ஆட்டத்தை கலைத்தாடுகிறதா விஜய் டிவி? நாளை பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பம்.. இப்ப இதென்ன புதுஸ்ஸா? ஆஹா
சென்னை: நாளை பிக்பாஸ் துவங்க உள்ள நிலையில், இப்போதுவரை போட்டியாளர்கள் யார் என்பது உறுதியாக தெரியவில்லை.. அதேசமயம், போட்டியாளர்கள் யார் என்ற அனுமானங்களும், யூகங்களும் இன்னமும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இதோ ஒரு லிஸ்ட் வந்துள்ளது.
பிக்பாஸ் சீசன் துவங்க இன்னும் ஒரு நாள்தான் உள்ளது.. இன்றைய தினமும் போட்டியாளர்கள் லிஸ்ட் ஒன்று வெளியாகி கொண்டிருப்பதால், யார்தான் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய போகிறார்கள் என்ற குழப்பம் இன்னமும் நீடித்து கொண்டே வருகிறது.

நேற்றுமுன்தினம்கூட, 14 போட்டியாளர்கள் இவர்கள்தான் என்று ஒரு லிஸ்ட் வெளியாகியிருந்தது.. அதில், நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன், சௌந்தர்யா நஞ்சுண்டன், கோகுல்நாத் , விடிவி கணேஷ், அன்ஷிதா, விஜே விஷால், அன்பு, டி.எஸ்.கே, தர்ஷிகா, சுனிதா, சாச்னா, பால் டப்பா, தர்ஷா குப்தா, அர்னவ் போன்றோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக செய்திகள் கசிந்தன.
குக் வித் கோமாளி: ஆனால், வழக்கத்துக்கு மாறாக, குக் வித் கோமாளி பிரபலங்கள், இந்த முறை அதிகம் பேர் பங்கேற்க போவதாக தகவல்கள் பரபரத்து வருகின்றன.. குறிப்பாக மணிமேகலை - பிரியங்கா விவகாரத்துக்கு பிறகு, இந்த தகவல் தீயாய் வலம் வருகிறது.. அந்தவகையில், தர்ஷா குப்தா, விஜே விஷால், மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சஞ்சனா, ஜோயா, டிடிஎஃப் வாசன், அன்ஷிதா, அர்ணவ், கார்த்திக் குமார் போன்றோர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாம்.
இப்போது லேட்டஸ்ட்டாக லிஸ்ட் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில், பாடகர் பால் டப்பா, மாடல் அழகி சௌந்தர்யா, நடிகர் ரஞ்சித், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன், நடிகை சஞ்சனா உள்ளிட்டோர் கலந்து கொள்ள போவதாக தெரிகிறது.
பிரபலங்கள்: ஆனால் மிச்சம் உள்ள அனைவருமே விஜய் டிவி பிரபலங்கள்தானாம்.. ஷாலின் ஜோயா தர்ஷா குப்தா, அன்சிதா, சந்தோஷ பிரதாப், ஆகியோர் குக் வித் கோமாளியில் கலந்து கொண்டவர்கள் ஆவர்.. தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நாயகி பவித்ரா ஜனனி, தொகுப்பாளர் ஜாக்குலின், பாக்கியலட்சுமி சீரியல் விஜே விஷால், பாரதி கண்ணம்மா ஹீரோ அருண் பிரசாத், தமிழும் சரஸ்வதியும் தீபக், கோகுல்நாத், செல்லமா சீரியல் அர்னவ் போன்றோர்கள்தான் இந்த முறை கலந்து கொள்ள போகிறார்களாம்.
முதலில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஒன்றிரண்டு பேர், பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய போவதாக சொன்னார்கள்.. ஆனால், இப்போது விஜய் டிவியின் பிரபலங்களே, பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய போவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.. முன்பெல்லாம் ஒன்றிரண்டு பேர் மட்டுமே, விஜய் டிவி சார்பாக நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.
கலக்கமா: அப்படியே பங்கேற்றாலும்கூட, விஜய் டிவி அவர்களுக்கு "சார்பாக" இருக்கிறதா? நடுநிலையாக உள்ளதா? என்பதை கவனித்து வரும்.. ஆஜித், பிரியங்கா, போன்றோர் அப்படி கவனிக்கப்பட்டவர்கள்தான்.. ஆனால், இப்போது ஏராளமானோர் விஜய் டிவி நபர்களாகவே இருப்பதாக சொல்லப்படுவது, விஜய் டிவிக்கு வந்த கலக்கமா? அல்லது பிக்பாஸ் நிகழ்ச்சி தன் மீதே நம்பிக்கையை இழந்து வருகிறதா தெரியவில்லை.. அதேசமயம், மேற்கண்ட யூகங்களும் உண்மையா தெரியவில்லை. நாளை தெரிந்துவிடும்.
இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் குறித்து உறுதியான தகவல் தெரியாவிட்டாலும், நாளை முதல் நாள் ஷூட்டிங் ஆரம்பிக்க போவதால், இன்று மாலையே போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதாக தெரிகிறது. யார் போட்டியாளர்கள் என்ற ஆர்வம் ஒருபக்கமும், விஜய் சேதுபதி எப்படி நிகழ்ச்சியை நடத்த போகிறார் என்ற ஆர்வம் மறுபக்கமும் ரசிகர்களை திணறடித்து வருகிறது.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications