கடும் வாக்குவாதத்தில் தினேஷ் மற்றும் விஷ்ணு.. பிக் பாஸ் சொன்ன வார்த்தை.. மாயாவுக்கு பல்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நவம்பர் 15ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் பிக் பாஸ் தினேஷை கூப்பிட்டு அவருக்கு ரகசிய டாஸ்க் கொடுக்க அவர் நடிகர் விஷ்ணுவோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

bigg boss tamil season 7 November 15th Promo 1 and fans reaction

தினேஷுக்கு விஷ்ணுவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு கொண்டிருக்கும் போது மாயா இதை உண்மை என்று நம்பிக் கொண்டு அவர் செய்யும் செயலை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

இந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி பற்றி தான் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. யாரும் எதிர்பாக்காத வகையில் பிரதீப் வெளியேற்றம் நடைபெற்றது. அதற்கு பிறகு பிரதீப் பிக் பாஸ்க்கு மீண்டும் வருவாரா? வரமாட்டாரா? என்று பலர் எதிர்பார்த்து இருந்தனர். கடைசியில் பிரதீப் உடைய என்ட்ரிக்கு வாய்ப்பே இல்லை என்று கமல் பெரிய விளக்கமும் கொடுத்து இருந்தார்.

அதோடு தான் எடுத்திருந்த முடிவு சரியானது என்பதை தெரிவிப்பதற்காக பல குறும்படங்களையும் போட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து கடந்த வாரத்தில் ஐசு வெளியேற்றப்பட்டார். இது ஏற்கனவே பலரும் எதிர்பார்த்ததுதான். ஆனாலும் பூர்ணிமா வாக்குகளின் அடிப்படையில் ஐசுவை விட பின்தங்கி இருந்த நிலையில் ஐசுவை வெளியேற்றி இருந்தனர்.

இதனால் நிக்சன் பிக் பாஸ் வீட்டுக்குள்ளே சோகத்தில் இருந்து வருகிறார். இதனாலும் பலர் கலாய்த்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பிக்பாஸ் இந்த வார தலைவராக இருக்கும் தினேஷை கூப்பிட்டு அவரிடம் இது சீக்ரெட் டாஸ்க் அதை நீங்க சரியாக செய்ய வேண்டும் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

அதைத் தொடர்ந்து தினேஷ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களிடம் பேச வருகிறார். அப்போது எல்லா போட்டியாளர்களும் ஒருவர் போலவே இன்னொருவர் நடிக்கும் டாஸ்க்கில் இருக்கின்றனர். அவர்களிடம் தினேஷ் சரியான சரக்கு வரல அதனாலதான் சோலோ சோலோன்னு கூப்பிடுறாரு. ஏதோ பண்றேன் பண்றேன்னு யாரும் பண்ணல என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது, அதற்கு மாயாவை போல மாறியிருக்கும் விஷ்ணு இவருக்கு ஏதாவது கேரக்டர் குடுங்கப்பா என்று தினேஷை கலாய்க்கிறார்.

அதற்கு தினேஷ் முதல்ல உன் கேரக்டர் படி நடிப்பா என்று சொல்ல, அதற்கு விஷ்ணு தினேஷை பார்த்து முதல்ல இவருக்கு ஒரு கேரக்டர் கொடுங்கப்பா என்று சொல்கிறார். அதை கேட்டதும் தினேஷ் இதுதான் நீ இத்தனை நாளா மாயா கிட்ட கவனித்ததா என்று தினேஷ் கேட்க, ஒரு கட்டத்தில் விஷ்ணு மற்றும் தினேஷுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது டேய் என்று தினேஷ் சொல்ல அதற்கு விஷ்ணு டேய் சொன்னா நான் இப்படித்தான் சொல்லுவேன் என்று கத்தி பேசுகிறார்.

அப்போது விஷ்ணுவாக டாஸ்க்கில் மாறி இருக்கும் மாயா ஒரு பக்கத்தில் இந்த சண்டையை உண்மை என்று நம்பிக் கொண்டு மாயாவும் கத்திக் கொண்டிருக்கிறார். கடைசியில் விஷ்ணு தினேஷை பார்த்து நரி என்று சொல்ல அதற்கு தினேஷ் என்னது நரியா நீ அமுல் பேபி என சொல்ல அதைக் கேட்டு விஷ்ணு அதிர்ச்சி ஆகிறார். இப்படியாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+