூப்பராக விளையாடி வருகிறார்.. மிகவும் புத்திசாலித்தனமான பெண் ஸ்ருதிகா.

தைரியமான பெண்: ஸ்ருதிகாவின் தம்பி ஆதித்யா ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார், "என் அக்கா ரொம்ப தைரியமான பெண். யாருக்கும் அசர மாட்டாங்க.. பயங்கர ஹ்யூமர் டைப்.. பயங்கர ஜாலி டைப்.. டைட்டில் வின்னர் அடிச்சிட்டுதான் வருவாங்க" என்றெல்லாம் சொல்லியிருந்தார்.

இப்போது 60 நாளாகிவிட்டது.. இந்த 60 நாளும் தாக்கு பிடிப்பதே மிகப்பெரிய விஷயம்தான். அவ்வளவு பாலிடிக்ஸ்களையும் இந்தி பிக்பாஸ் வீட்டில் தாங்கி கொண்டிருந்தார்கள்.. கழுதையை குளிக்க வெக்க சொன்னாங்க, கழுதை சாணியை அள்ள சொன்னாங்க.. ஃபராக்கான் ஒருமுறை நேரடியாகவே ஸ்ருதிகாவை திட்டினாங்க.. ஆனால் அனைத்தையும் முறியடித்து விளையாடி வருகிறார் ஸ்ருதிகா. பிக்பாஸ்க்கு அன்று தமிழ் சொல்லி கொடுத்ததே மிகப்பெரிய வைரலாகிவிட்டது.

யதார்த்தம்: யதார்த்தம்தான் பிக்பாஸ் வீட்டில் மிகப்பெரிய விஷயம். இந்த பெண்ணு யாரு இப்படி பேசுதே? என்று வடமாநில மக்களுக்கும் ஸ்ருதிகாவை பிடித்துவிட்டது. ஆனால், இதற்கு நேர் மாறாக தமிழ் பிக்பாஸில் நடந்துள்ளது.. சிவக்குமார் என்பவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.. அவரை யாருக்குமே தெரியல.. பிறகு வெளியே அனுப்பிட்டாங்க.. இவர் வெளியே வந்தபிறகுதான், நிறைய பேருக்கு சிவாஜி கணேசன் பேரன் என்று தெரியவந்தது.

ஸ்ரீபிரியாவின் அக்கா மகன்தான் இந்த சிவக்குமார்.. சில வருடங்களுக்கு முன்பு, ஏவிஎம் பிரிவியூ தியேட்டரில் சிங்கக்குட்டி படத்தின் பிரஸ் மீட்டுக்கு எங்களை எல்லாம் அழைத்திருந்தனர். தன்னுடைய பேரன் சிவாஜி தேவ் என்று ஸ்ரீபிரியாவின் அம்மா, இவரை அறிமுகப்படுத்தினார்.. ஜூனியர் சிவாஜி என்று ஸ்ரீபிரியாகூட அன்று சொல்லவில்லை .. அவங்க அம்மாதான் சொன்னாங்க.. "என் மகளுக்கு நீங்கள் எப்படி வரவேற்பு தந்தீர்களோ, அதுபோல என்னுடைய பேரனுக்கும் வரவேற்பு தர வேண்டும்" என்று எங்களிடம் கேட்டுக் கொண்டார்.

சிவாஜி தேவ்: பராசக்தி படத்தில், இருந்த சிவாஜி போலவே அந்த படத்தில் இருந்தார் சிவாஜி தேவ்.. இப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் ஒருநாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் என்று 4 லட்சம் ரூபாய் ஜிஎஸ்டி போக சிவக்குமாருக்கு கிடைத்திருக்கிறதாம். இது நல்ல விஷயம்.

ஆனால், இன்னார் பேரன் என்றாலும் அதிர்ஷ்டம் என்ற ஒரு விஷயம் இருக்கு.. சிவாஜியின் பேரன் என்ற அடையாளத்துடன் இறங்கியிருந்தால், இன்னும்கூட பிக்பாஸ் வீட்டில் விளையாடியிருக்கலாம். எனினும், அவர் தன்னை எங்குமே அடையாளப்படுத்தி கொள்ளவில்லை. எது எப்படியோ, வடக்கு பிக்பாஸ் வாழ்கிறது, தெற்கில் உள்ள ஸ்ருதிகாவால்" என்று தெரிவித்துள்ளார் செய்யாறு பாலு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+