விளையாட்டை சுவாரசியமாக்க பிக் பாஸ் எடுத்த முடிவு.. நிக்சனுக்கு வைத்த செக்.. கதறும் போட்டியாளர்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நவம்பர் 29ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ராஜா டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. இதில் இந்த வார தலைவராக இருக்கும் நிக்சன் ராஜாவாக மாறி இருக்கிறார்.
சர்வாதிகார ஆட்சி செய்யும் ராஜாவால் ஹவுஸ் மேட் படும்பாடால் நிகழ்ச்சி சுவாரசியமாக மாற்றப்பட்டிருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில டாஸ்க்குகள் ஒவ்வொரு சீசனிலும் தொடர்ந்து கொண்டிருக்கும். அந்த மாதிரி தான் இந்த சீசனிலும் ராஜா டாஸ்க் தொடர்கிறது. கடந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர் ராஜாவாக இருக்கும் போது அவருக்கு ராணி கேரக்டரில் இருந்த ரச்சிதா அவரிடம் எனக்கு குடிக்க சிறுநீர் வேண்டும் என்று கேட்டது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.
தமிழ் தெரியாமல் ரச்சிதா பேசிய விதம் பலரையும் சிரிக்க வைத்திருந்தது. அதுபோல இதே சர்வாதிகார ராஜா டாஸ்க்கில் பிக் பாஸ் தமிழ் சீசன் 2வில் ஐஸ்வர்யா ஆட்சி செய்த விதமும் பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளானது. ஐஸ்வர்யா சகப் போட்டியாளர்களை இந்த டாஸ்க்கில் வைத்து தன்னுடைய பகையை தீர்த்துக் கொண்டதும் பலரும் மறந்திருக்க மாட்டார்கள்.
இப்படியான நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் ராஜா டாஸ்க் தொடங்கி இருக்கிறது. அதில் முடிசூட்டு விழா நடைபெறுகிறது. அப்போது விசித்திரா நிக்சனுக்கு கிரீடத்தை வைத்து முடி சூட்டிவிடுகிறார். அவருக்கு ஹவுஸ் மேட் எல்லோரும் சேவகம் செய்து கொண்டிருக்கின்றனர். அப்போது விக்ரம், ஜோவிகா, ரவீனா மூவரையும் நிக்சன் முட்டி போட வைக்கிறார்.
கூடவே இதுதான் என் ஆட்சி இப்படித்தான் நான் சர்வாதிகாரமாக நடந்து கொள்வேன் என்று சொல்கிறார். அப்போது முட்டி போட்டபடியே விக்ரம் பேசிக் கொண்டிருப்பதால் அவருடைய கைகளை தூக்கிக் கொண்டு நிற்கும்படி ஆணை இடுகிறார். அதைத்தொடர்ந்து இதுவரைக்கும் நீங்கள் காணாத பொழுதுபோக்குகளுடன் பிக் பாஸ் இல்லம் என்று பிக் பாஸ் கூறி இருக்கிறார்.
இந்த நிலையில் இந்த டாஸ்க் மூலமாக நிக்சனுக்கு பெரிய பிரச்சனை வரும் என்பது பலருடைய கணிப்பாக இருக்கிறது. ஏற்கனவே நிக்சன் வினுஷா மற்றும் ஐஸ்வர்யா விஷயத்தில் நடந்து கொண்ட விதம் பலரையும் கோபத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இப்போது தலைவராக இருக்கும் நிக்சன் ராஜாவாக மாறி இந்த வீட்டில் போட்டியாளர்களை டாஸ்க்குகாக பாடாய்படுத்தி இருந்தாலும் இதை வைத்து இனி அடுத்த பிரச்சனையை பண்ணி விடுவார்கள் என்பது தெரிகிறது.
அதே நேரத்தில் நேற்று அர்ச்சனா மற்றும் விஷ்ணு சண்டையிடும் போது விஷ்ணு தன்னை வில்லன் என்று சொல்லிக்கொண்டு நான் கமல்ஹாசன் உடன் மேடையில் கைகோர்த்து நிற்பேன் அதுவரைக்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் நான் இருப்பேன் என்று கூறியதும் அதிகமாக இணையத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது..
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications