பிரதீப்பை மீண்டும் அசிங்கப்படுத்திய பிக் பாஸ்.. நேற்று கூட அப்படி! இன்றைக்கும் இப்படியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்து பிக்பாஸ் வெளியே அனுப்பி வைத்திருந்தார். ஆனால் இப்போது மீண்டும் பிரதீப்பை கேவலப்படுத்தும் விதமாக பிக் பாஸ் வீட்டிற்குள் நடைபெற்றிருக்கிறது என்று அவருடைய ரசிகர்கள் பிக் பாஸை திட்டி வருகின்றனர்.

ஏற்கனவே பிரதீப் பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது என்று காரணத்தை சொல்லி சில போட்டியாளர்கள் சிவப்பு கொடி தூக்கி கம்பளைண்ட் செய்ததால் கமல்ஹாசன் மற்றும் பிக் பாஸ் தரப்பினர்கள் பிரதீப்க்கு உடனடியாக ரெட் கார்ட் கொடுத்து அவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி வைத்திருந்தனர்.

ஆனால் நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் அவரை அசிங்கப்படுத்தும் விதமாக சில செயல்பாடுகள் நடைபெற்றிருக்கிறது. அதை குறிப்பிட்டு ரசிகர்கள் பிக் பாஸிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏற்கனவே பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்தது சரியில்லை என்றும் பலர் இப்போதும் கூறிவரும் நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக்க பார்க்கலாம்.

bigg boss tamil season 7 contestant Pradeep photo not in bigg boss paner

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இதுவரைக்கும் இல்லாத வகையில் சண்டை சச்சரவுகளால் மட்டும் தான் அதிகமாக பிரபலமடைந்து வருகிறது. இதற்கு முந்தைய சீசன்களை ஒப்பிடும்போது இந்த சீசனில் முழுக்க சண்டை சச்சரவுகளும் வண்ணம் நிறைந்ததும் ஆக இருக்கிறது. இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்தே இரட்டை அர்த்தமுள்ள வசனங்களும் கெட்ட வார்த்தைகளும், 18+ காமெடிகளும் தான் அதிகமாக பேசப்பட்டு வந்தது.

இது குறித்து கமல்ஹாசன் கண்டித்தாலும் பிக் பாஸ் போட்டியாளர்கள் மீண்டும் மீண்டும் இதையே செய்து வருகின்றனர். இப்படியான நிலையில் தான் நிகழ்ச்சி தொடங்கி சில வாரங்களிலேயே பிரதீப் பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பதால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற ஒரு காரணத்தை சொல்லி அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

அதுவரைக்கும் இந்த சீசனின் டைட்டில் வின்னர் பிரதீப் தான் என்று ரசிகர்கள் அடித்து கூறி வந்த நிலையில் பிரதீப்புடைய வெளியேற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாத பல ரசிகர்களும் பிரபலங்களும் பிக்பாஸுக்கு எதிராக தொடர்ச்சியாக கருத்து வெளியிட்டு வந்தனர். இப்படியான நிலையில் இந்த சீசன் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது.

அதாவது வரும் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 14-ஆம் தேதி இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் நேற்று இந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேஷன் ஆகி வெளியே போன போட்டியாளர்கள் வர தொடங்கி இருக்கின்றனர். அதில் நேற்று அக்ஷயா, அனன்யா, வினுஷா மூவரும் வந்திருக்கின்றனர். அதைத்தொடர்ந்து இன்று விக்ரம், கூல் சுரேஷ் போன்றோரும் வந்திருக்கின்றனர்.

இப்படியான நிலையில் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட பிரதீப் வருவாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் உள்ளே வருவதற்கு வாய்ப்பு இல்லை என்பது உறுதியான தகவலாக இருக்கிறது. அதே நேரத்தில் நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த சீசனில் கலந்து கொண்ட எல்லா போட்டியாளர்களுடைய புகைப்படங்களும் வைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் அதில் பிரதீப்புடைய புகைப்படம் இடம்பெறவில்லை. அதேபோல பவா செல்லத்துரையின் புகைப்படங்களும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் பிரதீப்புடைய ரசிகர்கள் எதற்காக பிரதீப்பை இப்படி கேவலப்படுத்துகிறார்கள்? நேற்று கூட பிக் பாஸ் வீட்டிற்குள் குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. அதில் பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த விதிமீறல்கள் என்று குறிப்பிட்டு வெளியிட்ட படத்திலும், உள்ளே நடந்த சண்டைகள் என்று வெளியிட்ட படத்திலும் கூட பிரதீப் இடம் பெற்றிருந்தார்.

ஆனால் உள்ளே வைத்து இருந்த பேனரில் மட்டும் பிரதீப் போட்டோவை வைக்காதது ஏன் என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். அப்படி என்றால் பிக் பாஸ் நிகழ்ச்சி பிரதீப்பை விளம்பரத்திற்காக மட்டும்தான் பயன்படுத்திக் கொண்டு பேனரில் மட்டும் பிரதீப் போட்டோவை வைக்காதது ஏன் என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். அப்படி என்றால் பிக் பாஸ் நிகழ்ச்சி பிரதீப்பை விளம்பரத்திற்காக மட்டும்தான் பயன்படுத்திக் கொள்கிறார்களா? என்று சிலர் திட்டியும் வருகிறார்கள். இது பற்றி உங்களுடைய கருத்து என்ன என்பதை கமெண்ட் பாக்ஸில் சொல்லிட்டு போங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+