பிக் பாஸ் 7: விசித்ரா பாலியல் குற்றச்சாட்டு.. கமல்ஹாசன் சொன்ன வார்த்தை.. இந்த பதிலை எதிர்பார்க்கல
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நவம்பர் 25ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் கமல்ஹாசன் இந்த வாரம் நடைபெற்ற பூகம்பம் டாஸ்க் பற்றி பேசியிருக்கிறார்.
அதே நேரத்தில் இந்த வாரம் பூகம்பம் டாஸ்க்கில் பலர் தங்களுடைய சோக கதையை சொல்லி இருந்தனர். ஆனால் அது குறித்து கமல்ஹாசன் விவாதிக்காமல் வேறு கதையை பற்றி பேசி இருப்பது ரசிகர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இதுவரைக்கும் இல்லாத வகையில் கடந்த வாரத்தில் வேகமும் விறுவிறுப்பும் அதிகரித்து இருந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் சோக கதையை சொல்லும் டாஸ்க்கில் விசித்திரா தனக்கு தெலுங்கு நடிகர் ஒருவர் கொடுத்த பாலியல் தொல்லை மற்றும் அந்த திரைப்பட சண்டை மாஸ்டர் மற்றும் அங்கிருந்த ஒரு சிலர் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை மற்றும் பிரச்சனைகள் குறித்து தைரியமாக பேசி இருந்தார்.
இது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த தெலுங்கு நடிகர் யார் என்ற கேள்விகளும் விசித்திரா தன்னை அடித்ததாக கூறிய சண்டை மாஸ்டர் குறித்தும் பல்வேறு தகவல்களும் கருத்துக்களும் குவிந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இது பற்றி இந்த வாரம் கமல்ஹாசன் பேச வேண்டும் என்று பலர் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் கமல்ஹாசன் இது பற்றி எதுவுமே பேசவில்லை. இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. அதாவது முதல் ப்ரோமோவில் மேடையில் என்ட்ரியான கமல்ஹாசன், உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் பலர் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பூகம்பம் குறித்து பேசினார்கள். நம்மளும் அதை கேட்டுக்கிட்டோம். அதுபோல அவங்க வீட்டுல என்ன பூகப்பம் நடக்கும் என்று அவங்களுக்கு தெரியாமலா இருக்கும்?
தனக்கு பிடித்தவர்கள் எது செஞ்சாலும் கரெக்ட் பிடிக்காதவர்கள் எது செஞ்சாலும் தப்பு அப்படின்னு அவங்க விளையாடிகிட்டு இருக்காங்க. அதுபோல இந்த வாரம் வீட்டுக்குள்ள யாரெல்லாம் போக போறாங்க வீட்டுக்குள்ள இருந்து யாரெல்லாம் வெளிய போக போறாங்க என்பதை இன்னைக்கு பார்க்கலாம் என்று கமல்ஹாசன் பேசியிருக்கிறார்.
இந்த நிலையில் விசித்ரா சொன்ன பாலியல் குற்றச்சாட்டு குறித்து கமல் கேள்வி கேட்பார் என்று நினைத்திருந்த ரசிகர்களுக்கு இந்த ப்ரோமோ ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. அதே நேரத்தில் ஏற்கனவே நடிகை விசித்ராவின் கணவர் பேட்டி ஒன்றில் கமல்ஹாசன் இந்த பிரச்சனையை எல்லாம் காது கொடுத்து கூட கேட்க மாட்டார். இது பற்றி எந்த விசாரணையும் செய்யவும் மாட்டார் என்று சொல்லியிருந்தார். அது போலவே இப்போது நடந்து கொண்டிருக்கிறதா? என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications