பிக் பாஸ் 7: டைட்டில் ஜெயிக்க பிளான் போட்ட விஷ்ணு, பூர்ணிமா.. ரகசியத்தை அம்பலப்படுத்திய பிக் பாஸ்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நவம்பர் 28ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் இந்த சீசனில் கடைசி நாள் வரைக்கும் இருக்க வேண்டும் என்பதற்காக விஷ்ணு மற்றும் பூர்ணிமா போடும் பிளான் தெரிய வந்திருக்கிறது.

அதே நேரத்தில் எப்போதும் மாயாவுடன் இருக்கும் பூர்ணிமா இப்போது மாயா பற்றிய விஷயங்களை பேசி இருக்கிறார்.
அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் எதிர்பாராத பல மாற்றங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது. இவர்கள் இப்படி தான் என்று யாரையும் கணிக்க முடியாததாக இருக்கிறது. அதுபோல இந்த சீசனில் டைட்டில் வின்னர் இவர் தான் என்று யாரையும் யோசிக்கவும் முடியவில்லை என்பது பல ரசிகர்களின் கருத்தாகவும் இருக்கிறது.
ஏற்கனவே பிரதீப்புடைய வெளியேற்றும் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. அதுபோல கதை சொல்லும் டாஸ்க்கில் விசித்திரா தன்னுடைய சினிமா வாழ்க்கையில் தெலுங்கு நடிகர் ஒருவர் மூலமாக பட்ட வேதனை குறித்து பேசி இருந்ததும் தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இரண்டு போட்டியாளர்கள் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து எலிமினேஷன் ஆகி வெளியே போய் மீண்டும் வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே வந்திருக்கின்றனர்.
அவர்கள் வெளியே விளையாட்டு எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்பதை பற்றி பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களிடம் விவாதித்து இருக்கின்றனர். இதனால் உள்ளே விளையாடிக் கொண்டிருந்த போட்டியாளர்களுக்குள் சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதுவும் பூர்ணிமா ரொம்பவே குழம்பி போய் இருக்கிறார். ஏற்கனவே வார இறுதி நாட்களில் கமல்ஹாசன் தன்னையே டார்கெட் செய்து பேசிக் கொண்டிருக்கிறார் என்று அதிகமான நேரங்களில் பூர்ணிமா குற்றசாட்டு வைத்துக் கொண்டிருக்கிறார்.
இப்போது பிக் பாஸ் வீட்டை விட்டு போய் மீண்டும் உள்ளே வந்த போட்டியாளர்களும் தன்னுடைய விளையாட்டு குறித்து பேசியது பூர்ணிமாவை மேலும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இந்த நிலையில் இன்று இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பூர்ணிமா மற்றும் விஷ்ணு இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது விஷ்ணு பூர்ணிமாவிடம் நீ படம் பார்த்து இருக்கியா? மாஸ் ஆன ஒரு வில்லன் தான் அந்த படத்தையே தூக்கி நிப்பாட்டுவான். ஹீரோவை விட அதிக ஹைப் வில்லனுக்கு இருந்தா மட்டும் தான் அந்த படம் ஹிட் ஆகும். அதனால நான் ஓப்பனா இப்ப கூட சொல்லுறேன், என்னை நீங்க வில்லனா கூட பார்த்துக்கோங்க கடைசி வரைக்கும் நான் இருப்பேன் என்று நீ நினைச்சுக்கோ என்று ஆறுதல் கூறுகிறார்.
அதற்கு பூர்ணிமா நான் இப்ப வரைக்கும் நான் நானாக தான் இருக்கேன். இந்த ஷோக்காக யார் கூடயும் சேர்ந்து நான் எதுவும் பண்ணல என்று விளக்கம் கொடுத்து கொண்டு இருக்கிறார். அதைத் தொடர்ந்து கிச்சனில் தனியாக பூர்ணிமா பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது இப்போ நானும் விஷ்ணுவும் பேசிக் கொண்டிருந்தோம் அதை பார்க்கிறாங்க அதனால இனி விஷ்ணு என்ன கண்ட்ரோல் பண்றான்னு சொல்லுவாங்க என்று புலம்பி கொண்டிருக்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications