இன்று பிக் பாஸுக்குள் என்ட்ரியாகும் 8 பேர்.. எதிர்பார்க்காத அதிரடி சம்பவம்! ஆனால் அந்த நபர் மிஸ்ஸிங்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் இன்று ரவீந்தர், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா தியாகராஜன், சாச்சனா, சிவக்குமார், வர்ஷினி வெங்கட் மற்றும் அர்னவ் ஆகிய 8 போட்டியாளர்கள் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார்கள்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி 90 நாட்களை கடந்துவிட்ட நிலையில் கடந்த வாரத்தில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்றது. அதில் ரயான் வெற்றி பெற்றிருக்கிறார். அவர்தான் நேரடியாக பைனலுக்கு போகும் முதல் போட்டியாளராக தேர்வாகி இருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இவர்கள் 8 பேரில் யார் கப்பு ஜெயிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது. இதற்கு முந்தைய சீசன்களில் எல்லாம் ஒரு சில வாரங்களிலேயே இவர்தான் இந்த சீசனில் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் கூறி வருவார்கள். ஆனால் இந்த சீசனில் மட்டும் யார் ஜெயிக்க போகிறார்கள் என்று யோசிக்க முடியாத வகையில் தான் விளையாட்டு போய்க் கொண்டிருக்கிறது.

அதுபோல இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 18 போட்டியாளர்கள் இருந்தனர். அதற்குப் பிறகு ஆறு வைல்ட் கார்டு போட்டியாளர்கள் இருந்தனர். ஒவ்வொரு வாரமும் சில போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுக்கு வந்தனர். கடந்த சில வாரங்களாக இரண்டு எவிக்ஷன் நடைபெற்றது.

அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் 60 நாட்களை கடந்ததுமே இந்த நிகழ்ச்சியில் இருந்து எவிக்ஷனாகி வெளியே சென்ற போட்டியாளர்கள் வீட்டிற்குள் மீண்டும் ரீ என்ட்ரி கொடுப்பது வழக்கம். ஆனால் இந்த சீசனில் மட்டும் அப்படி நடக்கவே இல்லை. அதற்கு ஒரு முக்கிய காரணம் இந்த சீசனில் முதல் சில வாரங்களில் வெளியேற்றப்பட்ட அர்னாவ் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முதலில் பேசப்பட்டதாகவும், அப்போது பிக் பாஸ் விதிமுறையை மீறி தான் ரீ என்ட்ரி கொடுக்கப் போவதை இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் வெளிப்படுத்தியதால் அவரை உள்ளே பிக் பாஸ் அனுப்ப மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால்தான் இந்த சீசனில் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக போட்டியாளர்கள் மீண்டும் வராமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இப்படியான நிலையில் தற்போது நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு வார காலம் மட்டுமே இருக்கும் நிலையில் பழைய போட்டியாளர்கள் இன்று என்ட்ரி ஆகிறார்கள்.

அதில் ரவீந்தர், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா தியாகராஜன், சாச்சனா, சிவக்குமார், வர்ஷினி மற்றும் அர்னாவ் ஆகியோர் என்ட்ரி ஆக இருக்கிறார்கள். ஏற்கனவே அர்னாவ் வெளியே போகும்போது தன்னுடைய மொத்த வன்மத்தையும் உள்ளிருக்கும் போட்டியாளர்கள் மீது காட்டி இருந்தார்.

அதற்கு பிறகு விஜய் சேதுபதி முன்பு மேடையில் நிற்கும் போது கூட தன்னுடைய கோபத்தை காட்டி இருந்தார். இதனால் இவர் மீண்டும் நிகழ்ச்சிக்கு வந்தால் என்ன மாதிரி நடந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுபோல இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே உள்ளே இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே நுழைவதால் பல பிரச்சனைகள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

எது எப்படியோ இந்த ஒரு வாரமாவது ரசிகர்களுக்கு தகுந்தது போல கண்டன்ட் கிடைத்தால் நல்லது தான். ஆனால் இதில் ரஞ்சித், ஜெஃப்ரி போன்ற இந்த வாரத்தில் கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகவில்லை. இதனால் இவர்கள் மீண்டும் ரீஎன்ட்ரியாக வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications