Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காரக்குழம்பு கனியின் கழுத்தில் முத்தம் தந்த எஃப்ஜே.. உங்களுக்கு இப்படி கேவலமான பார்வை? நறுக் பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல டைரக்டர் அகத்தியனின் மகன் காரக்குழம்பு கனிக்கு, பிக்பாஸ் எஃப்ஜே அக்கா என்ற முறையில் முத்தம் தந்ததால் என்ன ஆகிவிடபோகிறது? என்று தெரியவில்லை. ஒரு போட்டோவை வைத்து பிக்பாஸ் போட்டியாளரான கனியை விமர்சிப்பது சரியல்ல என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.

பிக்பாஸ் எஃப்ஜேவை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தபடியே உள்ளனர்.. எந்நேரமும் கனியிடம் நெருங்கி உட்காருவதாகவும், கட்டிப்பிடித்து முத்தம் கொண்டிருப்பதாகவும் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

Television Bigg boss tamil 9 Kani FJ

கடந்த வாரம்கூட, கனியின் கழுத்தில் முத்தம் கொடுத்தார் எஃப்ஜே. கனியை வீட்டில் இருக்கும் அனைவருமே அக்கா என்றுதான் அழைக்கிறார்கள். எஃப்ஜேவும் அக்கா என்ற அழைத்தாலும், இவர் மட்டும் ஏன் கழுத்தில் முத்தம் கொடுக்கிறார்? எந்த ஊரில் அக்காவுக்கு கழுத்தில் முத்தம் தருவார்கள்? என்று சோஷியல் மீடியாவில் தாறுமாறான கமெண்ட்கள் வந்தவண்ணம் உள்ளன.

கனியின் கழுத்தில் முத்தம்

இந்நிலையில், cheyyaru Balu என்ற தன்னுடைய சேனலில் பேசியிருக்கும் செய்யாறு பாலு, டைரக்டர் அகத்தியனின் மகள் காரக்குழம்பு கனியின் விவகாரம் தற்போது இணையத்தில் வைரலாக போய் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் போட்டியாளர்களான கனி மற்றும் எஃப்ஜே குறித்த சர்ச்சைதான் வெடித்துள்ளது.. கனியின் கழுத்தில், எஃப்ஜே முத்தமிடுவது போன்ற போட்டோ இணையத்தில் வலம் வந்து, அது குறித்த விவாதங்களும் நடந்து வருகின்றன..

அக்கா அக்கான்னு கூப்பிட்டு இப்படியா செய்வது என்று பலரும் எஃப்ஜேவை திட்டி தீர்த்து வருகிறார்கள்.. ஆனால், இந்த போட்டோவை பார்த்தாலும்சரி, கனியின் முகத்தை பார்த்தாலும் சரி, அப்படியொன்றும் தவறாக தெரியவில்லை. இயல்பாக முத்தம் தருவது போல இருந்தது.

கனிக்கு எஃப்ஜே தந்த அன்பு முத்தம்

முகநூலில் விஜயசங்கர் எழுதியிருக்கிறார், "உறவின் உறவு முறைகளை வைத்து, வெறும் காட்சிகளை, நீங்களாகவே ஒருமுடிவுக்கு வந்துவிட வேண்டாம்.. அத்தனை கேமரா உள்ளது, அத்தனை பார்வையாளர்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

அக்கா என்று அழைத்து முத்தம் தருகிறான் எஃப்ஜே, அந்த பெண்ணும் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் இந்த சமூகம் மிகப்பெரிய விஷயமாக அதை எடுத்து கொண்டு விவாதிக்கிறது.. இது எந்த விதத்தில் நியாயம்?" என்று காட்டமாக கேள்வி எழுப்பி சிறுகதை ஒன்றையும் பதிவிட்டு, மிக அழகாக விளக்கி உள்ளார்.

விஜயலட்சுமி போஸ்ட்

4 வருடங்களுக்கு முன்பு அகத்தியனின் மற்றொரு மகள் விஜயலட்சுமி ஒரு போஸ்ட் போட்டிருந்தார்.. 4 வயது குழந்தைக்கு உதட்டில் முத்தம் தருவது போல ஒரு போட்டோவை போஸ்ட் செய்திருந்தார்.. அந்த போட்டோவை வைத்து, மொத்த சோஷியல் மீடியாவும் விஜயலட்சுமியை டிரோல் செய்தார்கள்..

கொந்தளித்து போன விஜயலட்சுமி, "ஏன்டா உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? அது என் குழந்தைடா. அதுவும் 4 வயசுதான் ஆகுது.. என் குழந்தைக்கு, தாய் முத்தம் தரக்கூடாதா? என்று கொந்தளித்து பேசியிருந்தார்..

3 பெண் பிள்ளைகள் - பூரித்த அகத்தியன்

டைரக்டர் அகத்தியன் பலமுறை பேட்டிகளில் சொல்லி உள்ளார்.. "என்னுடைய 3 பெண்களையும், ஆண் மகன் போல வளர்த்திருக்கிறேன், என் மகள்களை அவர்களின் சுதந்திரத்தோடு வளர்த்தேன்" என்று பூரித்து சொல்லுவார்.. சமீபத்தில்கூட ஒரு பேட்டில், "3 பெண்களும் என்னை கண்ணும் கருத்துமாய் பார்த்து கொள்கிறார்கள்" என்ற கூறியிருந்தார்..

அந்த சுதந்திரத்திற்கான மறுபெயர்தான், அந்த பெண் குழந்தைகள் தவறு செய்ய மாட்டார்கள்.. எனவே, கனிக்கு முத்தம் தந்ததால் என்ன ஆகிவிடபோகிறது? என்று தெரியவில்லை. ஒரு போட்டோவை வைத்து பிக்பாஸ் கனியை விமர்சிப்பது சரியல்ல.. எனினும் அகத்தியன் சார், இதையெல்லாம் I dont care என்று சொல்லிவிட்டு கடந்துவிடுவார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+