எலிமினேட் ஆனதும் மஞ்சரி, பிக் பாஸிடம் கண்ணீர் விட்டு கேட்ட விஷயம்.. நிறைவேறாமலே போன ஆசை!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8-வது நிகழ்ச்சியில் இருந்து நேற்று மஞ்சரி எலிமினேட் ஆனார். ஆனால் அவர் எலிமினேஷன் என்று அறிவித்ததும் பிக் பாஸிடம் தன்னுடைய மகனுக்காக ஒரு விஷயத்தை கண்கலங்கி கேட்க, அதற்கு பிக் பாஸ் செய்ய முடியாது என்று சொல்லி இருக்கிறார். இது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் அதிகமானோர் விஜய் டிவி பிரபலங்களாகத்தான் இருந்தனர். அதனால் நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர் ஆனால் பெரிய அளவில் பரபரப்பு ஏற்படுத்தவில்லை.

அந்த நேரத்தில் தான் இரண்டு வாரங்கள் கழித்து ஆறு வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர். அதில் மஞ்சரியும் ஒருவர். இவர் இதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான "தமிழ் பேச்சு எங்கள் மூச்சு" நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றிருந்தார். அதோடு பல பட்டிமன்றங்களிலும் பேசி இருக்கிறார்.
வைல்ட் கார்ட் போட்டியாளராக வந்த மஞ்சரி இந்த சீசனில் கடைசி வரைக்கும் இருப்பார் என்பது பலருடைய கருத்தாக இருந்தது. எந்த இடத்தில் தான் பேச வேண்டுமோ அந்த இடத்தில் தைரியமாக பேசி வந்தார். அதுபோல பல இடங்களில் மஞ்சரி தனியாக விளையாடி வந்தார். இது இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலத்தை கொடுத்தது.
அது போல பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு சிலர் இவரிடம் கடுமையாக நடந்து கொண்டது கூட இவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்க தொடங்கியது. ஆனால் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் மஞ்சரி வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இந்த நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து இருக்கும் நிலையில் அடுத்த வாரத்தோடு முடிவடைய இருக்கிறது.
கடந்த வாரத்தில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்றது. அதிலும் மஞ்சரி சிறப்பாக விளையாடியிருந்தார். ஆனால் அவரால் அந்த டிக்கெட்டை வெற்றி பெற முடியவில்லை. அடுத்த வாரத்தில் மணி டாஸ்க்கு நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பே மஞ்சரி நேற்று வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இது அன்ஃபேர் எலெக்ஷன் என்று பலர் கூறி வருகிறார்கள்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் மஞ்சரி எவிக்ஷன் என்று விஜய் சேதுபதி அறிவித்த பிறகு வழக்கம் போல எல்லா போட்டியாளர்களிடமும் அவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பேசிய மஞ்சரி நான் யாருக்கேனும் மனசு கஷ்டப்படும்படி பேசியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.
அடுத்ததாக மஞ்சரி பற்றி முத்துக்குமரன் பேசுகையில் மஞ்சரி எனக்கு பிரண்ட் இல்ல, என்னுடைய கூடப்பிறந்த அக்காவா வாழ்நாள் முழுக்க இருக்க வேண்டும் என பிரியப்படுகிறேன். நான் இந்த வீட்டில் ஒருவருக்காக நிற்க வேண்டும் என்று நினைத்தேன் என்றால் அது மஞ்சரியாக மட்டும்தான் இருக்கும்.
அதனால் தான் மஞ்சரி என்ன ஜெயித்து விட்டார் என்று சொன்னேன். ஒரு பெரிய ரகசியம் என்றால் எனக்கு யாரை பார்த்தும் பொறாமை இருக்காது, ஆனால் மஞ்சரி ஜாக்குலின் கிட்டயோ, ரயான் கிட்டையோ பேசும்போது எனக்கு பொறாமையா இருக்கும் என்று பேசி இருந்தார்.

இன்று பிக் பாஸுக்குள் என்ட்ரியாகும் 8 பேர்.. எதிர்பார்க்காத அதிரடி சம்பவம்! ஆனால் அந்த நபர் மிஸ்ஸிங்
அதுபோல பிக் பாஸ் வீட்டில் ஒரு வழக்கம் இருக்கிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் நாள் அறிமுகம் ஆகும்போது விஜய் சேதுபதி கொடுத்த டிராபியை எவிக்ஷசன் ஆகி வெளியே வரும்போது எல்லோரும் உடைத்து விட்டு வர வேண்டும். ஆனால் நேற்று எவிக்ஷனான மஞ்சரி பிக்பாஸ் இடம் ஒரு வேண்டுகோள் வைத்தார்.
அதில் நான் பிக் பாஸ் டைட்டில் ஜெயித்து விட்டு வருவதாக என்னுடைய மகனிடம் சொன்னேன் ஆனால் அது இப்போ நிறைவேறாததால் இந்த டிராஃபியை உடைக்காமல் எடுத்துக்கொண்டு சென்று என்னுடைய மகனிடம் கொடுக்க ஆசைப்படுகிறேன் என்று கூறினார். ஆனால் இதற்கு பிக் பாஸ் அனுமதி அளிக்க முடியாது என்று அந்த டிராஃப்பியை உடைக்குமாறு கூறினார். அப்போது மஞ்சரி கண்ணீர் விட்டு அழுதும் பிக்பாஸ் அவருக்கு அந்த டம்மி டிராபியை கொடுக்காதது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications