என்ன வார்த்தை சொல்றதுன்னு தெரியல! இதை நான் எதிர்பார்க்கல! பிக் பாஸ் ரியா வெளியிட்ட புது வீடியோ
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு கடந்த வாரத்தில் எலிமினேஷனான ரியா தியாகராஜன் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி முதல் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் இருந்தனர். அதற்குப் பிறகு 6 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்தனர். நிகழ்ச்சியில் சுவாரசியம் கூட்டுவதற்காக வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் அதிகமாக களம் இறக்கினார்கள்.

ஆனால் வந்த வேகத்திலேயே இரண்டு வாரத்தில் வைல்ட் கார்டு போட்டியாளராக வந்த ரியா வெளியேற்றப்பட்டார். ஆனால் ரியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் சில இடங்களில் சண்டை போட்டு இருக்கிறார். சில இடங்களில் சமாதானமா போயிருக்கிறார். எதையாவது செய்ய வேண்டும் என்ற துடிப்போடு இருந்தவருக்கு இரண்டு வாரத்தில் வெளியேற்றம் என்பது பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.
அதனாலேயே நிகழ்ச்சியிலிருந்து அவர் எலிமினேஷன் என்று அறிவித்ததும் விரக்தியாக நடந்து கொண்டார். சக போட்டியாளர்கள் யாரிடமும் பேசாமல் தன்னுடைய பொருள்களை தானே எடுத்து வைத்துவிட்டு அப்படியே போய்விடலாம் என்று நினைத்தார். யாரிடமாவது பேசினால் அழுது விடுவோம் என்று நினைத்தாரா? அல்லது தான் நினைத்து வந்த விஷயம் நடக்கவில்லையே என்ற ஏமாற்றத்தில் அப்படி நடந்து கொண்டாரா? என்பது கேள்விக்குறிதான்.
ஆனாலும் அவர் பேசியது பலரையும் ஃபீல் பண்ண வைத்தது. நான் இந்த நிகழ்ச்சிக்கு வரும்போது எனக்கு எந்த பிரபலமும் கிடையாது. அதனால் மக்கள் என்னை வெளியேற்றி விட்டார்களா? இந்த நிகழ்ச்சியில் உள்ளே எதுவும் செய்யாதவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். ஆனால் நான் எதையாவது செய்து எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்று நினைத்தேன்.
நான் இந்த நிகழ்ச்சியில் உண்மையாக இருந்தேன். என்னை மக்கள் எப்படி அனுப்பினார்கள் என்று எனக்கே வருத்தமாக இருக்கிறது என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். அதுபோல நிகழ்ச்சி விட்டு வெளியே வந்த பிறகு கூட ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.
அதில், நான் இந்த நிகழ்ச்சிக்கு போக போறேன் என்றதும் என்னுடைய நண்பர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் அப்படி நடந்து கொள் இப்படி நடந்து கொள் என்று சொல்லித் தந்தார்கள். அதுபோல பிஆர் செட் பண்ணு என்றெல்லாம் சொன்னார்கள். நான் எதுவும் தேவையில்லை மக்கள் என்னை புரிந்து கொள்வார்கள் என்று நினைத்தேன். ஆனால் மக்கள் என்னை எளிமையை இப்படி வெளியேற்றி விட்டார்கள் என்று வேதனையோடு பேசியிருந்தார்.
இந்த நிலையில் அதை தொடர்ந்து இப்போது இரண்டாவதாக ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். அதோடு நான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு எனக்கு அதிகமான மெசேஜ் மற்றும் போன் கால்ஸ் வந்து கொண்டே இருக்கிறது.
வெளிநாட்டில் இருந்தெல்லாம் எனக்கு போன் செய்கிறார்கள். நான் இப்படி நடக்கும் என்று நினைக்கவே இல்லை. இதற்கு என்ன வார்த்தை சொல்றதுன்னு எனக்கு தெரியல. எல்லோருக்கும் நன்றி மட்டும்தான் என்னால் சொல்ல முடியும் என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோவிற்கு அதிகமான ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி அவருடைய வாழ்க்கையில் ஜெயிக்க வாழ்த்துக்களும் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications