பிக் பாஸ் 7: நிக்சனுக்கு டார்கெட் வைத்த மாயா, பூர்ணிமா.. பிக் பாஸ் வைத்த செக்.. அடுத்த வெளியேற்றமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நவம்பர் 27ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
அது இந்த வார தலைவராக இருக்கும் நிக்சனுக்கு பிக் பாஸ் பெரிய ஆப்பு வைத்திருக்கிறார்.

அதாவது தலைவர் நிக்சன் எதாவது தங்களுக்கு தவறு செய்தால் அங்கிருக்கும் மணியை அடித்து அவரை நேரடியாக அடுத்த வாரத்திற்கு நாமினேட் செய்யலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இப்போது தான் வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்து பிக் பாஸ் போட்டியில் நிகழ்ச்சியை வேறு விதத்தில் மாற்றிவிட்டனர். இந்த நிலையில் நேற்று இரண்டு ஏற்கனவே எலிமினேஷன் ஆன போட்டியாளர்கள் மீண்டும் இப்போது வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்று இருக்கின்றனர்.
இவர்கள் வெளியே நடக்கும் நிகழ்வுகளை குறித்து உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் முகத்திரையை கிழித்திருக்கின்றனர். அதிலும் நேற்று அனன்யா மற்றும் விஜய் வர்மா என்ட்ரி ஆனதும் உள்ளே இருக்கும் பல போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கிடைத்திருந்தது. அதோடு அவர்கள், உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் விளையாடும் விளையாட்டு குறித்து மக்களின் கருத்தை அப்படியே போட்டியாளர்களின் முகத்துக்கு எதிரே பேசி இருந்தனர்.
இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த வார தலைவராக இருக்கும் நிக்சனுக்கு புது பிரச்சனையை பிக் பாஸ் கொடுத்து இருக்கிறார். அதாவது தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் அனைவரும் லிவிங் ஏரியாவில் இருக்கின்றனர். அப்போது பிக் பாஸ் அங்கு பேசிக் கொண்டிருக்கிறார்.

அதில் இங்கு ஒரு மணி வைக்கப்பட்டு இருக்கு. இந்த வார தலைவராக இருக்கும் நிக்சனின் நிர்வாகத்தில் யாராவது தனக்கு அநீதி இழைக்கப்பட்டு இருக்கிறது என்று நினைத்தால் நியாயம் கேட்டு இந்த மணியை அடிக்கலாம். புகார் ஏற்றுக் கொள்ளப்பட்டால் கேப்டன் நிக்சனின் பதவி பறிபோகும். அதோடு நேரடியாக நாமினேஷன் செய்யப்படுவார் என்று பிக் பாஸ் கூறி இருக்கிறார். அதைத் தொடர்ந்து மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது மாயா ஏதாவது பிரச்சனைனா நிக்சன் நம்மள கைவிட்டிருந்தான். அதனால நிக்சனை எலிமினேஷன் செய்யணும். அதற்கான வழியை நாம பார்க்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்க இதை எல்லாம் இவர்கள் இருக்கும் இடத்திற்கு பக்கத்திலேயே இருக்கும் நிக்சன் கேட்பது போன்று காட்சிகள் இருக்கிறது. இதனால் இது குறித்து இன்றைய எபிசோட்டில் சண்டை நிச்சயமாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோல மாயா மற்றும் பூர்ணிமாவின் சூழ்ச்சிகளை நிக்சன் புரிந்து கொண்டு இனி தன்னுடைய விளையாட்டை சிறப்பாக விளையாடுவாரா? என்று எதிர்பார்ப்பும் இருக்கின்றன. ஏற்கனவே நேற்று உள்ளே வந்த அனன்யா மற்றும் விஜய் வர்மா இருவருமே நிக்சன், வினுஷா பற்றி பேசியது அதேபோல வினுஷாவிடம் மன்னிப்பு கேட்டு விட்டேன் என்று பொய் சொன்னது, எல்லாவற்றையும் கூறி இருந்தனர். இதனால் இனி நிக்சன் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications