கமல் கேட்காத கேள்வியை கேட்ட அர்ச்சனாவின் அப்பா.. குவியும் பாராட்டு.. ஆனால் அந்த பிரபலம் இப்படி சொல்லிட்டாங்க
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் அர்ச்சனாவின் அப்பா கமல்ஹாசன் கேட்க மறந்த கேள்வியை கேட்டு பலருடைய பாராட்டை பெற்று வருகிறார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் நேற்று அர்ச்சனாவின் குடும்பத்தினர் ஃப்ரீஸ் டாஸ்க்கில் கலந்து கொண்டிருந்தனர். அப்போது அர்ச்சனாவின் அப்பா சகஜமாக எல்லோரிடமும் பேசி இருந்த நிலையில் நிக்சனிடம் கேட்ட கேள்வி குறித்து பலரும் விவாதித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் அர்ச்சனாவின் அப்பா பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்து கொண்ட விதத்தை சில பிரபலங்கள் பாராட்டியும் சிலர் விமர்சித்தும் இருக்கிறார்கள். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.
அந்த வகையில் இதுவரைக்கும் இல்லாத வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கமல்ஹாசன் பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் பின்னடைவை சந்தித்திருக்கிறார். இதுவரைக்கும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதை பலரும் பாராட்டி இருந்தாலும், இந்த சீசனில் மாயா குரூப்புக்கு ஆதரவாக ஒருதலை பட்சமாக கமல்ஹாசன் நடந்து கொள்கிறார் என்பது பலருடைய குற்றச்சாட்டாக இருக்கிறது.
அதே நேரத்தில் நிக்சனுக்கு ஆதரவாகவும் கமல்ஹாசன் நடந்து கொள்கிறார்.. நிக்சன் செய்யும் பல செயல்களை கமல்ஹாசன் விசாரிக்கவில்லை என்பது பலருடைய வருத்தமாகவும் இருக்கிறது. ஆனால் ஃப்ரீஸ் டாஸ்க்கில் நேற்றைய எபிசோடில் அர்ச்சனாவின் குடும்பத்தினர் கலந்து கொண்டிருந்தனர்.

அப்போது எல்லோரிடமும் சகஜமாக பேசிக் கொண்டிருந்த அர்ச்சனாவின் அப்பா அருகில் இருந்த நிக்சனிடம் நான் ஒன்று உங்க கிட்ட சொல்லணும் என்று சொல்ல, அதற்கு நிக்சன் என்ன சொல்லுங்க என்று கேட்க, அதற்கு நீங்க ஒரு ஒருமுறை பேசிக்கொண்டு இருக்கும் போது அர்ச்சனாவை கள்ளிப்பால் ஊத்தி கொன்னுருக்க வேண்டும் என்று சொன்னீங்க... இது கேட்பதற்கு எனக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது என்று சொல்லி இருந்தார்.
அதைக் கேட்டு நிக்சன் என்னது நானா அப்படி சொன்னேன்? என்று அதிர்ச்சியாகி கேட்டிருந்தார். இது பெரிய அளவில் இப்போது இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. எப்போதோ நடந்த இந்த கள்ளிப்பால் ஊத்தி பெண்களை கொலை செய்யும் பழக்கத்தை, பெரிய அளவில் கஷ்டப்பட்டு போராடி தடுத்து நிறுத்தி இருக்கும் நிலையில் இப்போது உள்ள இளைஞர் இந்த மோசமான முறையை சகஜமாக பேசி வருவது தவறான ஒரு செயல்.
இதை கமல்ஹாசன் கண்டித்திருக்க வேண்டும் என்று நிக்சன் பேசியிருந்த அந்த சமயத்திலேயே பலரும் கருத்து கூறியுள்ளனர். ஆனால் அந்த நேரத்தில் கமல்ஹாசன் இது பற்றி பேசவில்லை. ஆனால் நேற்று அர்ச்சனாவின் அப்பா இந்த கேள்வியை கேட்டிருப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர். அதில் பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான சனம் ஷெட்டி அர்ச்சனாவின் அப்பா செய்த இந்த செயல் சூப்பராக இருந்தது.
கண்டிப்பாக இப்படி ஒருவர் முகத்துக்கு நேராக பேசினால்தான் ஒருவர் தப்பு பண்ணும் போது எப்போதாவது இப்படி யாராவது வந்து நம்மிடம் கேள்வி கேட்டால் என்ன ஆகும் என்ற நினைப்பு கண்டிப்பாக வரும் என்று கூறியிருக்கிறார். அதேபோல பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து வரும் வனிதா அர்ச்சனாவின் அப்பா இப்படி கேட்டதற்கு விமர்சித்து பேசி இருக்கிறார். அதாவது பிக் பாஸ்க்கு வெளியே என்ன நடக்கிறது என்பதை பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இப்படி சொல்லலாமா?

அதுவும் அர்ச்சனாவின் அப்பா பிக் பாஸ் வீட்டிற்குள் கேள்வி கேட்டது தவறு. அவர் ஒரு அப்பாவாக உள்ளே சென்று இருக்கிறார். தன்னுடைய பிள்ளைக்கு அட்வைஸ் செய்ய வேண்டும் அவ்வளவுதான். அடுத்தவர்களை கேள்வி கேட்கக்கூடாது என்று கூறியிருக்கிறார். அதே நேரத்தில் நிக்சன் பிக் பாஸ் வீட்டிற்குள் 24 மணி நேர லைவில் கள்ளிப்பால் ஊத்தி இவளை கொல்லனும் என்று சொன்னது அர்ச்சனாவே இல்லை ரவீனாவை தான் என்று வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆனாலும் நிக்சன் சொன்னது அர்ச்சனாவாக இல்லாவிட்டாலும் ரவீனாவும் ஒரு பெண்ணு தானே, எப்படி எல்லோரும் மோசம் என்று வெறுத்து ஒதுக்கிய ஒரு செயலை இப்போது செய்திருக்க வேண்டும் என்று சொல்லலாம் என்பதும் பலருடைய கேள்வி தான்.












Click it and Unblock the Notifications