ஜாக்குலினின் கன்னத்தை தொட்டு.. தத்தி ஆண் நண்பர்.. பிக் பாஸில் 100 நாள் தாங்குவாரா? Bigg boss tamil 8
சென்னை: ஜாக்குலின் புத்திசாலி பெண், அதனால்தான் நாமினேஷனில் கவனமாக இருக்கிறார்.. ஜாக்குலின் எப்படி விளையாடுகிறார் என்று பார்ப்போம்" என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
செய்யாறு பாலு Cheyyaru Balu Official யூடியூப் சேனலுக்கு ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில் அவர் சொன்னபோது, "ஜாக்குலினின் பின்புலம் பற்றியும், அவரது திறமைகளை பற்றியும் விரிவாக பேசியிருக்கிறார்..

அதில், "நான் இதை ஜாக்குலினின் பிஆர் டீமிலிருந்து பேசினாங்களா? கன்டென்ட் தர சொன்னாங்களா? என்றெல்லாம் நினைப்பீர்கள்.. அப்படியெல்லாம் பிஆர் டீமில் பேசியிருந்தால், பிக்பாஸில் எல்லாரும் வேற லெவலுக்கு போயிருப்பாங்களே? நான் ஜாக்குலினின் துணிச்சலை பற்றி மட்டும் பேசுகிறேன்.
இந்தி படம்: சாதாரண நிலையிலிருந்து, இந்த இடத்தை தொட்ட பெண்தான் ஜாக்குலின்.. கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா, சரண்யா நடித்திருந்தனர். இந்த படத்தை இந்தியில் எடுத்தபோது, ஜாக்குலினை மட்டும் அதில் நடிக்க அழைக்கிறார்கள். விஜய் டிவியும் ஜாக்குலினை இந்தி படத்தில் நடிக்க அனுமதி தந்துவிட்டது. ஆனால் ஜாக்குலின் மறுத்திருந்தார்.
பிரபலமான தொகுப்பாளராக மட்டுமல்லாமல் யூடியூப் சேனல் ஆரம்பிச்சாங்க.. அதில் ஜாக்குலின் பதிவிட்ட ஒரு வீடியோ மிகவும் வைரலாகிவிட்டது.. "செலிபிரிட்டிகள் எல்லாம் தூரத்து பச்சை. வானவில் மாதிரி.. பெரும்பான்மையானவர்கள் அப்படித்தான் இருக்காங்க. நான் பார்த்த வியந்த சிலரில் என்னை தொட்டு பேசறாங்க, தோளை தட்டுறாங்க.. கன்னத்தை தட்டுறாங்க. இது எனக்கு அருவருப்பாக இருந்தது" என்று கூறியிருந்தார்.
கமெண்ட்: உடனே அந்த வீடியோவுக்கு கீழே கமெண்ட்டில், "ஜாக்குலின், இப்ப ஓபனா பேசாதே, நீங்கள் காணாம போய்டுவீங்க" என்று அட்வைஸ் செய்கிறார்கள். ஆனால், ஜாக்குலின், "நான் அப்படித்தான் பேசுவேன்.. என் அம்மா பல அவமானங்களுக்கு நடுவில் என்னை வளர்த்தாங்க.. அதுதான் எனக்கு தைரியம் தந்தது.. என் அம்மாதான் எனக்கு ரோல்மாடல்" என்று துணிச்சலாக பதில் சொல்லியிருந்தார்.
லயோலாவில் பிஎஸ்ஸி விஸ்காம் படித்துவிட்டு, விமான பணிப்பெண்ணாக டிரெயினிங்கும் எடுத்துட்டு பணிக்கு போக இருந்த நேரத்தில் மீடியாவுக்குள் வந்துட்டாங்க.. வேற லெவலில் புகழை எட்டிட்டாங்க..
வீடியோ பதிவு: அதேபோல, இன்னொரு வீடியோவும் ஜாக்குலின் பதிவிட்டு வைரலாகிடுச்சு.. "நாங்கள் வசிக்கும் வீடு குறுகலான இடத்தில் இருந்தது.. அது சின்ன பகுதியாகும்.. ஆனாலும் எங்கள் வீட்டின் ஒரு பகுதி உட்பட அங்கிருந்த 20 வீடுகளையும் சாலைவிரிவாக்கத்துக்காக அரசாங்கம் எடுத்து கொண்டது. அதற்குரிய தொகையையும் எங்களுக்கு தந்துட்டாங்க. அந்த மீதி இருக்கிற வீட்டை ஆல்டர் பண்ணி வீடு கட்ட போறேன் என்று சொல்லி, "ஹோம் டூர்" வீடியோவையும் போட்டிருந்தாங்க ஜாக்குலின்.
எங்கள் வீடு இடிக்கப்பட்டதற்காக வருத்தப்படல.. அப்படி இடித்தால்தான் நகரம் பெரிதாகும். போக்குவரத்து அதிகமாகும்.. அதனால், வீட்டை இடிக்க ஒப்புக்கொண்டு, அரசு தந்த பணத்தை ஏற்றுக்கொண்டோம்.. என்னால் சம்பாதிக்க முடியும். இதைவிட பெரிய வீடு கட்டுவேன்" என்று கூறியிருந்தார்..
லவ் புரபோசல்: உங்களுக்கு யாரும் லவ் புரபோசல் பண்ணலியா? என்று ஒருமுறை ஜாக்குலினிடம் கேட்கப்பட்டது.. அதற்கு ஜாக்குலின், "எனக்கு பெண் நண்பர்களைவிட, ஆண் நண்பர்கள்தான் அதிகம்.. ஆனால் தத்திகள்.. யாருமே எனக்கு புரபோஸ் பண்ணல.. அதனால், யாராவது நல்ல மாப்பிள்ளை இருந்தால் எனக்கு சொல்லுங்கள்" என்றார்.
அப்படின்னா இதுவரை உங்களுக்கு யார்மீதும் லவ் வரலியா? என்று கேட்கப்பட்டது. அதற்கு ஜாக்குலின், "எனக்கும் லவ் வந்தது.. ஆனால் நான் 4வது படிக்கும்போது என்னுடைய வாத்தியார் மீது வந்தது. ஆனால் அதன் பெயர் காதல் இல்லை.. அவர் நன்றாக பாடம் நடத்துவதால் ஏற்பட்ட ஈர்ப்பு மட்டுமே.. ஆசிரியரை நான் ஆசிரியராக மட்டுமே பார்த்தேன்" என்றார் ஜாக்குலின்.
மீடியா, தொகுப்பாளர், நடிகை என்பதையும்யெல்லாம் தாண்டி, ரெஸ்டாரெண்ட் ஒன்றையும் திறந்தார் ஜாக்குலின். அப்போதும் எல்லாரும் "வேண்டாம் ஜாக்குலின், இது உனக்கு தேவையில்லாத வேலை" என்றார்கள். ஆனாலும் தன்னால் முடியும் என்று கூறி துணிச்சலாக ரெஸ்ட்டாரெண்ட் திறந்தார்.. கடன்வாங்கி, சிரமப்பட்டு ஆரம்பித்தார்.. இவ்வளவு தைரியமான பெண்ணான ஜாக்குலின் பிக்பாஸ் விளையாட வந்துள்ளார்.
ஜாக்குலினின் ஆசை: 100 நாள் விளையாடி விட்டு சென்றால், எனக்கு ஒரு தொகை கிடைக்கும்.. அதில், என் கடனை அடைப்பேன், என் வீட்டை பெரிதாக கட்டுவேன், ரெஸ்ட்டாரெண்ட்டை விரிவுபடுத்துவேன்" என்று தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார்.. ஜாக்குலின் புத்திசாலி பெண், அதனால்தான் நாமனேஷனில் கவனமாக இருக்கிறார்.. ஜாக்குலின் எப்படி விளையாடுகிறார் என்று பார்ப்போம்" என்று அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications