பிக் பாஸ் 8: சிரித்தபடியே வெளியே சென்ற தர்ஷிகா, வாங்கிய சம்பளம் இவ்வளவா? விஜய் சேதுபதி கேட்ட அந்த கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் வெளியே சென்ற தர்ஷிகா வாங்கிய சம்பள விபரங்கள் வெளியாகி இருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் ஆரம்பத்திலேயே அறிமுகம் ஆகி இருந்தனர். அதைத் தொடர்ந்து 6 வைல்டு கார்டு போட்டியாளர்கள் வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சி 10 வாரங்கள் முடிவடைந்து இருக்கும் நிலையில் ஆரம்பத்தில் ஒவ்வொரு போட்டியாளர்களாக வெளியேற்றப்பட்ட நிலையில் கடந்த வாரத்தில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்ற பட்டிருந்தனர்.

Television Bigg Boss Tamil 8 Bigg Boss 8 8

அது போல இந்த வாரத்திலும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இன்று ஞாயிற்றுக்கிழமை தர்ஷிகா வெளியேற்றப்பட்டு இருக்கிறார். தர்ஷிகா ஏற்கனவே விஜய் டிவியில் பல சீரியல்களில் வில்லியாக நடித்திருக்கிறார். ஆனால் தனக்கு சீரியல்களில் வில்லி கேரக்டர் மட்டுமே கிடைக்கிறது அதனால் தான் யார் என்று நிரூபிக்க வேண்டும் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஆரம்பத்தில் இவருடைய விளையாட்டு எல்லோரும் புகழ்ந்து பேசும் அளவில் இருந்தது. ஆனால் நாட்கள் போகப்போக விஜே விஷாலோடு இவர் அதிகமாக சுற்றிக்கொண்டு இருப்பதால் விளையாட்டில் கவனம் செலுத்தவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்து வந்தது. இந்த நிலையில் இன்று வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

தர்ஷிகா இந்த வாரத்தில் வெளியேறுவார் என்று வீட்டிற்குள் பல போட்டியாளர்கள் சொல்லி இருந்தனர். அது போல அவருடைய பெயரை விஜய் சேதுபதி காட்டியதும் நிகழ்ச்சியில் இருந்து எல்லோரிடமும் விடை பெற்று விஜய் சேதுபதி முன்பு மேடைக்கு வந்தார். அப்போதுகூட சிரித்த முகமாகத்தான் வந்தார்.

Television Bigg Boss Tamil 8 Bigg Boss 8 8

ஆனால் அவருடைய பயண வீடியோ போட்டு காட்டப்பட்டது. அப்போது அதிகமான இடத்தில் விஜே விஷாலோடு தர்ஷிகா இருக்கும் காட்சிகளை எடிட் செய்து போட்டு இருந்தார்கள். பயணம் வீடியோ முடிந்ததும் நீங்கள் எந்த இடத்தில் சறுக்கி இருக்கீங்க எந்த இடத்தில் இருந்து உங்களுடைய விளையாட்டு மாறுபட்டது என்று உங்களுக்கு புரிகிறதா? என்று கேட்க தர்ஷிகா தன்னுடைய தவறை புரிந்து கொள்கிறார்.

விஜே விஷாலோடு சேர்ந்து உங்களுடைய விளையாட்டு மாறிவிட்டது என்று விஜய் சேதுபதி சொல்லாமல் சொல்லி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் 100 நாட்கள் இருந்து டைட்டில் ஜெயிக்க வேண்டும் என்று சொல்லியிருந்த தர்ஷிகா 70 நாளில் வெளியே வந்து இருந்தாலும் இவர் தனித்து விளையாடியிருந்தால் கடைசி வரைக்கும் நிகழ்ச்சியில் இருந்திருப்பார் என்பது பலருடைய கருத்தாகி இருக்கும் நிலையில் அதையே விஜய் சேதுபதியும் பட்டும் படாமல் மேடையில் சொல்லி இருக்கிறார்.

அதே நேரத்தில் தர்ஷிகாவிற்க்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டதாம். அவர் இந்த நிகழ்ச்சியில் 70 நாட்கள் இருந்ததற்கு மொத்தம் 14 லட்சம் வரை தர்ஷிகா சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+