மனசாட்சிப்படி நீங்க ரெட் கார்ட் கொடுக்கல.. போர் கொடி தூக்கிய விசித்திரா.. மாற்றப்பட்ட போட்டியாளர்கள்
இதில் இந்த வாரத்திற்கான எலிமினேஷனக்கான நாமினேஷன் நடைபெறுகிறது. அப்போது பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுத்தது தப்பு என்று விசித்திரா சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.

அதற்கு மாயா மற்றும் பூர்ணிமா தங்கள் தரப்பு நியாயங்களை சொல்ல அதற்கு அர்ச்சனா கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி யாரும் எதிர்பார்க்காத வகையில் சில நாட்களாகவே இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் திடீரென்று பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டது தான்.
ஏற்கனவே பிரதீப் உள்ளே சக போட்டியாளர்களிடம் கெட்ட வார்த்தை பேசிக்கொண்டும் அவர்களை அச்சுறுத்தும் விதமாகவும் நடந்து கொண்டிருக்கிறார் என்று பலர் குற்றச்சாட்டு வைத்துக் கொண்டிருந்த நிலையில் சனிக்கிழமை எபிசோட்டில் சில போட்டிகள் செங்கொடி தூக்கி தங்களுக்கு பிரதீப் மீது இருக்கும் பயம் என்று பல குற்றச்சாட்டுகளை வைத்தனர்.
அதில் பிரதீப் பாத்ரூம் போகும் போது கதவை பூட்டமாட்டேன் என்கிறார். இரவு நேரத்தில் தூங்காமல் விழித்திருந்து எல்லோரையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதுபோல விளையாட்டிலும் சரி சும்மாவும் சரி முகத்தில் மிளகாய் பொடி தூவி விடுவேன் என்று மிரட்டுகிறார். அதுபோல கெட்ட வார்த்தையை அதிகமாக பயன்படுத்துகிறார் என்றெல்லாம் பேசி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற ஒரு காரணத்தை சொல்லி பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்க சொல்லி இருந்தனர்.
அதுபோல கமல் நீண்ட விளக்கத்தை கொடுத்து ரெட் கார்டு கொடுத்திருந்தார். இது இணையத்தில் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள், பல நடிகர் நடிகைகள் என பலரும் தொடர்ச்சியாக பிரதீப்புக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் ஸ்மால் வீட்டுக்குள் விசித்திரா, கூல் சுரேஷ், தினேஷ், மணிகண்டன், ரவீனா, ஐசு போன்றோர் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் விசித்ரா கூல் சுரேஷின் பிரச்சனையை டைவர்ட் பண்ணி நீங்க பிரதீப்பை வெளியே அனுப்பிட்டிங்க.
இது ரொம்ப தப்பு என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து நாமினேஷன் பிராசஸ் முடிவு என்று பிக் பாஸ் பேசுகிறார். அப்போது நேத்து நடந்த ரெட் கார்டு எவிக்ஷன் ஒரு குரூப் ஆக்டிவிட்டியா தெரியுது என்று பிக் பாஸ் சொல்ல அதற்கு மாயா, பூர்ணிமா, ஜோவிகா என ஒரு சில போட்டியாளர்கள் ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் விசித்திராவிடம் நீங்க பண்ணினது ரொம்ப கேவலமான விஷயம் என்று சொல்ல அதற்கு அர்ச்சனா நீங்க மனசாட்சி படி பண்ணி இருந்தா தப்பு இல்ல.
ஆனா நீங்க மனசாட்சி படி நடக்கலனா அதற்கு நீங்கள் பதில் சொல்லணும் என்று கோபமாக பேசியிருக்கிறார். இப்படியாக ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கும் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு இன்று வாக்குவாதம் நடந்திருக்கிறது. இந்த வார தலைவராக மாயா இருக்கையில் அவருக்கு போட்டியாக இருக்கும் அர்ச்சனா, விசித்திரா, தினேஷ் போன்றவர்களை இந்த முறையும் ஸ்மால் வீட்டில் இருக்க வைத்திருக்கிறார். இனி என்ன நடக்கப் போகிறது என்று பார்ப்போம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications