அத்துப்படி ரவீந்தர்.. பிக்பாஸ் வீட்டில் அத்தனையும் அசால்ட்டு.. இந்தா ஆரம்பிச்சிட்டாரு.. Bigg Boss 8

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இன்று ஆரம்பமாகி உள்ளது.. முதல் போட்டியாளராக வீட்டிற்குள் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் நுழைந்துள்ளார்.. இதையடுத்து, ரவீந்தர் மீதான எதிர்பார்ப்பும், ஆர்வமும் அந்த நொடியே பிக்பாஸ் ரசிகர்களிடம் தொற்றிக் கொண்டுவிட்டது. இதற்கு என்ன காரணம்?

இந்த முறை பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் என்ற குழப்பம் இன்றைய தினம் வரை நீடித்தபடியே இருந்தது.. பல்வேறு யூகங்கள், எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஒருவழியாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது. முதல் போட்டியாளராக ரவீந்தர் வீட்டிற்குள் அழைக்கப்பட்டுள்ளார்.. இவர் பெயரை சொன்னதுமே, பலத்த கைகளை தட்டி ரசிகர்கள் உற்சாகப்படுத்தினார்கள்.

bigg boss season 8 ravinder chandrasekhar ravinder 8

இணையவாசிகள்: ஃபேட்மேன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் ரவீந்தர் சந்திரசேகர்.. சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.. பிரபலமான சினிமா தயாரிப்பாளர்.. நடுநிலையான திரை விமர்சகர்..

இது எல்லாவற்றையும்விட பிக்பாஸ் சீசனை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து அலசியதன் மூலம், மக்களின் கவனத்தை தன்பால் ஈர்த்தவர்.. கடந்த பிக்பாஸ் சீசன்களில், ஒவ்வொரு நாள் நிகழ்ச்சி முடியும்போதும், நெட்டிசன்கள் அதிகமாக எதிர்பார்ப்பது, ரவீந்தரின் துணிச்சலான விமர்சனத்தைதான்.

விமர்சனங்கள்: பெரும்பாலும் இவரது விமர்சனங்கள் நடுநிலையானவை.. யார் மீது தவறு என்பதை வெளிப்படையாகவே போட்டு உடைப்பவர்.. கமல் மீது ஏதாவது எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும், அதையே ஓபனாகவே சொல்லிவிடுபவர். இதனால் இவரது விமர்சனங்களுக்கு மக்கள் மத்தியில் தனி கிரேஸ் இருக்கவே செய்தது.. இப்போது இவரே ஒரு பிக்பாஸ் போட்டியாளராக உள்ளே நுழைந்திருப்பது மிகப்பெரிய ஆர்வத்தை ரவீந்தர் மீது ஏற்படுத்தியிருக்கிறது.

மகாலட்சுமியை திருமணம் செய்து பரபரப்பு தந்தது முதல், 16 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் கைதாகி சிறைசென்றது வரை, ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு சொந்தக்காரராக ரவீந்தர் திகழ்ந்து வருகிறார்... இப்போது, ரூ.5 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை ரவீந்தர் செலுத்த வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு பிறகுதான் பிக்பாஸ் போட்டியாளராக இவரது பெயரும் அடிபட துவங்கியது.

ரவீந்தர்: கடந்த சீசன்களிலேயே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டாராம்.. ரவீந்தருக்கான இருக்கை மற்றும் படுக்கை என்பவற்றை நிகழ்ச்சி நிர்வாகம் மாற்றுவதாக கூறியும் அதில் கலந்து கொள்ள விருப்பமில்லை என்று ரவீந்தர் சொல்லிவிட்டாராம்.. இதை அவரே பல பேட்டிகளில் சொல்லியிருந்தார். இந்த முறை, பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்..

இந்த வீட்டின் அத்தனை நெளிவு சுளிவுகளும் ரவீந்தருக்கு அத்துப்படியாகும்.. அந்தவகையில், "ஸ்டேட்டர்ஜி" என்ற விளையாட்டின் சூட்சுமத்தை ரவீந்தர் நிச்சயம் கையிலெடுக்கவே செய்வார்.. அத்துடன் பிறரது வியூகத்தையும் தரைமட்டமாக்கும் சூட்சுமத்தையும் ரவீந்தர் அறிந்தே வைத்திருப்பார்.. எனவே, இந்த போட்டியின் "ஸ்ட்ராங்" போட்டியாளராகவே ரவீந்தர் கருதப்படுகிறார்...


எகிறும் ஆர்வம்:
அதுமட்டுமல்ல, பிக்பாஸ் போட்டியாளர்களை கடுமையாக விமர்சித்த ரவீந்தரை இந்த சீசனில் விமர்சகர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.. எனினும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு "கன்டென்ட்" கொடுப்பதில் கில்லாடியாக ரவீந்தர் இருக்கக்கூடும் என்பதால், இவரை பிற போட்டியாளர்கள் எப்படி சமாளிக்க போகிறார்கள்? என்ற ஆர்வமும் அதிகரித்துள்ளது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

நல்ல வருமானம்: முன்னதாக வீட்டிற்குள் முதல் போட்டியாளராக ரவீந்தரை வரவேற்ற விஜய் சேதுபதி, "நீங்க பிக்பாஸ் நல்லா ரிவ்யூ பண்ணுவீங்கன்னு கேள்விப்பட்டேன்? எத்தனை வருஷமா பண்றீங்க? நல்ல வருமானம் போலயே? என்று கேட்டார்.. அதற்கு சிரித்துக்கொண்டே ரவீந்தர், ஏழு வருஷமாக பிக்பாஸ் ரிவ்யூ பண்ணிட்டு இருக்கேன் சார்.. நல்ல வருமானம்தான்.. நான் ரிவ்யூ பண்ண கன்டஸ்டஸ்ட் எல்லாம், எப்போது நான் பிக்பாஸ் உள்ளே போவேன்ன்னு காத்திருக்கிறார்கள்.. அது இப்போது நடந்துள்ளது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+