பிக் பாஸ் 7: வேஷம் கலைந்து விட்டது.. உள்ளே நடந்தது இதுதான்.. மிரட்டிய கமல்ஹாசன்.. அப்போ அவ்வளவுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிசம்பர் 16ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் இந்த வார தொகுப்பாளராக மீண்டும் கமல்ஹாசன் வந்திருக்கிறார். அவர் இந்த வாரம் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் குறித்து பேசி இருக்கிறார்.

அதோடு உள்ளே கலை நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு சிலர் போட்ட பிளான்கள் பற்றியும் கமல்ஹாசன் உடைத்திருக்கிறார். இதனால் இந்த வாரமும் அர்ச்சனா மற்றும் தினேஷுக்கு எதிராக கிளாஸ் எடுக்க கமல் தொடங்கி இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

 Bigg Boss Tamil season 7 December 16th promo 1 and fans reaction

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இதுவரைக்கும் இல்லாத வகையில் அதிகமான நெகட்டிவ் கருத்துக்களை பெற்று வருகிறது. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன் இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் அதிகமாக ரசிகர்களின் மத்தியில் நெகட்டிவ் இமேஜ் உருவாக்கி வைத்திருக்கிறார். காரணம் பிரதீப்பை திடீரென்று எலிமினேஷன் செய்து வெளியே அனுப்பியது...

பிறகு அடிக்கடி மாயா மற்றும் பூர்ணிமா கேங்குக்கு ஆதரவாக கமல்ஹாசன் பேசுவது போன்றவை ரசிகர்களின் மத்தியில் கமலுடைய இமேஜை குறைக்க தொடங்கி இருக்கிறது. அதிலும் கடந்த வாரத்தில் தப்பு செய்த நிக்சனுக்கு சாதாரணமாக லேசாக பூசி மொழுகுற மாதிரி பேசிவிட்டு பிறகு தினேஷ், அர்ச்சனா, விஷ்ணு போன்றோரை இரண்டு நாட்களாக கதறவிட்டது ரசிகர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

 Bigg Boss Tamil season 7 December 16th promo 1 and fans reaction

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் வெளியேறப் போகிறார் என்றும் அவருக்கு பதிலாக புதியதாக நான்கு நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் சில தகவல்கள் இணையத்தில் பரவி வந்தது. அதே நேரத்தில் இந்த வாரத்தில் இருந்தே புது தொகுப்பாளர் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என்றும் கூறப்பட்டது.

இதனால் இன்றைய எபிசோடுகான ப்ரோமோவிற்கு ரசிகர்களின் மத்தியில் ஆர்வம் அதிகமாக இருந்தது. அதன் அடிப்படையில் இப்போது இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இன்று கமல்ஹாசன் தான் மீண்டும் தொகுப்பாளராக வந்திருக்கிறார். அதோடு ப்ரோமோவில் கலையும் கலை உணர்வும் வன்மத்தை கோபத்தையும் தணிக்கிறது.

 Bigg Boss Tamil season 7 December 16th promo 1 and fans reaction

அதற்கான சாயல்கள் வீட்டில் தெரிந்தது. ஆனால் அந்த வேஷம் கலைந்த பிறகு இந்த ஆளை எப்படி காலி பண்றது, அந்த ஆளை எப்படி காலி பண்றது? இவரை எப்படி கவுக்கலாம், அவரை எப்படி கவுக்கலாம்? இப்படி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போ வார ஆரம்ப நாட்களில் பூசிக்கொண்ட அந்த பூச்சி நிஜ பூச்சி அல்லயா? சாயம் கலைந்து விட்டதா?? என்று விசாரிப்போம் என்று கமல்ஹாசன் பேசியிருக்கிறார்.

இந்த ப்ரோமோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதே நேரத்தில் இந்த வாரமும் அர்ச்சனா மற்றும் தினேஷை குறித்துதான் கமல்ஹாசன் இப்படி பேசுகிறாரா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். காரணம் கலை நிகழ்ச்சிகளில் இவர்கள் இருவரும் தான் சிறப்பாக செயல்பட்டிருந்தனர் என்பது பலருக்கும் தெரியும்.

அதற்காக ஆரம்பத்தில் பாராட்டுவது போல பாராட்டி பிறகு இந்த வாரமும் இவர்களை திட்டி, என்டர்டைன்மென்ட் செய்யப் போகிறாரா? என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதோடு கமல்ஹாசன் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியை கையாண்டு வரும் விதம் குறித்து உங்களுடைய கருத்துக்களை இதில் தெரிவியுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+