Bigg Boss 9: பிக் பாஸ் வீட்டுக்கு இவரும் வர்றாரா? சம்பளத்தை ஏற்றி.. ரூ.75 கோடிக்கு போன விஜய் சேதுபதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் 9ம் சீசனின் ப்ரோமோ வெளியான நிலையில், அதற்கான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.. இன்றைய தினம் யார் யார் போட்டியாளர்களாக வரப்போகிறார்கள் என்று தெரியவில்லை.. விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சீசனில் அதிகம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருக்கும் பலர் தான் போட்டியாளர்களாக களம் இறங்க போவதாகவும் சொல்கிறார்கள்.. இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, பிக்பாஸ் விஜய் சேதுபதி குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "செப்டம்பர் 5 முதல் பிக்பாஸ் ஆரம்பமாக போகிறது.. 3 மாதத்துக்கு இனிமேல் பிக்பாஸ்தான்.. பரபரப்பாக பார்க்கக்கூடிய ரியாலிட்டி ஷோ-வாக உள்ளது பிக்பாஸ்.. பெண்கள் அதிகளவு இந்த நிகழ்ச்சியில் கனெக்ட் ஆகியிருக்கிறார்கள்.. முதல் பிக்பாஸ் பெரிய அளவு எதிர்பார்ப்பை தந்தது..

Television Bigg Boss season 9 vijay sethupathi 9


ஹீரோக்கள்

இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று அல்லது தோற்று வெளியே வந்தவர்கள், ரியல் வாழ்க்கையில் மிகபெரிய ஹீரோவாக வளர்ந்ததில்லை..

சரவணன், சேரன், பரணி, சினேகன், ஸ்ரீ போன்றோர் எல்லாம் சர்ச்சைகள், பரபரப்புகளை தந்தவர்கள்.. சுவர் ஏறி குதித்து ஓரிரு நாளிலேயே ஓடினார்கள்.. ஒருசிலர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்றே செட் ஆனவர்கள், உதாரணத்துக்கு வனிதாவை சொல்லலாம்.
ஜூலி, பிரியங்கா, வனிதா போன்றோர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கேற்றவாறு நடந்து கொள்வார்கள்.. புரட்சி பெண் ஜூலி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று வந்தபிறகு சாதாரண ஜூலியாகிவிட்டார்.

இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் 7 ஷோ-க்களை தொகுத்து வழங்கினார்.. அனைவருமே கமலை ரசித்தனர்.. மூத்த நடிகர், ஆளுமையுடன், அரசியலுடன், படித்த விஷங்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.. அதிலும் அவரது காஸ்ட்யூம் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது..

8வது சீசன்

பிறகு ரம்யா கிருஷ்ணன், சிம்பு போன்றோரை நிகழ்ச்சி தொகுக்க கொண்டுவந்தும் பலனில்லை.. 8வது சீசன் விஜய் சேதுபதியை உள்ளே கொண்டுவந்தார்கள்..
ஆரம்பத்தில் நிறைய விமர்சனங்கள் இருந்தது.. போக போக விஜய் சேதுபதியுடன் ரசிகர்கள் கனெக்ட் ஆகிவிட்டார்கள்.. 7வது டீசரைவிட, 8வது டீசருக்கான டிஆர்பி பாயிண்ட் அதிகமாக தற்போது கிடைத்துள்ளது.. மீண்டும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்..

கமல் இடத்தில் விஜய் சேதுபதி பொருந்தியிருக்கிறாரா? என்று பலரும் கேட்கிறார்கள்.. கமல் போட்டியாளர்களிடம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல பேசுவார் என்றால், விஜய் சேதுபதி ஊசியில் வாழைப்பழத்தை ஏற்றும்படி பேசுகிறார்..

கமல் vs விஜய் சேதுபதி

கமல் என்றாலே போட்டியாளர்களுக்கு ஒரு மரியாதை இருந்தது.. ஆனால், விஜய் சேதுபதியிடம் ஃப்ரெண்ட்லியாக இருக்கிறார்கள்.. கமலின் வெரைட்டி வேறு மாதிரி இருந்தது, விஜய் சேதுபதி வெரைட்டி வேறு மாதிரி செய்கிறார்..

யார் யாரெல்லாம் பிக்பாஸ் போட்டியாளராக போனால் நன்றாக இருக்கும் என்று ஒரு அலசல் இணையத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது..

அதில் முதலாவதாக அடிபடும் பெயர் மாதம்பட்டி ரங்கராஜ்.. இவரை முதலில் 100 நாள் பிக்பாஸ் வீட்டில் அடைத்து வையுங்க என்று பலரும் ஜாலியாக கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.. அதுவும் இல்லாமல், பிக்பாஸ் வீட்டிற்குள் மாதம்பட்டி சென்றால், அனைவருக்கும் விதவிதமாக சமைத்து போடுவார்.. இதனால வீட்டிற்குள் ருசியான சாப்பாட்டுக்கு பஞ்சமிருக்காது என்கிறார்கள். ஆனால் எத்தனை கோடி தந்தாலும் பிக்பாஸுக்கு வர வாய்ப்பில்லை.

அதேபோல, வாட்டர் மெலன் திவாகரை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்புங்களேன் என்று கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.. அதேசமயம், திவாகரை உள்ளே அனுப்பினால், மற்ற 15 பேரும் வீட்டைவிட்டு வெளியே வந்துவிட வேண்டியதுதான் என்றும் கிண்டலடித்து வருகிறார்கள்.


சம்பளம் என்ன

இந்த முறை நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்போவதாக சொல்கிறார்கள்.. இதுவரை விஜய் சேதுபதி 15 கோடி ரூபாய் வாங்கி கொண்டிருந்தார்.. மகாராஜா வெற்றிக்கு பிறகு 18 கோடி ரூபாயாக மாற்றினார். இப்போது தலைவன் தலைவி வெற்றிக்கு பிறகு 25 கோடி ரூபாய்..

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் ஒருநாள் அதாவது சனிக்கிழமை மட்டுமே ஷூட் நடக்கும்.. இதனை சனி, ஞாயிறு இரு தினங்களுக்கு பிரித்து நிகழ்ச்சிகளை போடுவார்கள்.. அந்தவகையில், 100 நாள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, விஜய் சேதுபதிக்கு 75 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது.. இந்த சம்பளம் வேண்டும் என்று விஜய் சேதுபதிதான் கேட்டு பெற்றுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+