அடங்காத பிக் பாஸ் ஜூலி.. அதுக்காக இப்படியா.. காண்டான ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இணையதளங்களில் டிரண்டாக இருக்கும் போட்டோ ஷூட் போட்டா போட்டியில் இப்போது பிக் பாஸ் புகழ் ஜூலியும் குதித்துள்ளார்.

ஆனால் இந்த அளவிற்கு அவர் இறங்கி வேலை செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை. அவருடைய புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியில் இருக்கிறார்களாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகி முதலில் நல்ல விதமான அபிப்ராயங்களை ரசிகர்கள் இவர் மீது வைத்திருந்தனர். ஆனால் போகப் போக இவரது பெயர் கெட்டு டேமேஜாகி விட்டது.

ஓவியாவுக்கு எதிரி

ஓவியாவுக்கு எதிரி

மக்களின் பாசத்துக்குரியவராக மாறிப் போயிருந்த ஓவியாவிடம் இவர் செய்ததை பார்த்து ரசிகர்கள் இவர் மீது வைத்திருந்த நல்ல அபிப்ராயங்கள் அடியோடு மாறி இவருடைய கேரக்டர் பற்றி கழுவி கழுவி ஊத்த ஆரம்பித்துவிட்டனர். முதலில் இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முன்நின்று போராடியது ரசிகர்களுக்கு நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தியது தான். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அவரது இமேஜ் மொத்தமாக மாறிவிட்டது.

போட்டோஷூட்டில் குதித்தார்

போட்டோஷூட்டில் குதித்தார்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் அவர் செவிலியராக பணிபுரிந்து வந்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாக்களில் நடிப்பதையே விருப்பமாக கொண்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். சில திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்தும் இருக்கிறார். திரைப்படங்களில் இவரது கேரக்டர் அந்த அளவிற்கு பெரியதாக அமையவில்லை என்பதால் இந்த லாக்டோன் டைம்ல போட்டோ ஷூட் நடத்தி புது பட வாய்ப்புக்காக இணையதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

ரசிகர்கள் முகம் சுளிப்பு

ரசிகர்கள் முகம் சுளிப்பு

தற்போது இவருடைய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவருடைய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மட்டுமல்ல திரைப்படத்துறையினர், ஜூலியின் பிரண்ட்ஸ் கூட முகம் சுளிக்கிறார்கள். அந்த அளவிற்கு இவருடைய புகைப்படங்கள் இருக்கின்றன. நெட்டிசன்கள் பலரும் இவருடைய போட்டோக்களை வைத்து ட்ரோல் பண்ணி வீடியோக்களும் மீன்ஸ்களும் போட்டு வருகிறார்கள்.

இதெல்லாம் வேண்டாம்மா

இதெல்லாம் வேண்டாம்மா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் அக்கா அக்கா என்று கூப்பிடும் காயத்ரி ஜெயராமன் கூட இந்த மாதிரி புகைப்படங்கள் போடாதே இவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டாம் நீ நீயாக இருப்பதுதான் அழகு என்றும் டுவிட்டரில் கமெண்ட் போட்டு இருக்கிறார். அவர் தனது தோள்களில் மெழுகுவர்த்தி உருகி வழிந்து எரிந்து கொண்டிருப்பது போல போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறா. இதைப் பார்த்து பலரும் திகலடித்துப் போய் விட்டனர்.

தோளில் உருகிய மெழுகு

தோளில் உருகிய மெழுகு

அது மேக்கப்பா என்று பார்த்தால் முற்றிலுமே மெழுகை உருக வைத்து உடம்பில் வழியவிட்டு தோள்களிலும் கைகளிலும் மெழுகுவர்த்தி ஏரிவதுபோல போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகிப் போனார்கள். அதுவும் ஸ்லீவ்லெஸ் டிரஸ்ஸில் இவர் இப்படி பண்ணி இருப்பது உடல் அங்கங்களை காட்டுவதற்காக அல்லது எதற்காக இந்த ஒரு போட்டோ ஷூட் என்று ரசிகர்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.

மடிசார் சேலையில்

மடிசார் சேலையில்

அதுமட்டுமல்லாது மடிசார் சேலை கட்டிக் கொண்டும் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார் .மடிசார் சேலை கட்டி கொண்டு ஹாயாக ஆட்டோவில் போவது போலவும் கோவில்களில் சுற்றி வருவது போலவும் அங்கங்கே இந்த லாக்டோன் டைம்லயும் போட்டோஸ்கள் எடுத்து குவித்து வருகிறார். இவரை மடிசார் சேலையில் பார்ப்பதற்கு அப்படியே மடிசார் மாமியாக தான் தெரிகிறாராம் சில ரசிகர்களின் கண்களுக்கு.

நல்லா கலாய்க்கிறாங்களே

நல்லா கலாய்க்கிறாங்களே

சும்மா பேசினாலே ஜூலியை ட்ரோல் பண்ணி ரசிகர்கள் கமெண்டுகளை போடுவார்கள். ஆனால் தற்போது இவர் மெழுகுவர்த்தி ஃபோட்டோஷூட்டை பார்த்து ரசிகர்கள் விதவிதமாக கலாய்க்கிறார்கள். ஆனால் இவர்கள் கலாய்ப்பது கூட இவர்க்கு நல்லதுதானாம். தான் இந்த மாதிரி பேட் கமெண்ட்களுக்கு கொஞ்சம் கூட கவலை பட மாட்டேன் இவர்கள் என்னைப் பற்றி போடும் மீன்ஸ்களும் ட்ரோல் வீடியோக்களும் எனக்கு விளம்பரம்தான் என்று கூறியிருக்கிறார். என்னவோ போம்மா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+