விரலை காட்டி மாயா சொன்ன வார்த்தை.. பிக் பாஸ் வீட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த அர்ச்சனா, விசித்ரா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் நவம்பர் ஏழாம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் இந்த வார தலைவராக இருக்கும் மாயா ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை பழி வாங்குவதற்காக அவர்களுக்கு டூத் பேஸ்ட் கொடுக்காமல் பிரச்சனை செய்கிறார்.

 bigg boss tamil season 7 November 7th Promo 1 and fans reaction

அதனால் கோபமான அர்ச்சனாவும், விசித்திராவும் மாயாவிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் பிக்பாஸ் வீட்டிற்குள் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று யூகிக்க முடியாத வகையில் தான் உள்ளே பிரச்சனைகள் புதியது புதியதாக வந்து கொண்டே இருக்கிறது. ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்த நிலையில் வைல்ட் கார்ட் என்டிரியாக உள்ளே வந்த போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போட்டியாளர்கள் ஒன்று சேர்ந்து டார்கெட் செய்து அவர்களை ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தனர்.

அதை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த பிரதீப் பற்றி ஒரு சில போட்டியாளர்கள் அவர் இருப்பது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அவரை மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை வைத்து கடந்த சனிக்கிழமை எபிசொட்டில் அவர் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் இப்போது பிரளயமே வெடித்துக்கொண்டிருக்கிறது.

இந்த வாரமும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு கடந்த வாரத்தில் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் இருந்த தினேஷ், விசித்ரா, அர்ச்சனா போன்றோர் இந்த முறையும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களோடு கூல் சுரேஷ், மணி, ரவீனா என ஆறு போட்டியாளர்கள் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் இருந்து நேற்று பிரதீப்பை ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டது தவறு என்று அர்ச்சனா, விசித்திரா, தினேஷ் மூவரும் சக போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பி இருந்தனர். இதனால் இவர்கள் மூவர் மீது பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

அதிலும் இந்த வார தலைவராக இருக்கும் மாயா நான் அவர்களை பழிவாங்கி யார் என்று காட்டப் போகிறேன் என்று நேற்று சபதம் போட்டிருந்தார். அந்த வகையில் இன்று வெளியான ப்ரோமோவில் ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் ஆறு பேருக்கும் பல் துவக்குவதற்காக கொடுக்கப்பட இருக்கும் பேஸ்ட்களை கொடுக்காமல் பிரச்சனை செய்கிறார்.

அதனால் விசித்திரா, மாயாவிடம் டூத் பேஸ்ட் குடுங்க காலையில் வேணும்ல என்று கேட்க, அதற்கு மாயா திமிராக டீ போடுங்க என்று ஆர்டர் போட்டுவிட்டு ஸ்மால் பாக்ஸ் வீட்டினரின் டூத் பேஸ்ட்களை அள்ளி ஒழித்து வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து மாயாவிடம் தினேஷ் நீங்க ரெண்டு வீட்டுக்கும் கேப்டன் தானங்க என்று கேள்வி கேட்க, அதற்கு மாயா தினேஷிடம் கைவிரலை காட்டி கை இருக்குல்ல... அதை வைத்து தேச்சுக்கோங்க என்று சொல்ல, அதனால் கோபமான விசித்திரா மற்றும் அர்ச்சனா இருவரும் ஸ்மால் பாக்ஸ் வீட்டை விட்டு வெளியே வந்து சோபாவில் அமர்ந்து கொள்கின்றனர்.

அப்போது மாயா அவர்கள் இருவரையும் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் வரச் சொல்லி கூப்பிடுகிறார். அதற்கு அர்ச்சனா இது பயாஸ் கேப்டன்சி ரொம்ப தப்பு.. என்று கோபமாக பேசுகிறார். அதற்கு மாயா ஆமாங்க இது பயாஸ் கேப்டன்சி தான் என்று வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இப்படியாக மீண்டும் பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்குள் மாயாவின் கேப்டன்ஷியில் அடுத்தடுத்த பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+