ஷிவானி உட்பட சில போட்டியாளர்களின் முகத்திரையை கிழித்த அசீம்.. லைவிலே இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசீம் இதற்கு முன்பு ஒளிபரப்பான நான்காவது சீசனில் இருந்த போட்டியாளர்களை குறித்து பங்கமாக கலாய்த்து இருக்கிறார்.
இதற்கு முன்பு ஐந்து சீசன்கள் நடைபெற்று இருந்தாலும் குறிப்பாக நான்காவது சீசன் போட்டியாளர்களை மட்டுமே அசீம் பற்றி பேசி இருப்பதால் அதை குறித்து பல்வேறு கருத்துக்கள் வலம் வருகிறது.

ஸ்பெஷல் அனுமதி இருக்கிறதா
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி இன்றோடு 66-வது நாட்கள் ஆகின்றது இதில் 21 போட்டியாளர்களோடு தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 11 போட்டியாளர்கள் மட்டுமே விளையாடி வருகின்றனர். இதனால் இவர்கள் டாஸ்க் நேரம் போக மீதமிருக்கும் நேரத்தில் ஏதாவது வெட்டி கதைகளை பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த மாதிரி சூழ்நிலையில் தான் அசீம் கடந்த சீசனில் விளையாடிய போட்டியாளர்களை குறித்து எதார்த்தமாக பேச அதை அப்படியே ரெக்கார்டு செய்த நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் பரப்பி அசீமிற்க்கு மட்டும் ஸ்பெஷல் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறதா? இதற்கு முந்தைய சீசனில் பாலாஜி முருகதாஸ் அதற்கு முந்தைய சீசனில் கலந்து கொண்ட முகின் பற்றி பேசியதை குறித்து வார்னிங் கொடுக்கப்பட்டது ஆனால் இப்போது இப்படி ஒன்றும் இல்லையே என்று கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

போட்டியாளர்களை கலாய்த்த அசீம்
அசீம் மற்றும் மைனா நந்தினி, மணிகண்டன் என ஒரு சிலர் பெட்ரூம் அறையில் கட்டிலில் படுத்தபடியே பேசிக்கொண்டிருக்க அப்போது அசீம், ஆஜித் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏதாவது பண்ணி இருக்கானா என சொல்லு? ஷிவானி ஏதாவது பண்ணி இருக்காளா என்ன சொல்லு? இல்ல ரியோ கூட பெருசா எதுவுமே பண்ணல, நிஷா எதற்காக வந்தார் என பார்க்கிறவங்களுக்கும் தெரியல, அவருக்கும் தெரியல. அதுபோல ஜித்தன் ரமேஷ் என்ன பண்ணுனாரு? ஜித்தன் ரமேஷ், ரியோ, நிஷா, ஷிவானி, ஆஜித் என எல்லோரும் என்ன பண்ணுனாங்கன்னு சொல்லு என அசீம் மணிகண்டனிடம் கேள்வி கேட்டு இருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

முந்தைய சீசனை பற்றிய அலசல்
ஆனால் இந்த பேச்சை ஆரம்பத்தில் மணிகண்டன் தான் துவங்கி இருக்கிறார் என்று மேலும் ஒரு வீடியோவை நெட்டிசன்கள் பகிர்ந்து இருக்கின்றனர். அதில் அந்த சீசனில் ஒரு பொடி பையன் பாட்டெல்லாம் பாடிகிட்டு இருப்பானே அவன் பெயர் என்ன என மணிகண்டன் கேட்க, மைனா அவன் பெயர் ஆஷித் என கூற, அவன் என்ன செய்து விட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டுப் எத்தனை நாளில் போனான் என கேட்க, அவன் ப்ரிஸ் டாஸ்க் எல்லாம் முடிச்சிட்டு தான் போனான் என சொல்லவும்தான் அசீம் ஆரம்பித்திருக்கிறார். அவன் ஒண்ணுமே பண்ணவில்லை என அவர்கள் எல்லாம் இங்கே ஒன்றுமே பண்ணவில்லை என்று பேசிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் ஏற்கனவே ஷிவானிக்கும் இவருக்கும் காதல் என்று செய்தி அடிபட்டதனால் தான் அசீம் மனைவியோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து இருந்ததாக அந்த நேரத்தில் செய்திகள் பரவி வந்தது.

கருத்துக்கு எதிர்ப்பும் ஆதரவும்
அதுபோல நான்காவது சீசனில் அசீம் வைல்ட் கார்டு என்ட்ரியாக கலந்து கொள்வதாக இருந்தது. அப்போது அவருடைய அம்மா ஷிவானி இருப்பதால் கலந்து கொள்ள வேண்டாம் என்று பிரச்சனை செய்து தான் அந்த சீசனில் கலந்து கொள்ளவில்லை என்றும் அந்த நேரத்தில் தகவல்கள் வெளியானது. ஆனால் இப்போது அந்த சீசனை மட்டும் குறிப்பிட்டு இவர்கள் பேசி இருப்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கிறது. இன்னும் ஒரு சில ரசிகர்கள் இதே கருத்தை விக்ரமன் பேசியிருந்தால் இவர்கள் வேறு விதமாக பிரச்சனை செய்திருப்பார்கள். ஆனால் கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் இவர்கள் பேசினால் மட்டும் சரியா? என்றும் கேள்வி எழுப்ப, இன்னும் ஒரு சில ரசிகர்கள் இவர்கள் குறிப்பிட்ட அந்தப் போட்டியாளர்கள் குறித்து எங்களுக்கும் இதே கருத்துதான் இருக்கிறது, அசீம் அதை தான் கூறி இருக்கிறார் என்று அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications