அவசரத்துக்கு கிடைச்ச விஜய் சேதுபதி? அல்டிமேட் சிம்பு.. பிக்பாஸ் சீசன் 8 கண்ணை கட்டுதே? பிரபலம் நறுக்
சென்னை: நாளை பிக்பாஸ் சீசன் 8 துவங்க உள்ள நிலையில், சில சுவாரஸ்ய தகவல்கள் இணையத்தை வட்டமடித்து கொண்டிருக்கின்றன. முக்கியமாக விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை எப்படி நடத்த போகிறார் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் கிளம்பி வருகிறது.. இதுகுறித்து பிரபலங்கள் சிலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
சீனியர் நடிகர் கமல்ஹாசனுக்கு பதிலாக, இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி நடத்த போகிறார்.. வழக்கமாக பிக்பாஸ் வீட்டுக்குள், ஏதாவது புதுமையான விஷயங்களையும், தன்னுடைய அனுபவங்களையும் போட்டியாளர்களிடம் பேசுவது கமலின் வழக்கமாக இருந்து வருகிறது.

இதைத்தவிர, அரசியல், சினிமா, சமூகம் என அனைத்து துறைகளையும் பேசாமல், தன்னுடைய வார நிகழ்ச்சிகளை கமல் முடித்தது கிடையாது, எனவே, இந்த விஷயங்களையெல்லாம் விஜய் சேதுபதி எந்த அளவுக்கு நிறைவேற்றுவார் என்று தெரியவில்லை.. இதுகுறித்து White Horse Media யூடியூப் சேனலுக்கு தொகுப்பாளர் பாலிமர் டிவி ரஞ்சித் ஒரு பேட்டி தந்துள்ளார். அதில் தெரிவித்துள்ள கருத்துக்களின் சுருக்கம் இதுதான்:
புதுமை இருக்குமா?: "இந்த முறை பிக்பாஸ் புரமோவே சூப்பரா இருந்தது.. கண்டிப்பா விஜய் சேதுபதி புதுசா ஏதாவது செய்வார்.. இதை கமல் சாருடன் ஒப்பிட்டு பார்க்க கூடாது.. காரணம், அவருக்கான இடத்தை விஜய் டிவி தந்திருந்தது.. எனவே, பிக்பாஸ் மேடையை அரசியல் மேடையாக, புத்தக பரிந்துரையாக, மக்களை பற்றி பேசவும், பிக்பாஸ் வீட்டில் நடப்பதை, அரசியலுடன் ஒப்பிட்டு பேசியும் நிகழ்ச்சியை நடத்தினார்..
ஆனால், விஜய் சேதுபதி அரசியலை பேசமாட்டார்.. அரசுக்கு ஆதரவாக சில ட்வீட்களை இதற்கு முன்பு அவர் பதிவிட்டிருந்தாலும்கூட, அது இந்த ஷோவில் எடுபடாது.. கமல் சார் சில விஷயங்களை புரியாதபடியும் பேசுவார். ஆனால், விஜய் சேதுபதி அப்படி பேச மாட்டார்.. எப்போதுமே ரத்தினசுருக்கமாக பேசுபவர்... எனவே, இந்த முறை பிக்பாஸ் சீசனில், விளையாட்டுக்களை அதிகமாக சேர்க்க வாய்ப்புள்ளது.. வெளியில் ஸ்டேஜ்கிட்ட விளையாட்டு போட்டிகளை நிறைய சேர்ப்பார்கள் என்று நினைப்பார்கள்.
மோட்டிவேஷனல்: விஜய் சேதுபதி தன்னை எப்படி இந்த ஷோவில் வெளிப்படுத்துவார் என்று தெரியவில்லை.. ஒரு நடிகராக? அல்லது மோட்டிவேஷனல் பேச்சாளராக? எப்படி நிகழ்ச்சியை நடத்த போகிறார் என்பது ஆர்வமாக உள்ளது.
கடந்த சீசனில் பிரதீப் வெளியேறிய பிறகு, கமல்சாருக்கு எதிரான கமெண்ட்கள் ஏராளமாக வந்தது... கமல் போன்ற லெஜண்ட்டையே திட்டும் அளவுக்கு ஒரு ஷோ வந்துவிட்டது.. அதனால், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டு விஜய் சேதுபதி பேச வேண்டியிருக்கு.. இதுவரை விஜய் சேதுபதிக்கு ஹேட்டர்ஸ் என்பதே கிடையாது.. வெறுப்பாளர்களை சம்பாதித்துவிடக்கூடாது என்றால், ஷோவில் என்ன நடந்திருக்கிறது என்பதை ஒவ்வொரு நாளும் ஹாட் ஸ்ட்ரீமில் கவனிக்கணும்.
அவசரத்துக்கு ஆள்: பிக்பாஸ் 6 சீசனுக்கும் கமல் சாருக்கு அக்ரிமென்ட் போட்டதாக சொன்னார்கள்.. 7வது சீசனுக்கு இது நீட்டிக்கப்பட்டது. இப்போது அவராகவே வெளியேயிருக்கிறார்.. அதனால் அவசரத்துக்கு ஆள் தேட வேண்டிய நிலைமை வந்தது.. எனக்கு தெரிந்து விஜய் சேதுபதிக்கு ஒரு வருடம்தான் அக்ரிமெண்ட் என்று நினைக்கிறேன்.. ஆனால், நான் முதலில் யோசித்த நடிகர்கள் பார்த்திபன், அர்ஜூன் இருவரையும் என்னுடைய சாய்ஸ் ஆக நினைத்தேன்.. அதிலும் பார்த்திபன் என்றால், அனைவருக்குமே பயம் & மரியாதை இரண்டுமே கலந்து வரும்.
கமல் சார் ரேஞ்சுக்கு இல்லை என்றாலும், பார்த்திபன் பேசுவதும், கேள்வி கேட்பதும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.. சிம்பு பெயரும் இதில், அடிபட்டது.. அல்ட்டிமேட் ஷோவை சிம்பு சூப்பராக செய்திருந்தார்.. ஆனால், 40 வயதுதான் ஆகிறது.. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 50 வயது நபர்களும் போட்டியில் பங்கேற்பார்கள்.. அவர்களை கண்டித்து பேச வேண்டிவரும். இதுக்கு ஒரு வயது தேவைப்படுகிறது.. கமல்சார் இதற்கெல்லாம் பொருத்தமாக இருந்தார்..
விஜய் சேதுபதி: எனவே சிம்புவுக்கு இந்த பிக்பாஸ் ஷோ செட் ஆகியிருக்காது.. இப்போதுகூட, 50 வயதாகும் விஜய் சேதுபதி வயசுக்கு கீழே இருக்கும்படியான போட்டியாளர்களைதான் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது" என்றார் ரஞ்சித்
இதனிடையே, லேட்டஸ்ட்டாக லிஸ்ட் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில், பாடகர் பால் டப்பா, மாடல் அழகி சௌந்தர்யா, நடிகர் ரஞ்சித், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன், நடிகை சஞ்சனா, ஷாலின் சோயா தர்ஷா குப்தா, அன்சிதா, சந்தோஷ பிரதாப், பவித்ரா ஜனனி, ஜாக்குலின், விஜே விஷால், அருண் பிரசாத், தீபக், கோகுல்நாத், அர்னவ் போன்றோர்கள்தான் இந்த முறை கலந்து கொள்ள போகிறார்களாம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications