Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக் பாஸில் விஜய் சேதுபதி செய்த சம்பவம்.. இவ்ளோ நாளா இதை கவனிக்காம போயிட்டோமே, சூப்பர்.. Bigg Boss 8

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு, ஒரு தரப்பிலிருந்து ஏகப்பட்ட பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து கொண்டிருக்கின்றன.. இப்படியொரு விஷயம் இருக்கா? இதை யாருமே யோசிக்கலியே? என்று பலரும் நெகிழ்ந்து கூறி வருகிறார்கள்.. அப்படி என்ன நடந்தது?

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி எப்படி தொகுத்து வழங்க போகிறாரோ என்று, ரசிகர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் சேர்த்தே மிகப்பெரிய ஆர்வமும், எதிர்பார்ப்பும் எழுந்து வந்தது.

bigg boss season 8 vijay sethupathi 8

கமல்ஹாசன்: முக்கியமாக கமல்ஹாசன் அல்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியை, விஜய் சேதுபதியை முன்னெடுப்பதால், ஏதாவது புதுமையான விஷயங்களை செய்வாரா? கமலை போலவே தன்னுடைய அனுபவங்களை போட்டியாளர்களிடம் பேசுவாரா? விஜய் சேதுபதியின் அணுகுமுறை போட்டியாளர்களிடம் எப்படி இருக்க போகிறது என்ற ஆர்வமும் ஏற்பட்டது.

ஆனால், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தியபோதே, விஜய் சேதுபதி அனைவரது எதிர்பார்ப்பையும் நிச்சயம் நிறைவேற்றிவிடுவார் என்ற நம்பிக்கை துளிர்த்துவிட்டது.. அதைவிட முக்கியமாக, கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமையன்று, இந்த நம்பிக்கையானது வேர்விட துவங்கிவிட்டது.

விமர்சனங்கள்: போட்டியாளர்களை மோசமாக திட்டவில்லையே தவிர, மற்றபடி பாரபட்சமில்லாமல் எல்லார் தலையிலும் குட்டு வைத்து பேசினார்.. தயவுதாட்சண்யமில்லாமல் தவறுகளை சுட்டிக்காட்டினார். இதையடுத்து, கமலைவிட விஜய் சேதுபதி சிறப்பாக நிகழ்ச்சியை நடத்துகிறாரா? என்று சோஷியல் மீடியாவில் ஒப்பிடதுவங்கிவிட்டார்கள்.

இதற்கு ரசிகர்கள் பலர், "கமல்ஹாசன் யாராக இருந்தாலும் மரியாதை தந்து பேசுவார். ஆனால், விஜய்சேதுபதி, போட்டியாளர்களை "நீ, வா, போ" என்று அழைக்காமல், பொதுவெளியில் மரியாதை தந்து பேசினால் நல்லா இருக்கும்.. போட்டியாளர்களிடம் கடுகடுவென எப்போதுமே இருக்க தேவையில்லை? என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

கமல்ஹாசன்: மேலும் பல ரசிகர்கள், "கமல் அளவுக்கு விஜய் சேதுபதி நிகழ்ச்சியை சிறப்பாக செய்யவில்லை.. எப்போதுமே யாரையும் யாருடன் ஒப்பிடக்கூடாது. இது ஆரம்பம்தானே, இனிவரும் எபிசோட்களையும் பார்த்துவிட்டுதான், ஒரு முடிவுக்கு வரமுடியும் " என்றும் இணையவாசிகள் கூறிவருகிறார்கள்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், கமல் ரசிகர்கள் பலரே, விஜய் சேதுபதி சிறப்பாக தொகுப்பாளர் பணியை செய்வதாக பாராட்டி வருகிறார்கள்.. மேலும் பலர், "கமலைவிட சிறப்பாக நிகழ்ச்சியை செய்கிறார்.. முக்கியமாக, செயற்கைத்தனம் இல்லாமல் யதார்த்தமாக பேசுகிறார்.. அனைவருக்கும் எளிதில் புரியும்படி பேசுகிறார் என்று புகழ்கிறார்கள்.

துணை விளம்பரம்: இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு பாராட்டும் விஜய் சேதுபதிக்கு கிடைத்து வருகிறது. அதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய விளம்பரதாரர்கள் மற்றும் துணை விளம்பரதாரர்கள் பெயர்களை உச்சரித்து விட்டு தான் நிகழ்ச்சியை துவங்குவது வழக்கமாகும். ஆனால், விஜய் சேதுபதி, முக்கிய விளம்பரதாரர்கள் பெயர்களை சொல்லிவிட்டு, துணை விளம்பரதாரர்கள் நிறுவனங்கள் பெயரை சொல்ல மறுக்கிறாராம்.

இதற்கு காரணம், துணை விளம்பரதார்களில் ஆன்லைன் ரம்மி விளம்பரமும் இருக்கிறதாம்.. அதனால்தான், ஒவ்வொரு இடைவெளி முடிந்து நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போதும், அந்த பெயர்களை படிக்க மறுப்பதாக சொல்கிறார்கள்.

விஜய் சேதுபதி: இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. ஆனால், அதற்குள் இந்த விஷயம் கசிந்து, இணையவாசிகள் விஜய் சேதுபதியை பாராட்டி கொண்டிருக்கிறார்களாம்.

எனினும், ஒரு நிகழ்ச்சியின் தொகுப்பாளர் என்றால், விளம்பரதாரர்களின் பெயர்களையும் முழுமையாக சொல்வதுதானே முறை? என்றும் சலசலப்பு கிளம்பி உள்ளதாம்...!!!

இதனிடையே, கடந்த வார முடிவில் எலிமினேஷன் ரவுண்டில், ரவீந்தர் வெளியேற்றப்பட்டபோது, அவரது வெளியேற்றத்தை மிகக் கவனமாக கையாண்டதற்கும் விஜய் சேதுபதிக்கு பாராட்டுக்கள் குவிந்துவண்ணம் உள்ளன.. அதேபோல, போட்டியாளர்களின் தவறுகளை அவர்களிடமே கேட்டு விடும், இந்த அணுகுமுறைதான் விஜய சேதுபதியின் பிளஸ் பாயிண்ட் என்றும் இணையவாசிகள் சொல்லி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+