மீண்டும் வைரலாகும் ஜூலி.. சொக்க வைக்கும் போட்டோஸ்.. மறுபடியும் கலக்கப் போறாரோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் புகழ் ஜூலி போட்டு வரும் புதுப் புது போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. மீண்டும் ஒரு ரவுண்டு வரப் போகிறாரோ என்ற விவாதத்தை இது ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர்களின் ஜூலியும் ஒருவ.ர் இந்த நிகழ்ச்சி சீசன் பல கடந்து சென்று கொண்டிருந்தாலும் சீசன் 1 ல் கலந்து கொண்டவர்களை யாரும் மறக்க முடியாது.

அந்த அளவிற்கு முதல் முதலில் இந்த நிகழ்ச்சி தொடங்கும் போது பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்தது. அதில் பல ஆதரவாளர்களையும் எதிர்ப்பாளர்களும் சம்பாதித்த ஜூலி தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலான போஸ்ட்களை போட்டு பிரபலமாகி வருகிறார்.

 நெகிழ வைக்கும் ஜூலி

நெகிழ வைக்கும் ஜூலி

எப்படி இருந்த ஜூலி இப்படி ஆகிவிட்டாரே என்று அனைவரும் ஆச்சரியமாக அவரை பார்த்து வருகிறார்கள். முதல் முதலில் இவர் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டம் நடந்த பொழுது இணையதளம் மூலம் முழுவதும் பேசப்பட்ட ஒரு செவிலியர் பெண்ணாக இருந்தார். அதன் பிறகு 2017 பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர் ஆக உள்ளே வந்தார்.

 ஈர்ப்பு அதிகம்

ஈர்ப்பு அதிகம்

இந்த வீட்டிற்குள் வந்ததும் இவர் மீது இருந்த நல்ல அபிப்ராயங்கள் படிப்படியாக குறைய ஆரம்பித்தது மக்களிடம். அந்த அளவுக்கு இவர் மாற்றி மாற்றி பேசி பலரின் எதிர்ப்புகளையும் சம்பாதித்து விட்டார். எல்லாமே செட்டப்தான் என்றாலும் கூட ஜூலி மீது மக்களுக்கு பெரும் வெறுப்பு வந்து விட்டது. இந்த நிகழ்ச்சியிலிருந்து இவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறிமாறி வந்தது.

 நடிகையாக மாறினார்

நடிகையாக மாறினார்

மேலும் கடைசி வரைக்கும் இவரால் அந்த வீட்டிற்குள் இருக்க முடியவில்லை. வீட்டிலிருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். ஆனாலும் ஜூலிக்கு இந்த நிகழ்ச்சி பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த பிறகு சில படங்களில் நடிக்கத் தொடங்கினார். அம்மன் தாயி, அனிதா பயோபிக் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் ஸ்ரீ இயக்கத்தில் 'பப்ஜி பொல்லாத உலகத்தில் பயங்கர கேம்' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

 ஜூலியின் கவனம்

ஜூலியின் கவனம்

நடிப்பை தொடங்கிய பிறகு இவர் தனது செவிலியர் பணியை விட்டு விட்டார். தற்போது முழு கவனத்தையும் நடிப்பில் செலுத்தி வருகிறார். ஷூட்டிங் இதுவரை நடக்காமல் முடங்கிப் போயுள்ளதால் போட்டோஷூட்களை அதிகம் நடத்தி வருகிறார் ஜூலி. இந்த போட்டோக்கள்தான் பிரபலமாகியுள்ளன தற்போது. சமீபத்தில் இவர் நடத்திய பிரைடல் போட்டோ சூட்டை அடுத்து இவருக்கு திருமணம் என்று செய்தி படு வைரலாக பரவியது.

 போட்டோஸ் கலக்கல்

போட்டோஸ் கலக்கல்

இவர் அது எனது திருமண போட்டோ அல்ல விளம்பர மாடலாக எடுத்தது என்று தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார். அதன்பிறகு கடற்கரையில் இவர் நடத்திய ஹாட் போட்டோசூட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படு ஸ்டைலாக மாறிய ஜூலி முழுநேரமாக தற்போது நடிப்பில் இறங்கி விட்டார். அதற்காக தன்னை முழுமையாக வருத்தியும் புகைப்படம் எடுக்கிறார்.

 உருக வைக்கும் போஸ்

உருக வைக்கும் போஸ்

சமீபத்தில் கூட தன் உடம்பில் மெழுகுவர்த்தி எரியவிட்டு போட்டோ ஷூட் நடத்தி இருந்தார். இது அனைவரையும் உருக வைத்து விட்டது. இப்படி ரிஸ்க் எடுக்கலாமா என பலரும் பாசத்துடன் கேட்டனர். இது பெரும் வைரலாக இன்ஸ்டாகிராமில் பரவி வந்தது. அந்த நேரத்தில் இவர் கூட பிக் பாஸ் வீட்டில் இருந்த காயத்ரி ரகுராம் இவருக்கு அறிவுரை கூறி ஒரு கமெண்டும் போட்டிருந்தார்.

 உடம்பு முக்கியமில்லையா

உடம்பு முக்கியமில்லையா

இந்த மாதிரி உனது உடம்பை வருத்தி தான் நீ முன்னேற வேண்டும் என்று இல்லை. உன்னுடைய அழகான திறமையால் நீ முன்னேறலாம் என்று அறிவுரை கூறியிருந்தார். அதை தொடர்ந்து மடிசார் மாமியாகவும் வேடம் போட்டு போட்டோ எடுத்துக் கலக்கியிருந்தார். இப்போது கடற்கரையில் போட்டோக்களை எடுத்து குவித்து வருகிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த ஜூலியா இது என்று ரசிகர்கள் வாயை பிளக்கும் அளவிற்கு இந்த போட்டோஸ்கள் இருக்கிறது இதுவும் வைரலாக பரவி வருகிறது.

 கெஸ்ட்டாக வருவாரா

கெஸ்ட்டாக வருவாரா

லாக்டவுன் படிப்படியாக தளர்ந்து வருகிறது. சினிமா ஷூட்டிங் நடத்தவும் கூட நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்து விட்டனர். எனவே விரைவில் படப்பிடிப்புகள் தொடங்கப் போகின்றன. ஜூலியும் கூட விரைவில் புதுப் புதுப் படங்களில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடவே பிக் பாஸ் அடுத்த சீசனும் தொடங்கப் போகிறது. அதில் ஜூலி கெஸ்ட்டாக என்ட்ரி கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பும் சூப்பராக இருக்கிறது. பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+