காட்டுக்குள்ளே தோழிகளோடு பிக் பாஸ் மகேஸ்வரி..கூடவே அந்த ஆண் நண்பரும்.. பீல் பண்ணும் பிரபலம்
சென்னை: சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகை மகேஸ்வரி தன்னுடைய தோழிகளோடு சுற்றுலா சென்ற புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டாலும் நாங்கள் நண்பர்கள் என்று மகேஸ்வரி ரட்சிதா,ஷிவின், மூவரும் காட்டுக்குள்ளே இயற்கையை ரசித்து என்ஜாய் பண்ணுகிறார்கள்.
கூடவே ஏடிகே இவர்களோடு சேர்ந்து எடுத்த புகைப்படம் வெளியான நிலையில் தற்போது அதிகமான கருத்துக்களும் குவிந்து வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த பல பிரபலங்கள் ஒன்றாக தற்போது வெயிலுக்கு இதமாக காட்டுக்குள்ளே இயற்கையை ரசித்து கொண்டாடி மகிழ்திருக்கின்றனர். அதை புகைப்படங்களாகவும் வெளியிட்டு இருக்கின்றனர். அதுதான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதுவரைக்கும் ஒளிபரப்பான சீசன்களை விடவும் தற்போது முடிவடைந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி பல சண்டை சச்சரவுகளையும் பிரச்சனைகளையும் ஏற்படுத்திய நிகழ்ச்சியாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் ஆரம்பமான முதல் நாளில் இருந்தே கடைசி நாள் வரைக்கும் பல சண்டைகளிலும் விவாதங்களிலும் தான் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் சண்டை சச்சரவுகள் அடிக்கடி இருக்கும் சில நேரங்களில் நட்பு, பாசம், காதல் என பல கலவைகளும் இருக்கும். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நீ யாரோ நான் யாரோ என்று பலர் நடந்து கொள்வார்கள். ஆனால் இந்த ஆறாவது சீசனில் கலந்து கொண்ட மகேஸ்வரி ஷிவின், ரட்சிதா ,ஏடிகே விக்ரமன் போன்றோர் எப்போதும் ஒரு கூட்டமாக அணியாக தான் சேர்ந்து பழகி வருகிறார்கள்.
இந்த நிகழ்ச்சிக்குள் இருக்கும்போது இவர்களுக்குள் கூட பல நேரங்களில் கருத்து வேறுபாடுகளும் சண்டைகளும் ஏற்பட்டது. ஆனால் இப்போது இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் அடிக்கடி வெளியிடங்களுக்கு ஒன்றாக சென்று என்ஜாய் பண்ணி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் காட்டுக்குள்ளே மகேஸ்வரி,ஷிவின், ரட்சிதா, ஏடிகே என 4 பெரும் எடுத்த புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்த பதிவிற்கு ஷெரின் நான் உங்களை மிஸ் பண்ணுகிறேன் என்று ஃபீல் பண்ணி கருத்து வெளியிட்டு இருக்கிறார். அதைத்தொடர்ந்து அதிகமான ரசிகர்கள் இவர்கள் கூட்டத்தில் விக்ரமன் மட்டும் இப்போ மிஸ் ஆகிவிட்டாரே? அவர் எங்கே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இந்த புகைப்படங்கள் அதிகமாக பரவி வருகிறது.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications