ஆச்சரியத்தை கிளப்பிய லாஸ்லியா.. எப்படி உடம்பை குறைச்சாங்க தெரியுமா? பிக் பாஸ் வீடுன்னா சும்மாவா?
சென்னை: பிக்பாஸ் புகழ் லாஸ்லியா உடல் எடை குறைத்துள்ள நிலையில், பலரது கவனத்தையும் பெற்று வருகிறார்.. உடல் எடையை குறைத்ததற்கான காரணத்தையும், அதற்காக மேற்கொண்ட பயிற்சிகளை பற்றியும் பேட்டி ஒன்றில் விலாவரியாக சொல்லி உள்ளார்.
ஜம்ப் கட்ஸ் யூடியூப் சேனலின் மூலம் தனது ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் ஹரி பாஸ்கர், தற்போது மிஸ்டர் ஹவுஸ் கீபிங் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.. இந்த படத்தில் ஹரி பாஸ்கருக்கு கதாநாயகியாக லாஸ்லியா நடித்துள்ளார். இப்படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

விரைவில் வெளியீடு: படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்தவகையில், திரைப்படம் வரும் ஜனவரி 24ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், Miss Wow Tamizha யூடியூப் சேனலுக்கு லாஸ்லியா பேட்டி ஒன்றை தந்துள்ளார்..
அந்த பேட்டியில் அவர் சொல்லும்போது, "இந்த படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. உடனே ஓகே சொல்லிட்டேன்.. அப்பறம் இந்த படத்துக்காக ரிகர்சல் செய்யும்போதே, எனக்கு இன்னும் கூடஅதிக நம்பிக்கையை இந்த படம் தந்தது.. ஒரு ஃபீல்குட் படம் போல இருக்கும்.. இந்த படத்தில் முழுமையாக நான் பங்களித்திருப்பதால், எனக்கு மிகவும் மகிழ்ச்சியா இருக்கு..
எனக்கு சினிமாவில் கைடு செய்ய யாரும் இல்லை.. அதனால் எல்லாமே என்னுடைய சொந்த முயற்சியில்தான் முடிவெடுத்துவருகிறேன். அதனால்தான், அவசரப்படாமல் மெதுவாகவே ஒவ்வொரு படங்களின் கதையை கேட்டு தேர்ந்தெடுக்கிறேன்.
காய்கறிகள்: நான் இலங்கையில் வேலைக்கு போனபோது, 50 கிலோ வெயிட் இருந்தேன்.. ரொம்ப காலமாகவே என்னுடைய வெயிட் 50 கிலோதான் இருந்தது.. அதுக்கப்பறம் எனக்கு சாப்பாடு, வாழ்க்கைமுறை எல்லாமே மாறிடுச்சு.. வேலை அதிகமாகிவிட்டது.. இதனால் வீட்டில் சமைக்க முடிவதில்லை. எனக்கு சமைக்கவும் தெரியாது. வெளியிலேயே சாப்பிட வேண்டிய சூழல் வந்துவிட்டது. கடைசியில் 75 கிலோ வரை வந்துவிட்டேன்.
பிக்பாஸ் வீட்டிற்கு போகும்போது நான் 63 கிலோ இருந்திருப்பேன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதன்முறையாக சென்னைக்கு வந்தேன்.. புதிய நாட்டிற்கு வந்ததால், எனக்கு இங்குள்ள சாப்பாட்டு முறை தெரியவில்லை. காலையில் டிபனுக்கு பொங்கல் தருவதெல்லாம் எனக்கு புதுசாக இருந்தது.
தயிர் சர்க்கரை: பிக் பாஸ் வீட்டில் பெரும்பாலும், ஒயிட்ரைஸ், கோவைக்காய் பொரியல்தான் அதிகமாக இருந்தது. எனக்கு இலங்கையில் நாலஞ்சு காய்கறிகள், நான்வெஜ் இதெல்லாம் வைத்து சாப்பிட்டு பழக்கம். அதனால் பிக்பாஸ் வீட்டில் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் அங்கே குறைகளை சொல்லக்கூடாது. அதனால் அடிக்கடி தயிரில் சர்க்கரை போட்டு சாப்பிடுவேன், எப்போதாவது கேக் வரும்.. அதை சாப்பிட்டுக் கொள்வேன்
கடைசியில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வரும்போது 69 கிலோ ஆயிட்டேன்.. அதிகமாக வெயிட் போட்டதால் முகத்திலும் பருக்கள் வந்துவிட்டன. என்னுடைய டிரஸ்களையும் போட முடியாதபடி வெயிட் போட்டுவிட்டேன்.. இதுக்கு மேலயும் வெயிட் போடக்கூடாது என்று முடிவெடுத்தேன்.. அதுக்கப்பறம்தான், டயட், உடற்பயிற்சியில் இறங்கினேன். என்னுடைய ஜிம் கோச், எனக்கு நிறைய ஐடியாக்களை தந்தார். சிறப்பாக கைடு செய்தார்..
நார்ச்சத்துக்கள்: வாரம் 5 நாள் ஜிம் போவேன்.. சர்க்கரை முழுமையாக அவாய்ட் பண்ணிட்டேன்.. டீப் ஃப்ரை தவிர்த்துவிட்டேன். கார்போ ஹைட்ரேட் குறைத்து கொண்டேன். ஆனால்,புரோட்டீனும், காய்கறிகள் நிறைந்த நார்ச்சத்துக்களும் அதிகமாக சேர்த்து கொண்டேன்.. மாலை 6 மணிக்கு பிறகு சாப்பிடுவதையும் குறைத்து கொண்டேன். எந்த ஹெல்த் டிரிங்கும் குடிப்பதில்லை.. நார்மல் சாப்பாடுதான், அதுக்காக முழு பட்டினி எல்லாம் கிடையாது" என தெரிவித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications