கடைசி நாளிலும் பிக் பாஸில் வெடித்த பிரச்சனை.. நிக்சன் வந்ததும் நடந்த களேபரம்.. விசித்திரா சொன்னதை பாருங்க
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஜனவரி 12ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் நிக்சன், விசித்திரா, விஜய் வர்மா போன்ற பலர் இன்று மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர்.ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேஷன் ஆகி வெளியே போன போட்டியாளர்கள் மீண்டும் வந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் பிரச்சனை வெடித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் இவர்களுக்குள் இருந்த வன்மம் மட்டும் குறையவே இல்லை. இதுவரைக்கும் தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இரண்டு அணியாக இருந்த நிலையில் கடைசி நாளிலும் கூட உள்ளே வந்த போட்டியாளர்கள் இரண்டு அணியாக பிரிந்து கொண்டு கருத்து மோதல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி 100 நாட்களுக்கு மேலே ஆகின்ற நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமையோடு இந்த சீசன் முடிவுக்கு வர இருக்கிறது. அதாவது இன்னும் ஒரு நாள் மட்டும் இருக்கும் நிலையில் இந்த வாரம் முழுக்க ஏற்கனவே இந்த சீசனில் இருந்து எலிமினேஷன் ஆகி வெளியே போன போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் வெளியே என்ன நிலவரம் நடைபெறுகிறது என்பதை வீட்டில் இருக்கும் போட்டியாளர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இப்போது உள்ள நிலவரப்படி பிக் பாஸ் வீட்டிற்குள் 5 போட்டியாளர்கள் மட்டும் தான் இறுதி கட்டத்தில் இருக்கின்றனர். அதாவது அர்ச்சனா, தினேஷ், மாயா, மணி, விஷ்ணு இவர்கள் ஐந்து பேரும் இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் விஷ்ணு இன்று இரவு அல்லது நாளை எலிமினேஷன் ஆகிடுவார் என்று கூறப்படுகிறது.
அதை தொடர்ந்து நான்கு போட்டியாளர்கள் பைனலுக்கு போகும்போது இதில் யார் டைட்டில் ஜெயிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீசனில் மட்டும்தான் இதுவரைக்கும் யார் டைட்டில் ஜெயிக்கப் போகிறார்கள் என்று உறுதியாக கூற முடியாத நிலையில் இருக்கிறது. மாயாவிற்கு சேனல் தரப்பில் அதிகமாக சப்போர்ட் இருப்பதாக மக்கள் மத்தியில் ஒரு பேச்சு வருகிறது.
அதே நேரத்தில் அர்ச்சனாவிற்க்கு பி ஆர் சப்போர்ட் இருப்பதாகவும் அதிகமான குற்றசாட்டுகள் எழுந்து வருகிறது. இந்த இருவர்களில் ஒருவர்தான் டைட்டில் வின்னர் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. ஆனால் என்ன நடக்கப்போகிறது என்பது நாளை உறுதியாக தெரிய வந்துவிடும். நாளை இறுதி போட்டிக்கான சூட்டிங் நடைபெற்றதும் அதற்கான தகவல்கள் வெளியாகும்.
இந்த நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் விசித்ரா, விஜய் வர்மா, நிக்சன் போன்றோர் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்களை பார்த்ததும் கூல் சுரேஷ் அந்தந்த குரூப் எல்லாம் தனியா பிரிங்கப்பா என்று சொல்ல தினேஷ் குரூப் எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து விசித்ரா மாயாவை கட்டிப்பிடித்து கொஞ்சி கொண்டிருக்கிறார். அப்போது நான் வெளியே போய் ஒன்னு ஜெயித்து விட்டு வந்து இருக்கேன் அது என்னன்னு தெரியுமா என்று கேள்வி கேட்க,
அதற்கு மாயா மனசு ஜெயிச்சுட்டு வந்து இருக்கீங்களா? என்று சொல்ல, விசித்ரா ஆமாம் என்று சொல்லி சந்தோஷத்தோடு கொஞ்சிக் கொண்டிருக்கின்றனர். அப்போது நிக்சன் நான் செஞ்சது 30, 40% தான் ஆனா அதை 100% மாதிரி அத ப்ளாஸ்ட் பண்ணிட்டாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் வினுஷா இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். இதனால் அடுத்த பூகம்பம் வெடிக்க இருக்கிறது. நிகழ்ச்சியே முடிவடைந்தாலும் இவர்களுடைய பிரச்சினை மட்டும் என்னைக்குமே முடிவடையாது போல.











Click it and Unblock the Notifications