பிக்பாஸ் வீட்டில் தீபக்.. பட்ட பாடெல்லாம் வீண் போகல.. இவரிடம் இப்படி ஒரு மேட்டரா? வாவ்: Bigg Boss 8
சென்னை: பிக்பாஸ் சீசன் 8 தொடங்கியிருக்கும் நிலையில், போட்டியாளராக வீட்டிற்குள் சென்றிருக்கிறார் தீபக்.. இதையடுத்து, தீபக் மீதான எதிர்பார்ப்பும், ஆர்வமும் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், சக போட்டியாளர்களுக்கும் ஆரம்பமாகியிருக்கிறது. இதற்கு என்ன காரணம்?
இந்த முறை பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் யார்? என்ற ஆர்வம் கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாகவே இணையத்தில் வலம்வந்தபோது, அதில், தீபக்கின் பெயரும் தவறாமல் இடம்பெற்று வந்தது.

போட்டியாளர்களின் லிஸ்ட் தினம் தினம் மாறியபோதும்கூட, தீபக்கின் பெயர் மட்டும் அந்த லிஸ்ட்டிலில் மாறவே இல்லை. இதற்கு காரணம், இதற்கு முந்தைய சீசன்களிலேயே கலந்து கொண்டிருக்க வேண்டியவர் தீபக் தான் என்கிறார்கள்..
ஹீரோ: தீபக்கை பொறுத்தவரை, விஜய் டிவியின் பிரபலமாக தற்போது அறியப்பட்டு வருகிறார்.. விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ஹீரோவாக, போட்டியாளராக உள்ளே நுழைந்துள்ளார் என்றாலும், தீபக்கின் சின்னத்திரை பயணம் நீண்ட நெடியதாகும்.
ஆரம்ப கால விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்தவர் தீபக்.. சிவகார்த்திகேயன் விஜய் டிவிக்கு வருவதற்கு முன்பிருந்தே, விஜய் டிவியில் தனக்கென ரசிகர்களை சம்பாதித்தவர் தீபக்... எந்தவித நிகழ்ச்சியானாலும்சரி, போட்டியாளர்கள், நடுவர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரின் ஆதரவை பெறும் அளவுக்கு, அந்த நிகழ்ச்சியை திறன்பட நடத்தி காட்டியவர் தீபக்.
தொகுப்பாளர்: இவர் மீது பெரிதாக எந்தவிதமான விமர்சனமும் இதுவரை வந்ததில்லை. தன்னை ஒரு தொகுப்பாளராக மெய்ப்பிக்க, ஆரம்ப காலத்தில் தீபக் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமில்லை.. ஒரு தொகுப்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டதுடன், சின்னத்திரையில் தொகுப்பாளர்களுக்கென தனி மரியாதையை மக்களிடம் நேரடியாக பெற்றவர்,
விஜய் டிவி, சன் டிவி என சீரியல்களில் வரிசையாக நடித்து, இல்லத்தரசிகளின் அபிமானத்தை அபரிமிதமாக பெற்றவர் தீபக். சினிமாவில் டப்பிங்கையும் இவர் விட்டுவைக்கவில்லை.. இன்னும் ஒருபடி மேலே சென்று, "தண்ணில கண்டம்" படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார்.. இப்படி, தொகுப்பாளர், சீரியல் நடிகர், ஹீரோ, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என அனைத்து தளத்திலும் தன்னை ஐக்கியப்படுத்தி கொண்டவர் தீபக். இதனால், மற்றவர்களைவிட, தீபக்குக்கான ரசிகர் கூட்டம் சற்று அதிகம் என்றே சொல்லலாம்.
அட்வைஸ்: அதுமட்டுமல்ல, சிவகார்த்திகேயன் இவரிடம் ஒருமுறை டிவி சான்ஸ் கேட்டபோது, டிவியைவிட சினிமாவில் முயற்சி செய்யும்படி அட்வைஸ் தந்தாராம்.. தீபக் தந்திருந்த இந்த அட்வைஸை இன்றுவரை சிவகார்த்திகேயன் மறக்கவில்லையாம்.. அந்தவகையில், சிவகார்த்திகேயன் ஆதரவு தீபக்குக்கு எப்போதுமே உள்ளதாக சொல்கிறார்கள்.. அதேபோல, நடிகர் விஜய், சஞ்சீவிற்கு நெருங்கிய நண்பராகவும் இருப்பவர் தீபக்.
இதுவரை, யாரையும் துளியும் காயப்படுத்தாமல், யார் மனதையும் நோகடிக்காமல், கடந்த 20 வருடங்களாகவே சின்னத்திரையில் முத்திரை பதித்து வரும் தீபக், இப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.. இதையடுத்து, சிவகார்த்திகேயன், விஜய், ரசிகர்கள் மட்டுமல்லாமல், விஜய் டிவி, சன் டிவி குடும்ப நேயர்களின் ஆதரவும் தீபக்குக்கு அதிகமாகவே கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
போட்டி இருக்குமா: பிக்பாஸ் வீட்டிற்குள் தற்போது, இவர் சீனியராக கருதப்பட்டாலும், இன்றும்கூட அதே இளமையும், துடிப்பும் நிறைந்து காணப்படுவதால், சக இளம் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுப்பார் என்றும் நம்பப்படுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம்












Click it and Unblock the Notifications