Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேங்காய் சீனிவாசன் பேத்தி ஸ்ருதிகா வின்னர்? ஹிந்தி பிக் பாஸே தமிழ் பேசிட்டாரே: Bigg boss Hindi 18

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ஹிந்தியில் பிக்பாஸ் ஷோவில் ஸ்ருதிகா டைட்டில் வின்னர் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. தேங்காய் சீனிவாசன் பேத்தி டைட்டில் வின்னர் ஆனால், நமக்கு சந்தோஷம்தானே" என்று தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு.

ஹிந்தியில் பிக்பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார் ஸ்ருதிகா.. இந்த பிக்பாஸை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.. ஸ்ருதிகா பேச துவங்கிய முதல்நாளே, சல்மான் கான் ஆச்சரியப்பட்டு பார்த்ததுடன், ஸ்ருதிகாவின் ஒவ்வொரு பேச்சுக்கும் விழுந்துவிழுந்து சிரித்தார்..

television bigg boss hindi 18 shrutika arjun actress sruthika

வெகுளித்தனம்: தன்னையும் மீறி, ஒன்றிரண்டு வார்த்தைகளில் தமிழில் பேசிவிடும் ஸ்ருதிகா, உடனே அதற்கும் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறார்.. வெகுளித்தனமான பேச்சு, வெளிப்படையான பேச்சு, நகைச்சுவையான பேச்சு, பந்தா இல்லாத இயல்பான பேச்சு என தன்னுடைய பேச்சுக்கள் மூலம் ஒட்டுமொத்த பாலிவுட்டையும் இப்போது தன் பக்கம் திருப்பிவிட்டார் ஸ்ருதிகா. இது சம்பந்தமான வீடியோக்கள், ரீல்ஸ்கள் இணையத்தில் வெளியாகியும் வருகின்றன..

அதேசமயம், ஸ்ருதிகாவை டார்கெட் செய்யும் பிக்பாஸ் வீட்டினர், அவர் மீது வன்மம் கக்க துவங்கிவிட்டனர்.. சமீபத்தில், செய்யாறு பாலு Cheyyaru Balu Official யூடியூப் சேனலுக்கு ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில் அவர் சொன்னபோது "இந்தி பிக்பாஸ் வீட்டிற்குள் தென்னிந்தியா, வடஇந்தியா என்ற பாகுபாடுடன் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.. இந்த தென்னிந்திய பொண்ணு வின்னராகிவிட போகுதோ? என்று ஸ்ருருதிகா மீது வன்மம் இறக்க துவங்கிவிட்டார்கள்.

டார்ச்சர் தாங்கல: "நான் ஒரு காபி பிரியை, காபி எனக்கு ரொம்ப பிடிக்கும், காபி இல்லாமல் இருக்க முடியாது" என்று கேஷூவலாக ஸ்ருதிகா சொன்னதை வைத்தே அவரை டார்கெட் செய்ய துவங்கிவிட்டார்கள்.. கொஞ்சம் கொஞ்சமாக அந்த வீட்டிற்குள் டார்ச்சர் ஆரம்பமானது.. "பால் காபி வேணாம், பிளாக் காபியாவது கொடுங்க. காபி குடிக்காமல், என்னால டாய்லெட் போக முடியல" என்று வெளிப்படையாகவே சொல்லி அழும் அளவுக்கு நிலைமை போய்விட்டது

ஸ்ருதிகா இந்தி பேசுறதை கேலி செய்கிறார்கள்.. வச்சு செய்கிறார்கள்.. "மொழிவாரியாக என்னை டார்ச்சர் செய்வது சரியில்லை" என்று வெளிப்படையாக ஸ்ருதிகா சொல்லிவிட்டார்.. இப்போது பிக்பாஸ் வீட்டில் அரை சாப்பாடு தருவதாக சொல்றாங்க.. "எனக்கு நிறைய பசி எடுக்குது, அரை சாப்பாடு ஏன் தர்றீங்க" என்று அழுதுகொண்டே ஸ்ருதிகா கேட்கிறார்..

ஒரு மனிதன் மிருகமாவதே பசியில்தான். பசி வந்தால் ஆத்திரம் கோபம் வரும்.. இதைதான் ஸ்ருதிகாவிடம் அந்த வீட்டின் போட்டியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.. சென்னையில் வளர்ந்த பெண்ணுக்கு, அந்த சூழ்நிலையே வேற மாதிரி இருக்கும்.. ஆனாலும், "மதராசி, தென்னிந்தியா பெண்" என்று கிண்டலடித்தே வெளியே அனுப்பிவிட முடிவு செய்றாங்க" என்றெல்லாம் கூறியிருந்தார்.

தமிழ் பொண்ணு: இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு பேட்டி தந்துள்ளார் செய்யாறு ரவி.. அதில், "இந்தி பிக்பாஸில் ஒரு சம்பவமே செய்துட்டு இருக்கு நம்ம தமிழ் பொண்ணு ஸ்ருதிகா,. இந்தி பிக்பாஸையே "தமிழ்" பேச வெச்சிருச்சு.. ஸ்ருதிகா சொல்லித்தரும்போது பிக்பாஸ்க்கு வாய்ஸ் தருபவர் தெள்ளத்தெளிவாக தமிழை உச்சரிக்கிறார்..

ஒருபக்கம் தென்னிந்திய பெண் என்பதால் ஸ்ருதிகாவை டிரிக்கர் செய்து கொண்டிருக்கிறார்கள்.. ஆனாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கே கன்டன்ட் தரக்கூடிய நபராக ஸ்ருதிகா இருக்கிறார்.. டைட்டில் வின்னராக வரக்கூடும் என்று இப்போது சொல்லத் துவங்கிவிட்டார்கள்.. தேங்காய் சீனிவாசன் பேத்தி டைட்டில் வின்னரானால் நமக்கு சந்தோஷம்தான்..

தமிழ் பிக்பாஸ்: ஒருவேளை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டாலும்கூட, இப்பவே 2 வெப்சீரிஸ் இந்தியில் ரெடியாக இருக்கிறதாம் ஸ்ருதிகாவுக்கு.. ஆனால், இன்னொரு பக்கம், இந்த தமிழ் பிக்பாஸ் இப்படி இருக்கே? என்று ஆகிவிட்டது நமக்கு.. தீபாவளிக்கு புதுவரவு பிக்பாஸ் வீட்டிற்குள் வரப்போவதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து அந்த பேட்டியில் பேசும்போது, "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 5 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வரப்போறதா சொல்றாங்க.. அதில் முக்கியமான நபர், ஐஸ்வர்யா பாஸ்கர் வரப்போறாங்க.. ஆறு படத்தில் நடித்த சவுண்டு சரோஜா வரப்போறாங்க.. ஒருகாலத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதா இறங்கி கலக்கியதுபோல, விசித்திரா நடிகர் பாலய்யாவை பற்றி பேசி பரபரப்பை தந்ததுபோல, ஐஸ்வர்யாவும் அப்படியொரு பரபரப்பை ஏற்படுத்துவார் நம்பிக்கையில், அவரை அழைப்பதாக தெரிகிறது.. மற்ற 4 போட்டியாளர்கள் யார் என்பதை ரகசியமாக வைத்திருக்கிறார்கள்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+