விசித்ராவின் ரகசியத்தை உடைத்த கூல் சுரேஷ்.. கமலே அதிர்ச்சியான தருணம். இவ்வளவு கவனிச்சி இருக்காரா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் விசித்ரா பற்றி பல தகவல்களை நேற்றைய எபிசோடில் கமல் முன்பு பேசி இருந்தார்.
கடந்த இரண்டு நாட்களாக விசித்ரா மற்றும் கூல் சுரேஷின் கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில் விசித்ராவின் நடவடிக்கைகள் பற்றி கூல் சுரேஷ் கமலிடம் கம்ப்ளைன்ட் செய்திருக்கிறார்.
அதே நேரத்தில் கூல் சுரேஷ் சொன்ன வார்த்தையை கேட்டு கடும் கோபத்தில் விசித்திரா இருக்கிறார் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து நடிகை விசித்ராவிற்கு அதிகமான வரவேற்பு இருக்கிறது. இதுவரைக்கும் எந்த சீசனிலும் வயதான போட்டியாளர்கள் இத்தனை நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்ததில்லை. ஒரு சில வாரங்களில் வயதில் மூத்த போட்டியாளர்கள் தான் அனுப்பப்படுவார்கள். ஆனால் இந்த முறை விசித்திரா ரசிகர்களின் மனதை கவர்ந்து இத்தனை நாட்களாக பயணித்துக் கொண்டிருக்கிறார்.
அதிலும் ஆரம்பத்தில் ஜோவிகா மற்றும் விசித்ராவிற்கு இடையே ஏற்பட்ட கல்வி குறித்த பிரச்சனை ரசிகர்களின் மத்தியில் விசித்திராவிற்கு அதிகமான வரவேற்பை வாங்கி தந்தது. அதற்கு பிறகு அர்ச்சனாவை சக போட்டியாளர்கள் டார்கெட் செய்த போது அர்ச்சனாவிற்கு ஆதரவாக விசித்திரா குரல் கொடுத்ததும் பலராலும் பாராட்டப்பட்டது. அதை தொடர்ந்து தான் விசித்ரா கதை சொல்லும் டாஸ்கில் தெலுங்கு நடிகர் தனக்கு கொடுத்த பாலியல் தொல்லை பற்றி பேசும் போது அதிகமானோர் விசித்திராவிற்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.
இப்படியான நிலையில் ஒரு சில நாட்களாக பூர்ணிமா மற்றும் மாயா கேங்கோடு சேர்ந்து விசித்திரா விளையாடி வருவது ரசிகர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை கூல் சுரேஷ் கமல் முன்பு சொல்லி இருந்தார். அதாவது இந்த வாரத்தில் சில நாட்களாக போட்டியாளர்கள் சிலருடைய கைகள் கயிற்றால் கட்டப்பட்டிருந்தது.
அந்த வகையில் விசித்ரா மற்றும் கூல் சுரேஷின் கைகள் கட்டப்பட்டிருந்தது. அப்போது விஷ்ணு மற்றும் அர்ச்சனா இடையே சண்டை நடந்தது. அந்த நேரத்தில் அதை தடுப்பதற்காக விசித்திரா எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை என்று நேற்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு விசித்திரா என் கைகள் கூல் சுரேஷ் உடன் கட்டப்பட்டுள்ளது. அவர் என்னை அங்கே விடவில்லை. அதனால் தான் என்னால் போய் இந்த சண்டையில் எதுவும் செய்ய முடியாமல் ஆனது என்று சொல்லி இருந்தார்.
அதற்கு கூல் சுரேஷ் விசித்திரா சொல்வதெல்லாம் பொய். என்னிடம் எப்போதுமே அர்ச்சனாவுக்கு பிரச்சனை நடக்கும்போது போக வேண்டும் என்று சொல்லவில்லை. நிக்சன் இடம் போய் நான் போகட்டுமா என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதுபோல ஒரு வேளை அர்ச்சனா சண்டை நடக்கும் இடத்திற்கு விசித்திரா போய் இருந்தாலும் அங்கு தீர்த்து வைத்திருக்க மாட்டார். சண்டையை பெரிதாக்கி அதில் குளிர் காய்ந்திருப்பார். அதனால் தான் நான் விசித்திராவை அங்கே போக அனுமதிக்கவில்லை.
அதுபோல அர்ச்சனா அழுது கொண்டிருக்கும் போது கேட்காத விசித்திரா அடுத்த நாள் ஜோவிகா அழுது கொண்டிருக்கும் போது பதறுகிறார். நீங்க போய் கேளுங்க என்ன ஆச்சுன்னு பாருங்க என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்று அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை கூல் சுரேஷ் வைத்திருந்தார். இதுவரைக்கும் கூல் சுரேஷ் காமெடியனாக பார்த்திருந்த ரசிகர்களுக்கு நேற்றைய எபிசோட்டில் அவர் பேசிய விதம் பலரையும் கவர்ந்திருந்தது. கூல் சுரேஷ் பேசியதை பார்த்து கமல் ஒரு நிமிடம் திகைத்துப் போயிருந்தார்.












Click it and Unblock the Notifications