18+ வேலையை செய்றது யாரு? என் கண்ணால் பார்த்தேன்.. அந்த பொண்ணு கிட்ட.. நிக்சனை கதறவிட்ட அர்ச்சனா
இதில் பிரதீப் மீது நிக்சன், அவர் 18+ காமெடி செய்கிறார். எப்போதும் இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார். பாத்ரூம்க்கு போகும்போது கதவை பூட்டிக் கொள்ள மாட்டேன் என்கிறார் என்று குற்றச்சாட்டு வைத்திருந்தார்.

இந்த நிலையில் இத்தனை குற்றச்சாட்டு வைத்த நிக்சன் ஐசுவிடம் நடந்து கொண்ட விதத்தை குறித்து அர்ச்சனா விசித்திராவிடம் பேசிக் கொண்டிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அங்கு சண்டை சச்சரவுகளும் காதல் கண்டென்டுகளும் பஞ்சமில்லாமல் தான் ஒவ்வொரு சீசனிலும் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்தே கண்டென்ட் கொடுக்கிறோம் என்கிற பெயரில் போட்டியாளர்கள் தங்களுக்கு பிடிக்காத போட்டியாளர்களை உருவ கேலி செய்தும் கெட்ட வார்த்தை பேசிக் கொண்டும் இரட்டை அர்த்த வசனங்களை பேசிக் கொண்டும் சிலர் இருக்கின்றனர்.
இந்த நிலையில் மாயா குரூப்பில் தலைவராக ஆரம்பத்தில் இருந்து வந்த பிரதீப் கடந்த வாரம் சிலரால் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு பெண்களுக்கு இவரால் பாதுகாப்பு இல்லை என்று சொல்லி இவருக்கு கமல் ரெட் கார்ட் கொடுத்து இவரை வெளியே அனுப்பி வைத்திருந்தனர். பிரதீப் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளில் இருந்து முக்கிய போட்டியாளராக தான் இருந்து வந்தார்.
ஆரம்பத்தில் வெளிப்படையாக பேசிக்கொண்டிருந்த பிரதீப்பை தான் பார்க்க முடிந்தது. ஆனால் சுமால் பாஸ் வீட்டிற்குள் மாயா, ஐசு உடன் பிரதீப் போன பிறகுதான் மாயாவின் சதி வலையில் வீழ்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அதுவரைக்கும் தனியாக விளையாடிக் கொண்டிருந்த பிரதீப் அதற்குப் பிறகு மாயாவோடு சேர்ந்து கூட்டாக விளையாட தொடங்கினார்.
அதிலும் ராகிங் டாஸ்க்கில் தன்னுடைய முதல் இடத்தை மாயாவுக்கு விட்டுக் கொடுத்தது மக்கள் மத்தியில் பெரிய அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியது. நான் என்ன ஆனாலும் அந்த இடத்தை விட்டு போக மாட்டேன் என்று அவர் நின்று இருந்தால் இன்னும் வேற மாதிரி இருந்திருக்கும். ஆனால் பிரதீப் மாயா காசை நீ வச்சுக்கோ டைட்டில் எனக்கு கொடுத்துடு என்று போட்ட டீலிங்கால் இவருடைய இமேஜ் குறைந்துவிட்டது.
அதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததுமே அனைவரையும் வச்சு செய்யப் போறேன்னு சொன்ன பிரதீப் மாயா எனக்கு தங்கச்சி என்று சொன்னது தான் அவருடைய விளையாட்டில் இருந்து வழுக்கி விழுந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அது மட்டும் அல்லாமல் விளையாட்டில் ஒரு வியூகம் என்று நினைத்துக் கொண்டு எல்லாரிடமும் லவ் கண்டென்ட் கொடுத்ததும் பிரதீப் மீது அதிருப்தி ஏற்பட வைத்தது.
ஆரம்பத்தில் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வந்ததும் பிரதீப் வைல்ட் கார்ட் போட்டியாளர்களே ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்குள் அனுப்ப வேண்டும், அவர்களை நாமினேஷன்க்கு கொண்டு வந்து எலிமினேசன் ஆக்க வேண்டும் என்றெல்லாம் மாயா பூர்ணிமா ஜோவிகாவோடு பிளான் போட்டுக் கொண்டிருந்தார். ஆனால் ஒரே வாரத்திற்குள் மாயா குரூப் பிரதீப்புக்கே பிளான் போட்டு பிரதீப்பை வெளியே தூக்கி விட்டிருக்கின்றனர்.
இப்படியாக இருக்கும் நிலையில் கமல் முன்பு கடந்த சனிக்கிழமை எபிசோடில் பிரதீப் மீது பலர் பல குற்றச்சாட்டுகளை சொல்லிக் கொண்டிருந்தனர். அப்போது நிக்சன், பிரதீப் 18+ காமெடி செய்து கொண்டே இருக்கிறார். சில பெண்களிடம் லவ் கன்டென்ட் கொடுக்கிறேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
அதுபோல பாத்ரூம் போகும்போது கதவை பூட்ட மாட்டேன் என்கிறார் என்று சில குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் அது குறித்து அர்ச்சனா சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார். அதாவது பிரதீப் மீது நிக்சன் அப்படி ஒரு குற்றச்சாட்டு வைத்தார். ஆனால் நேற்று நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஐசு வேஷ்டி கட்டி இருந்தது.
அப்போது நிக்சன் அந்த பொண்ணு இடுப்பில் கை வைத்து அந்த பொண்ணுக்கு வேஷ்டியை சொருகி விடுறான். இதுவெல்லாம் 18+ கிடையாதா? இதையும் தான் குழந்தைகள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று அர்ச்சனா கேட்டிருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது .
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications