பிக் பாஸில் பலிக்காத ஜாக்குலின் கனவு.. கமலையே தூக்கி சாப்பிட்டுட்டாரே விஜய் சேதுபதி.. Bigg Boss 8
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி எப்படி தொகுத்து வழங்கினார் என்பது குறித்த விவாதங்கள்தான் இணையத்தில் அனலடித்து கொண்டிருக்கிறது.. போட்டியாளர்களையும் தாண்டி, பிக்பாஸ் தொகுப்பாளர்தான், பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்.. என்ன காரணம்?
விஜய் சேதுபதி பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை எப்படி நடத்த போகிறாரோ என்று, ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடனும், எதிர்பார்ப்புடனும் காத்து கிடந்தார்கள்..

கமலுக்கு பதிலாக, விஜய் சேதுபதியை இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த போவதால், ஏதாவது புதுமையான விஷயங்களை செய்வாரா? கமலை போல தன்னுடைய அனுபவங்களை போட்டியாளர்களிடம் பேசுவாரா? விஜய் சேதுபதியின் அணுகுமுறை எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டது.
கடந்த வாரம் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தியபோதே, விஜய் சேதுபதி பலரது எதிர்பார்ப்பையும் நிச்சயம் நிறைவேற்றிவிடுவார் என்ற நம்பிக்கை துளிர்த்தது. நேற்றைய தினம், அந்த நம்பிக்கை வேர் விட துவங்கிவிட்டது.
போட்டியாளர்கள்: போட்டியாளர்களை மோசமாக திட்டவில்லையே தவிர, தலையில் அனைவருக்குமே கொட்டு வைத்தார் விஜய சேதுபதி. பாரபட்சமின்றி கேள்விகளை எழுப்பினார்.. தயவுதாட்சண்யமின்றி தவறுகளை சுட்டிக்காட்டினார் என்றெல்லாம் இணையவாசிகள் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.
நிகழ்ச்சியின் அறிமுக நாளில் சிரித்த முகத்துடன் காணப்பட்ட விஜய் சேதுபதி, நேற்றைய தினம் அந்த சிரிப்பு லேசாக மிஸ்ஸாகி இருந்தது.. முதலில் போட்டியாளர்களின் பேசவிட்டு, அவர்களின் கருத்துக்களை முழுமையாக கேட்டபிறகு, அவர்களது செயல்பாடுகளை விமர்சித்தார்.. கேம் ஆட வந்திருக்கீங்களா? டூருக்கு வந்திருக்கீங்களா? எல்லாரும் எழுந்து நின்னு பேசுங்க, தூங்கி வழியறிங்களே என்றெல்லாம் முகத்துக்கு நேராகவே பேசிவிட்டார்.
சுனிதா: முதல் வார அனுபவம் குறித்து சொல்லுங்க, எங்கிருந்து தொடங்கலாம் என விஜய் சேதுபதி கேட்க, ஃபேட் மேன் ரவீந்திரனில் இருந்து தொடங்கலாம் சார் என்று சுனிதா சொல்ல, உடனே விஜய் சேதுபதி, அதை எப்படி நீங்க சொல்லலாம்? நான் தான் இங்க ஹோஸ்ட்... சுனிதா நீங்களே ஆரம்பியுங்கள் என்று கூறி தன்னுடைய நிகழ்ச்சியை துவக்கியதிலிருந்தே பரபரப்பு பற்றிக் கொண்டுவிட்டது.
ஜெஃப்ரிக்கு எப்படி பேசவேண்டும்? சுனிதாவின் தமிழ் அழகு, ரஞ்சித்தின் நடிப்பு அருமை, அடுத்தவர் மனநிலைமையை புரிந்து முத்துக்குமார் சுருக்கமாக பேச வேண்டும் என்பது முதல் பாசிட்டிவ் + நெகட்டிவ் விஷயங்களை போட்டியாளர்களிடம் எடுத்துரைத்தது ரசிகர்களை ஈர்க்கவே செய்தது.
விஜய் சேதுபதி: ஃபேட் மேனுக்கு எதிராகவே பேசிக் கொண்டிருந்த விஜய் சேதுபதி, ஒருகட்டத்தில் ஃபேட்மேனுக்கு ஆதரவாக சொல்ல, அவர் திடீரென கண்கலங்கி அழுதுவிட்டார்... ரவீந்தர் கண்கலங்க, மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சியில் உறைய, அரங்கம் அதிர விஜய் சேதுபதிக்கு கை தட்டல்கள் ஒலிப்பதையும் காண முடிந்தது.
என்ன வியூகத்தை நினைத்து ஜாக்குலின் விளையாட வந்துள்ளார் தெரியவில்லை.. ஆனால், ஜாக்குலினுக்கு தன் ஆட்டத்தின் மீதே சற்று அதிர்ச்சிதான்.. பிரியங்காவை போல கோபமாக, வெடித்து பேசினால், ரசிகர்களின் கவனத்தை திருப்ப முடியும் என்று கணக்கு போட்டதெல்லாம் நொறுங்கி போயவிட்டது.. "என்னிடம் எல்லாரும் வெறுப்பாக பேசினார்கள்" என்று ஜாக்குலின் சொல்ல, நீங்கள் மட்டும் ரொம்ப அன்பா பேசீட்டிங்களாமா? என்று விஜய் சேதுபதி கேட்டபோதே, ஜாக்குலின் விக்கித்து போனார்.
ஜாக்குலின்: கடந்த ஒரு வார காலமாக ரசிகர்களும், இதைத்தான் சொல்லி கொண்டிருந்தார்கள்.. ஜாக்குலின் இனியாவது தன்னுடைய ஒரிஜினல் முகத்தை காட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகிறார்கள். ரவீந்தர் மற்றும் ஜாக்குலின் அதிகபட்சமாக 6 நாமினேஷன்களை பிடித்திருந்தனர். அந்தவகையில், ஜாக்குலின் சரியாக விளையாடாவிட்டாலும், "ஆஃப்லைன்" வாக்குகளின் தயவால் இந்த வாரம் காப்பாற்றட்டுவிட்டதாக கூறுகிறார்கள்.
மொத்தத்தில், எதார்த்தமான பேச்சு, லேசான கலகலப்பு, ஊசியால் தைக்கும் விளாசல்கள் என நிகழ்ச்சி தொகுப்பாளராக ஸ்கோர் செய்துள்ளார் விஜய் சேதுபதி.
இதனிடையே, இந்த வாரம் நடந்த எவிக்ஷனில், குறைந்த வாக்குகள் பெற்றதன் மூலம் தயாரிப்பாளர் ரவீந்தர் வீட்டிலிருந்து வெளியேறிதாக தகவல் வெளியாகியுள்ளது.. இவர்களில் ரசிகர்களிடம் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் மிகவும் குறைவான ஓட்டுகள் பெற்ற ரவீந்தர் வெளியேறி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இது இன்றிரவு ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியிலேயே தெரியவரும்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications