கம்ப்ளைன்ட் கொடுத்த கையோடு நன்றி கூறிய மகேஸ்வரி.. இந்த துணிச்சல் தான் கெத்து என ரசிகர்கள் பாராட்டு
வி.ஜே மகேஸ்வரி தற்போது கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கும் நிலையில் அவருடைய துணிச்சலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
சென்னை: விஜே மகேஸ்வரி சமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றியும் தன்னுடைய மகனை பற்றியும் தரக்குறைவாக பேசியவர்களின் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறார்.
தன்னை தரகுறைவாக பேசுபவர்களை தானும் பேசாமல் சட்ட நடவடிக்கை எடுத்த விஜே மகேஸ்வரிக்கு அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
சமூக வலைதளத்தில் பலரையும் ஒரு சிலர் கருத்துக்கள் என்கிற வகையில் அவர்களின் சுயமரியாதையை இழக்கும் வகையில் செய்கிறார்கள் என்று விஜே மகேஸ்வரி தன்னுடைய கருத்தை கூறி இருக்கிறார்.

கருத்து சொல்ல தயங்கியது இல்லை
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட விஜே மகேஸ்வரி ஒரு தொகுப்பாளராக ஏற்கனவே பலருக்கும் பரீட்சையமானவர் தான். இவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருவார். அடிக்கடி புகைப்படங்களை எடுத்து தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருவது இவருடைய வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.பிக்பாஸ் வீட்டிற்குள் தன்னுடைய கருத்தை ஆரம்பத்தில் இருந்தே எந்த இடத்திலும் தயங்காமல் எடுத்து வைத்த ஒரு போட்டியாளராக இவர் இருந்தார். இவருக்கு என்று ரசிகர்கள் அதிகமாக இருந்தாலும் நெகட்டிவ்வர்ஸ்கும் பஞ்சமில்லாமல் அதிகரித்துக் கொண்டிருந்தனர்.

சிலருடைய தவறான செயல்
தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் பல்வேறு சோகங்களை தாண்டி போராடி தன்னுடைய ஒரே மகனை வளர்த்து வரும் மகேஸ்வரியை சமூக வலைத்தளத்தில் அதிகமானோர், அவர்களுடைய கருத்துக்கும் விஜே மகேஸ்வரியின் கருத்துக்கும் பொருத்தம் இல்லாததால் விஜே மகேஸ்வரியை மட்டுமல்லாமல் அவருடைய மகனையும் சமூக வலைத்தளத்தில் பலர் திட்டி ட்ரோல் செய்து வருகின்றனர். ஒரு நபர் பிரபலமாக இருந்தாலும் சரி, சாதாரண நபராக இருந்தாலும் சரி பிடிக்கவில்லை என்றால் சமூக வலைதளத்தில் தவறாக சித்தரிப்பது சுய மரியாதையை இழக்கும் வகையில்
செயல்படுவது மற்றும் அவர்களை அவ மரியாதை செய்வது போன்ற செயல்களை தொடர்ந்து பலர் செய்து வருகிறார்கள்.

போலீஸ் கம்ப்ளைன்ட்
விஜே மகேஸ்வரி பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது மட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் அவருடைய கேரக்டர் அப்படியேதான் இருந்து வருகிறது. அதனாலயே அவருக்கு அதிகமான நெகட்டிவ் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். விஜே மகேஸ்வரியின் மகனின் புகைப்படத்தையும் விட்டு வைக்காத சில நெட்டிசன்கள் செய்த செயல் பலருக்கும் வெறுப்பை தான் ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் விஜே மகேஸ்வரி ஒரு சில சமூக வலைத்தள அக்கவுண்டுகள் வைத்திருப்பவர்களின் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறார் ஆனால் அதற்கு முன்பு கூட வார்னிங் கொடுத்து இருந்தார்.

ரசிகர்கள் பாராட்டு
இந்த நிலையில் விஜே மகேஸ்வரி துணிச்சலை பலர் பாராட்டி வருகிறார்கள். அவர்களுக்கு மகேஸ்வரி முதல் முறையாக நன்றி கூறியிருக்கிறார். உங்களை போன்ற நல்ல எண்ணம் கொண்டவர்கள் என்னுடன் இருக்கும் வரை எல்லாமே நல்லது தான் நடக்கும். அனைத்து ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி. அனைத்து நேர்மறையான கருத்துக்களுக்கு நன்றி என்று இவர் தன்னுடைய பக்கத்தில் பதிவு வெளியிட்டு அவருக்கு ஆதரவு கொடுத்து வரும் ரசிகர்களை டேக் செய்திருக்கிறார். தற்போது அதிகமான ரசிகர்கள் விஜே மகேஸ்வரியின் துணிச்சலை பாராட்டி கருத்து கூறி வருகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications