பிக் பாஸ் 7: நீங்க 2 பேரும் அப்படித்தானே இருக்கீங்க? போட்டு உடைத்த விசித்திரா.. மாயா சொன்ன பதில்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிசம்பர் 18ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு போட்டியாளர்களை அனுப்பி வைக்கும் போது விசித்ரா மற்றும் மாயா இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
அதைத் தொடர்ந்து பூர்ணிமாவும் மாயாவும் சண்டை போட்டு பிரிந்து இருக்கின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் அதிகமாக சண்டை சச்சரவுகளில் தான் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அதிலும் கடந்த வாரத்தில் கமல்ஹாசன் இந்த வீட்டிற்கு வன்மம் மட்டும் தான் அதிகமாக இருக்கிறது. என்டர்டைன்மெண்ட் இல்லவே இல்லை என்று திட்டிய பிறகு எல்லாரும் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்பது போல மாறி இவர்களாய் இத்தனை நாட்களாக இப்படி சண்டை போட்டுக் கொண்டிருந்தது என்று யோசிக்க வைத்திருந்தனர்.
அதே நேரத்தில் கமல்ஹாசன் நேற்றைய எபிசோட்டில் ஒரு சிலர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் போது தனக்குள் இருந்த கலைஞனை வெளிக்காட்டிய பிறகு அந்த வேஷம் கலைந்ததும் அவர்கள் போட்டிருந்த வேஷத்தையும் கலைத்து விட்டார்கள், அதற்குப் பிறகு அவர்களுடைய வன்மம் மீண்டும் வெளியே வந்தது. அதனால் அடுத்த வாரத்தில் யாரை தூக்கலாம் என்று பேசிக்கொண்டிருந்தார்கள் என்று தோலுரித்துக் காட்டியிருந்தார்.

இந்த நிலையில் அதை நிரூபிக்கும் வகையாக இன்றைய எபிசோட்டின் முதல் ப்ரோமோவில் மீண்டும் சண்டை தொடங்கி இருக்கிறது. அதுபோல சனிக்கிழமை எபிசோட்டின் கூல் சுரேஷ் வெளியேற்றப்பட்டு இருந்தார். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பு இந்த வாரத்தில் செல்வதற்காக ஆறு போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து சொல்லுங்கள் என்று பிக் பாஸ் கூறியிருக்கிறார்.
அப்போது விசித்திரா மாயாவும் பூர்ணிமாவும் ஒண்ணா இருந்தாங்கன்னா அவங்க ரெண்டு பேரும் ஒரு செப்பரேட் வேர்டுக்குள்ள இருக்கிற மாதிரி இருப்பாங்க. சோ அதனால எனக்கு ஓகே இல்லை என்று சொல்கிறார். அதற்கு மாயா திருப்பி திருப்பி மாயா பூர்ணிமா ஒரே கேம் விளையாடுறாங்க என்று சொல்றாங்க. அந்த கேம் உங்களுக்கு எஃபெக்ட் பண்ணலலா, அந்த கேம் உங்க கேமை அஃபெக்ட் பண்ணுதா என்று விசித்திராவிடம் கேட்க அதற்கு விசித்திரா எழுந்து நின்று நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து விளையாடிட்டு எங்களை மைண்டே பண்ண மாட்டீங்க என்று சொல்கிறார்.

அதை தொடர்ந்து பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் தனியாக நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர். தற்போது பூர்ணிமா எனக்கு மைண்ட் உண்மையில் டிஸ்டர்பா இருக்கு என்று சொல்கிறார். அதற்கு மாயா இனிமே நாம ரெண்டு பேரும் பேசவே வேண்டாம் என்று கூறுகிறார். ஏற்கனவே இதுவரைக்கும் மாயா கூட்டணியில் இருந்த விசித்திரா இன்று விலகி இருப்பதால் இந்த வாரத்தில் இனி விளையாட்டு எப்படி வேகம் எடுக்க போகிறதா? இல்லை மீண்டும் சண்டை சச்சரவுகள் மட்டும் இருக்கப் போகிறதா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications