ஒரு சாதம் வடிச்சதுக்கா இம்புட்டு சண்டை.. நெத்தியிலேயே குத்திய சனம் ஷெட்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு சாதம் வடிச்சதுக்கு இவ்வளவு பெரிய சண்டையா... சனம் ஷெட்டி ப்ரோமோல வரதுக்காக இந்த அளவுக்கு கோபப்படுகிறா இல்ல இவருக்கு இந்த மாதிரிதான் கண்டெண்ட் கொடுத்திருக்கா .

இவ்வளவு நாளா நல்லா பேசிகிட்டு இருந்த சனம் இப்போ நான் மேக்கப் போட்டுக்கிட்டு சமைக்க வர வரைக்கும் நீங்க காத்துக்கிட்டு இருக்க வேண்டியதுதானே எதனால் இப்படி சமைச்சிங்க நீங்க என்று ரேகாவிடம் படுபயங்கரமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.

அவருடன் ரம்யா பாண்டியனும் சேர்ந்துகொண்டு சண்டையில் குதிக்கவே, ஜெனீபர் டீச்சர்.. அதாங்க ரேகா பாவம் டென்ஷனாகிப் போய் விட்டார். கடைசியில் அவரையும் கத்த வைத்து விட்டனர்.

தலையிலேயே குத்திய சனம்

தலையிலேயே குத்திய சனம்

இதில் ஹைலைட் என்னவென்றால் ரசிகர்கள் தலையில் அடித்துக் கொண்டிருப்பது தெரியாமல் சனம் தனது தலையில் அடித்துக் கொண்டிருக்கிறார். எல்லா சீசன்களிலும் இதே கிச்சன் சன்டையை முதலில் ஆரம்பித்து வைத்ததுதான் இந்த பிக் பாஸ் இன் ராசியா அல்லது கண்டன்டா என்று தெரியாமல் பல ரசிகர்களும் எதற்காக இப்படி கிச்சனிலிருந்து எல்லா சீசனுக்கும் முதலில் சண்டையை ஆரம்பிக்கிறீர்கள் என்று கேட்டு வருகிறார்கள்.

காதலைக் காணோமேய்யா

காதலைக் காணோமேய்யா

ப்ரோமோ வெளியிட்ட கொஞ்ச நேரத்திலே ரசிகர்கள் கமெண்ட் மழைகளை பொழிந்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் சனம் ஷெட்டி நிகழ்ச்சி ஆரம்பித்த அன்று இருந்ததற்கும் இப்ப இருக்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்து பலர் மீம்ஸ் கிரியேட் பண்ணி கலாய்ச்சு கொண்டிருக்கிறார்கள். சனம் தான் ப்ரோமோ வில் வருவதற்காக இந்த மாதிரி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் பல ரசிகர்கள் எல்லா சீசன் களிலும் ஒரு காதல் கதையை வைத்து இருப்பார்கள் .ஆனால் இந்த சீசனில் முழுக்க முழுக்க சண்டை சீன்கள் மட்டும்தான் வைத்திருக்கிறீர்களா.

3 நாள் கூட முடியலையே

3 நாள் கூட முடியலையே

மூன்று நாள் கூட முழுசா உன்னால நடிக்க முடியல, இந்தா சாயம் வெளுத்துருச்சுல. செல்ல குட்டி, தங்க குட்டின்னுல்லாம்..... கொஞ்சுனது எல்லாம் சும்மா தானா என்று பலர் சனம் ஷெட்டியை கலாய்த்து வருகின்றனர். அதிலும் சிலர் இப்ப ரேகாவும் ஆரம்பிச்சுடுச்சா. நேத்து வரைக்கும் பொறுமையா சண்டைக்கு தீர்ப்பு சொல்லிக்கிட்டு இருந்த நீங்களுமா இப்படி என்ன இதெல்லாம் என்றும் வடிவேலு பாணியில் கலாய்த்து வருகிறார்கள்.அதிலேயும் சில ரசிகர்களுக்கு சந்தேகம் வந்திருக்கிறது.

சட்டி வச்சுதானே சமைக்கணும்

சட்டி வச்சுதானே சமைக்கணும்

வீட்டில 6 பேர் இருந்தாலே ஒரு படி அரிசி க்கு மேல் சாப்பாடு ஆக்கணும். இந்த பிக் பாஸ் வீட்டில் 15 பேர் இருக்காங்க அவங்களுக்கு ஒரு பெரிய பிரியாணி சட்டியை வைத்து தான் சமைக்கனும். ஆனா இதுவரைக்கும் ஒரு நாள் கூட அப்படி பார்த்ததே இல்லையே. சின்னதா ஒரு தவாவில் கிண்டி கிட்டு இருக்கீங்க. அதுக்கு ஒரு சண்டை இதை விளக்குவதற்கு ஒரு தலைவர் . இதுல நான்தான் கேப்டன் நான்தான் கேப்டன் என்று சண்டையும் வேறயா என்றும் கலாய்க்கிறார்கள்.

அனிதா கப்சிப்பாகிட்டாரே

அனிதா கப்சிப்பாகிட்டாரே

அதிலேயும் சிலர் நேத்துவரைக்கும் நடந்த அனிதா சுரேஷ் சண்டையில் கூட லாஜிக் இல்லனாலும் ரசிக்கிற மாதிரி இருந்துச்சு. இது என்ன இப்படி இழுத்துக்கிட்டே இருக்கிறது என்றும் கலாய்க்கிறார்கள். அதிலயும் பலர் ரேகாவிற்கு தான் நல்லபடியாக சப்போர்ட் பண்ணி கொண்டிருக்கிறார்கள்.இவர் தமிழ் சினிமாவுல எவ்வளவு நல்ல படங்களை தந்தவர் . கமல் ரஜினி இன்னும் பலரோடு சேர்ந்து நல்ல படங்கள் கொடுத்தவங்க. எதுக்கு உங்களுக்கு இந்த பிக்பாஸ் எல்லாம் என்று கேட்கிறார்கள்.

இதெல்லாம் தேவையா ஜெனீபர் டீச்சர்!

இதெல்லாம் தேவையா ஜெனீபர் டீச்சர்!

ஏன் இப்படியெல்லாம் அசிங்கப்படனும். உங்களுக்கு என்ன தேவை நீங்க எவ்வளவு பொறுமை யா இருக்கீங்க. உங்க வயசுக்கு, சனம் போன்ற நாலஞ்சு மாடலிங் மட்டுமே செஞ்சவங்க கூட எல்லாம் உங்களுக்கு என்ன பேச்சு. இப்பதான் புரியுது தர்ஷன் - சனம் ஷெட்டியை ஏன் விட்டு விட்டு போனான் என்று என்று பலர் ரேகாவிற்கு சப்போர்ட் பண்ணி கொண்டு இருக்கிறார்கள். எப்படியோ பொழப்பு ஓடிட்டிருக்குங்க பிக் பாஸ் வீட்டுல இப்படியே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+