நொறுங்கிடுச்சா அன்ஷிதா ஆசை.. அப்ப பிக் பாஸ் 8 "பணப்பெட்டி" யாருக்கு? இவரும் வெளியேறுகிறாரா? போச்சு
சென்னை: கடந்த வாரம் முழுக்க உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிக்பாஸ் வீடு திளைத்து காணப்பட்ட நிலையில், வீக் எண்ட்டில் மொத்த பேரும் வாடி வதங்கி போயிருக்கிறார்கள். இதற்கு காரணம் இந்த வாரமும் டபிள் எவிக்ஷன் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர், வீட்டிற்குள் வந்திருந்தனர். இதனால் திக்குமுக்காடி போன போட்டியாளர்கள், மிகுந்த மகிழ்ச்சியில் காணப்பட்டனர்.

ஒவ்வொரு போட்டியாளரின் பெற்றோர்கள் முரண்டுபாடுகளை சுட்டிக்காட்டினாலும், எதையும் எந்த போட்டியாளர்களும் சீரியஸாக எடுத்து கொள்ளவில்லை.. மாறாக, தங்கள் மீதான விமர்சனங்களை மனமுவந்து ஏற்றுக் கொள்ளவே செய்தனர். அத்துடன் தங்களது தவறுகளை சுட்டிக்காட்டியதுமே அதற்கு வருத்தமும், மன்னிப்பும் பகிரங்கமாக கேட்டுக் கொண்டனர்.
ஜெப்ரி: அந்தவகையில், வாரம் முழுக்க மகிழ்ச்சியாக சென்றநிலையில், எலிமினேஷன் புராஸஸிங்கையும் எதிர்கொள்ள வேண்டியதாகிவிட்டது. அந்தவகையில், நேற்றைய தினம் ஜெஃப்ரி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்.
வீட்டிற்குள் பெண் போட்டியாளர்களிடம் பழகுவதிலேயே பெரும்பாலான நேரத்தை ஜெஃப்ரி கழித்து வந்ததாக ஆரம்பத்திலிருந்தே, விமர்சனம் இருந்து வந்தது. அந்தவகையில் இத்தனை நாட்களும் ஜெப்ரி வீட்டிற்குள் இருந்ததே சாதனைதான் என்கிறார்கள்.
நேற்றைய தினம் ஜெப்ரி வெளியேற்றப்பட்டபோதே, டபுள் எவிக்ஷன் இந்த வாரம் உள்ளது என்பது அனைவருக்கும் விளங்கிவிட்டது. அந்தவகையில், அன்ஷிதா இன்றைய தினம் வெளியேறக்கூடும் என்ற தகவல் பரபரக்கிறது. ஒருவேளை அன்ஷிதா இன்றைய தினம் வெளியேற்றப்பட்டால், இந்த எலிமினேஷன் அவருக்கு அதிர்ச்சியையே தரும் என தெரிகிறது. காரணம், பணப்பெட்டியை எடுத்து செல்ல வேண்டும் என்பதே அன்ஷிதாவின் நோக்கமாக இருந்ததாம்.
டேமேஜ்: வீட்டிற்குள் விளையாட வருவதற்கு முன்பு, தன்னுடைய நெருங்கிய நட்பு வட்டத்தில் பேசும்போது, "சில பர்சனல் விஷயங்களால் மீடியாவில் என்னுடைய பெயர் டேமேஜ் ஆகிவிட்டது. அதையெல்லாம் கடந்து நிகழ்ச்சிக்குள் நான் இருந்தால், அது எனக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம்தான். ஒருவேளை பணப்பெட்டி வைக்கிற வரைக்கும் ஷோவில் இருந்தால், ரொம்ப சந்தோஷப்படுவேன். அதுக்குமேல ரிஸ்க் எடுக்குறது நல்லதில்ல" என்று சொல்லிவிட்டு போனாராம்.
அதற்கேற்றார்போல், நேற்று முன்தினம் பணப்பெட்டி குறித்த கேள்வியை முத்துக்குமரனும் சக போட்டியாளர்களிடம், எவ்வளவு பணம் இருந்தால் பணப்பெட்டியை எடுக்க மாட்டீர்கள்? என்று கேட்டிருந்தார். அதற்கு அன்ஷிதா 15 லட்சம் என்று கூறியிருந்தார்.
பணப்பெட்டி: அந்தவகையில், பணப்பெட்டியை எடுப்பதிலேயே அன்ஷிதா குறியாக இருப்பது உறுதியானது. இப்படிப்பட்ட சூழலில்தான், அன்ஷிதா வெளியேறியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பணப்பெட்டியை எடுக்க ஜெப்ரியும் ஆசைப்பட்டார். அவரும் வெளியேற்றப்பட்டுள்ள சூழலில், பணப்பெட்டி யாருக்கு கிடைக்க போகிறது என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications