கண்டன்ட் இல்லாமல் பிக் பாஸ் செய்த செயல்.. இது எந்த சீசனிலும் நடக்காதது.. கமல் கேட்ட பாயிண்ட் சூப்பர்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இதுவரைக்கும் எந்த சீசனிலும் நடக்காத வகையில் நேற்று ரவீனாவின் மைக் செயல் இழந்ததற்கு இரங்கல் கூட்டம் நடத்தி இருந்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கண்டண்ட் இல்லாமல் இந்த மாதிரி மைக்குக்கு இறுதி சடங்கு நடத்தி கொண்டிருப்பது குறித்து இணையத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் இந்த வாரத்தில் பெரிய அளவில் சம்பவங்கள் எதுவும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடைபெறாத போது நேற்று நடந்த முக்கிய நிகழ்வை குறித்து கமல்ஹாசன் இன்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இதுவரைக்கும் உள்ள சீசன்களை விடவும் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனாலும் இந்த சீசன் சர்ச்சைகளால் மட்டும் தான் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.. இந்த சீசன் ஆரம்பமான முதல் சில வாரங்களிலேயே பிரதீப்புடைய வெளியேற்றம் பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்ச்சியை குறித்து இணையத்தில் பேச வைத்தது. அதற்கு பிறகு பிக் பாஸ் தன்னுடைய பெயரை காப்பாற்றிக் கொள்வதற்காக பல முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனாலும் ஒவ்வொன்றும் தோல்விகளைக் கொண்டு இருக்கிறது. கடந்த வாரத்தில் அர்ச்சனா மற்றும் நிக்சன் இடையே ஏற்பட்ட சண்டையில் நிக்சன் அர்ச்சனாவை வாடி, போடி, நாயே, கருமம் என்றெல்லாம் கண்ட மேனிக்கு பேசியிருந்தார்.

ஆனால் கமல்ஹாசன் நிக்சனுக்கு மஞ்சள் அட்டையை மட்டும் காட்டி விட்டு நிக்சனுக்கு லேசான வார்த்தைகளால் அட்வைஸ் கொடுத்த கமல்ஹாசன் தினேஷ், அர்ச்சனா, விஷ்ணு போன்றோருக்கு கடுமையாக வார்னிங் கொடுத்து இருந்தார். இதுவும் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வாரத்தில் போட்டியாளர்கள் தங்களுடைய விளையாட்டின் போக்கை மாற்றி இருந்தனர்.
அதிலும் கலகலப்பான பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதனால் இந்த வாரத்தில் பெரிய அளவில் பிரச்சனை எதுவும் நடைபெறவில்லை. பிரச்சனைகள் இருந்தால்தான் வார இறுதியில் பஞ்சாயத்து பண்ணுவதற்கு கமல்ஹாசனுக்கு வேலை இருக்கும். இந்த வாரம் பஞ்சாயத்து பண்ணுவதற்கு எந்த வேலையும் இல்லையே என்று நினைத்திருந்த நேரத்தில் நேற்றைய எபிசோடில் சில செயல்கள் நடைபெற்று இருக்கிறது.
அதாவது நேற்று முழுக்க பெரிய அளவில் கன்டென்ட் இல்லை என்பதால் ஒரு மணி நேர எபிசொட்டில் ரவீனாவின் மைக் செயல் இழந்ததை வைத்து அந்த மைக்குக்கு இறுதி அஞ்சலி செலுத்தி அதற்கு அனைவரையும் பேசவைத்து பார்க்கும் ரசிகர்களை கடுப்பாக்க வைத்திருந்தனர். ஆனாலும் என்னதான் நாங்கள் கலகலப்பாக மாறி இருந்தாலும் எங்களுக்குள் இருக்கும் வன்மம் இருக்க தான் செய்யும் என்பதை நிரூபிக்கும் வகையாக தான் நேற்றைய எபிசோடில் நடந்தது.
ரவீனா மைக்குக்கு இறுதி அஞ்சலி செலுத்திய நேரத்தில் தினேஷ், கூல் சுரேஷிடம் அடுத்த வாரத்தில் V+V தூக்கி விட வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார். அது அடுத்த வார நாமினேஷனில் விசித்திரா மற்றும் விக்ரமை குறித்து தினேஷ் இப்படி சொன்னாரா? அல்லது விசித்திரா மற்றும் விஷ்ணுவை குறித்து இப்படி சொன்னாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அதுபோல ஏற்கனவே அடுத்த வாரத்தில் M+Pயை பார்த்துக்க என்று விஷ்ணுவிடம் தினேஷ் கூறியிருந்தார்.
இதனால் இதை வைத்து தான் இன்றைய எபிசோட்டில் கமல்ஹாசன் விவாதிக்க இருக்கிறார் என்பது இன்றைய முதல் ப்ரோமோவில் தெரிகிறது. அதில் கலையும் கலை உணர்வும் வன்மத்தையும், கோபத்தையும் தணிக்கிறது. அதற்கான சாயல்கள் வீட்டில் தெரிந்தது. ஆனால் அந்த வேஷம் கலந்த பிறகு இந்த ஆளை எப்படி காலி பண்றது?
அந்த ஆளை எப்படி காலி பண்றது? இவரை எப்படி கவுக்கலாம்? அவரை எப்படி கவுக்கலாம்? இப்படி கேள்விகள் இந்த வீட்டிற்குள் எழுப்பப்பட்டது. அப்போ வார ஆரம்ப நாட்களில் பூசிக்கொண்ட அந்த பூச்சு நிஜ பூச்சு இல்லையா? சாயம் கலைந்து விட்டதா என்று விசாரிப்போம் என்று கமல்ஹாசன் கூறி இருக்கிறார்.
எப்படியோ இந்த வாரம் கமலுக்கு பெரிய அளவில் வேலை இல்லை என்று இருந்த நிலையில் நேற்று தினேஷ் மற்றும் விஷ்ணு வாயைக் கொடுத்து வம்பில் சிக்கி இருக்கின்றனர். இதனால் இந்த வாரம் இவர்களை வைத்துத்தான் இரண்டு நாட்கள் போகப் போகிறது.












Click it and Unblock the Notifications