ஹிந்தி பிக் பாஸில் தெறிக்கவிடும் ஸ்ருதிகா.. முதல் நாளே ரசிகர்களை கதற விட்டுட்டாங்களே!
சென்னை: நடிகை ஸ்ருதிஹா அர்ஜுன் தற்போது பிக் பாஸ் ஹிந்தி 18வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஏற்கனவே இவர் அதிகமான ரசிகர்களை கவர்ந்து விட்டார். இப்போது ஹிந்தி பிக் பாஸ் ரசிகர்களையும் புலம்ப வைத்திருக்கிறார்.
எவ்வளவோ நெகட்டிவ் கமெண்ட்டுகள் வந்தாலும் நான் இப்படித்தான் என்று ஒரு சிலர் கெத்து காமிப்பார்கள் அதில் ஒருவர் தான் ஸ்ருதிகா. இவர் ஏற்கனவே சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அந்த திரைப்படங்களில் எல்லாம் இவருக்கு கிடைக்காத பெயரும் புகழும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் கிடைத்தது. இதில் வளவள கொலகொல என்று பேசிக் கொண்டிருந்தாலும் இவருடைய க்யூட்டான குழந்தைத்தனம் பலரையும் ரசிக்க வைத்து விடும்.

தமிழ் சினிமாவில் பழம்பெறும் நடிகரான தேங்காய் சீனிவாசனின் பேத்தி தான் நடிகை ஸ்ருதிஹா. இவர் சூர்யா நடித்த ஸ்ரீ திரைப்படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து நளதமயந்தி திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த நேரத்தில் ஸ்கூல் படிக்கும்போதே நான்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் அந்த திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை. எல்லாமே தோல்வி அடைந்தது. அதனால் நடிப்பை விட்டு விட்டு படிப்பில் கவனம் செலுத்தி விட்டார்.
படிப்பில் கோல்டு மெடல் பெற்ற இவர் ஆயுர்வேத கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருடைய குழந்தை தனத்தை பார்த்து இவரை தமிழ் சினிமா மிஸ் பண்ணிவிட்டதே... இவர்தான் உண்மையான ஜெனிலியா என்றெல்லாம் இவருக்கு ரசிகர்கள் ஃபேன்ஸ் பேஜ்களை தொடங்கி விட்டனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்தார்.
சமீபத்தில் இவர் ஒரு வீடியோ வெளியிட்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எனக்கு தந்த ஆதரவை நான் புதியதாக போகும் ஒரு நிகழ்ச்சிக்கும் தர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருந்தார். இதை பார்த்ததும் ரசிகர்கள் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்று கூறி வந்தனர். ஆனால் இவர் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் தமிழ் நடிகை என்ற அந்தஸ்தை ஸ்ருதிகா பெற்றிருக்கிறார். முதல் நாள் எபிசோடில் இவர் சிரித்து சிரித்து பேசியதை சரியாக புரிந்து கொள்ளாத வட இந்திய ரசிகர்கள் இவர் பொய்யாக இருக்கிறார் என்று இவரைப் பற்றி நெகட்டிவ் கமெண்ட்களை குவித்து வந்தனர். இரண்டு நாட்கள் கடந்த நிலையில் தற்போது இவருடைய செயல்பாடுகள் தான் இந்த நிகழ்ச்சிக்கு சுவாரசியம் கூட்டுகிறது, இவரால் தான் இந்த நிகழ்ச்சியை பார்க்க முடிகிறது என்று அதிகமான பாசிட்டிவ் கமெண்டுகள் இவருக்கு வர தொடங்கி இருக்கிறது.
நிகழ்ச்சியில் யார் அமைதியாக இருந்தாலும் ஸ்ருதிகா அவர்களை அமைதியாக இருக்க விடாமல் வளவளவென பேசிக்கொண்டே இருப்பது இவருக்கு ரசிகர்களை அதிகரித்து இருக்கிறது. இதனால் இவர் மொக்கை போடாமல் கலகலப்பாக பேசுகிறார் என்று ரசிகர்கள் இவரை ரசிக்க தொடங்கி இருக்கிறார்கள்.
ஹிந்திலும் இவருக்கு ஃபேன்ஸ் பேஜ் அதிகரித்து இருக்கிறது. அதிலும் இவரை சல்மான் கான் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தும்போது நான் தமிழ் நடிகை எங்களுடைய ரசிகர்களுக்காக நீங்க தமிழில் வணக்கம் சொல்லுங்க என்று வேண்டுகோள் வைக்க, சல்மான்கான் எல்லோருக்கும் வணக்கம் என்று கூறியிருந்தார். இதனால் இவர் வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் கருத்துக்களை குவிக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
