ஹிந்தி பிக் பாஸில் நடந்த அடிதடி.. ஸ்ருதிகா செய்த செயல்.. இதுதான் தமிழ் பொண்ணு கெத்தா! பாராட்டு மழை
சென்னை: பிக் பாஸ் ஹிந்தி 18வது சீசனில் ஒரு பெண் போட்டியாளர் அங்கிருக்கும் சக போட்டியாளரிடம் சண்டை போட்டு அவர்களை அடித்திருக்கிறார். அதோடு அங்கிருக்கும் பொருட்களையும் உடைத்திருக்கிறார். அப்போது தமிழ் நடிகை ஸ்ருதிகா செய்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
தமிழில் பிக் பாஸ் 8வது சீசன் தொடங்கப்பட்ட அதே நாளில் தான் ஹிந்தியில் 18வது சீசன் தொடங்கப்பட்டது. இதுவரைக்கும் ஹிந்தியில் எந்த தமிழ் நடிகையும் கலந்து கொண்டது கிடையாது. முதல் முறையாக ஹிந்தியில் நடிகை ஸ்ருதிஹா ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இதனால் அவர் அங்கு என்ன செய்கிறார் என்று எதிர்பார்ப்பு தமிழ் ரசிகர்களிடம் இருக்கிறது.

ஆரம்பத்தில் ஹிந்தி ரசிகர்கள் ஸ்ருதிகாவை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் செய்வது நடிப்பு போல இருக்கிறது என்று விமர்சித்து வந்தார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஸ்ருதிகாவிற்கு சப்போர்ட் கிடைத்திருந்தது. ஆனாலும் சில தினங்களாக ஸ்ருதிஹா செய்த செயல் மீண்டும் ஹிந்தி ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
அதாவது ஸ்ருதிஹாவிற்கும் விபீனுக்கும் இடையே ஆரம்பத்தில் நல்ல பாண்டிங் இருந்தது. சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் தான் அதிகமான பிரச்சனை ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இதனால் ஸ்ருதிகா விபின் செய்யும் செயல்களுக்கு தன்னுடைய எதிர்ப்பை காட்டி வருவது வழக்கம். ஆனால் சில தினங்களுக்கு முன்பு விபின் போலவே சக போட்டியாளர்களிடம் ராஜன் என்ற போட்டியாளர் கோபமாக நடந்து கொண்டார்.

அப்போது அவரை ஸ்ருதிகா கேள்வி கேட்கவில்லை. இதனால் ஸ்ருதிகா பாரபட்சம் காட்டுகிறார் என்று அவர் மீது ஹிந்தி ரசிகர்கள் எதிர்ப்பை காட்டி இருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் நேற்று முன் தினம் பிக் பாஸ் ஹிந்தியில் பெரும் சண்டை ஏற்பட்டு இருக்கிறது. அப்போது சாரா என்ற போட்டியாளர் அங்கு இருக்கும் பொருட்களை எல்லாம் எடுத்து உடைத்து இருக்கிறார்.
அதை தடுக்க போன ஒரு சில போட்டியாளர்களையும் அடித்திருக்கிறார். ஒரு ஆண் போட்டியாளரின் சட்டையை கிழித்து அவருடைய நெஞ்சு பகுதியில் நககீரல் போட்டு இருந்தார். ஆனாலும் பிக் பாஸ் இதில் தலையிட்டு எந்த பஞ்சாயத்தும் செய்யவில்லை. வார இறுதியில் இது குறித்து விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும் சாரா பொருள்களை உடைக்கும் போது சில போட்டியாளர்கள் ஒதுக்கி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஸ்ருதிகா சாராவை சமாதானம் செய்து கொண்டிருந்தார். இது குறித்து சில போட்டியாளர்கள் அவங்க தான் கோபமா இருக்காங்கன்னு தெரியுதே அப்புறம் எதுக்கு நீங்க போய் பேசுறீங்க? அவங்க கிட்ட பேசாதீங்க என்று தடுத்தனர்.

அதற்கு ஸ்ருதிகா நான் இந்த வீட்டிற்குள் இருக்கிறேன் என்றால் இங்கு எந்த பிரச்சனை நடந்தாலும் அதை நான் தட்டிக் கேட்பேன். என் கண் முன்பு இங்கு தப்பு நடக்கிறது. அந்த பொண்ணு கோபமாக இருக்கிறது ஏதாவது தப்பான முடிவு எடுக்கக் கூடாது என்று நான் அதை தடுக்க பார்க்கிறேன். நான் இங்கு மிச்சர் சாப்பிட வரவில்லை. என்னுடைய விளையாட்டை விளையாட வந்திருக்கிறேன் என்று அவர் கெத்தாக பேசியிருக்கிறார்.
இதை பலர் பாராட்டி வருகிறார்கள். சாரா கோபமாக இருக்கும் போது அவர் நடந்து கொண்ட விதத்தை வைத்து பிக்பாஸ் வீட்டிற்குள் யாரும் அவரிடம் பேசாமல் இருக்கிறார்கள். அப்போது சாரா வானத்தை பார்த்தபடி சோகமாக அமர்ந்திருக்கிறார்.
நான் உங்கள் யாரிடமும் பேச மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, நான் உங்கள் பக்கத்தில் வருகிறேன் எதுவும் பேசமாட்டேன் நீங்கள் எப்படி வானத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்களோ அதுபோல நானும் வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று சிரித்தப்படியே ஸ்ருதிகா கேட்க எல்லோரிடமும் கோபத்தை காட்டிக் கொண்டிருந்த சாரா ஸ்ருதிகாவிடம் மட்டும் மனம் இறங்குகிறார்.
இதனால் ஸ்ருதிகா சாராவின் பக்கத்தில் சிறிது நேரம் அமர்ந்திருக்கிறார் பிறகு மெல்ல மெல்ல அவரிடம் பேச்சு கொடுத்து அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார். இந்த செயலை இணையத்தில் பலரும் பாராட்டி வருகிறார்கள். ஒரு இடத்தில் பிரச்சனை நடந்தால் நமக்கு என்ன என்று கண்டு கொள்ளாமல் இருக்காமல், கோபத்தில் இருப்பவரை எப்படி சமாதானம் செய்யலாம் என்று யோசித்து புத்திசாலித்தனமாக ஸ்ருதிகா செய்த செயல் ஹிந்தி ரசிகர்கள் மத்தியில் மீண்டும் அவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி இருக்கிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications