பிக் பாஸ் 7: போட்டியாளர்கள் செய்த அசம்பாவிதம்.. உடைந்த கதவுகள்..தற்காலிகமாக நிறுத்தம்..காரணம் இவரா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் அக்டோபர் 19ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஸ்மால் பாஸ் வீட்டின் இருக்கும் நடந்த போட்டியில் அங்கிருந்த பொருள்கள் சேதமடைந்து இருக்கிறது.

அதனால் திடீரென்று டாஸ்கை தற்காலிகமாக நிறுத்தி வைத்து பிக்பாஸ் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே ஒவ்வொரு நாளும் சண்டை சச்சரவுகள் பஞ்சமில்லாமல் வந்து கொண்டிருக்கிறது. இதில் யார் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்றே யூகிக்க முடியாத வகையில் தான் இருக்கிறது. இதற்கு முன்பு ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு போட்டியாளர்கள் இதற்காகவே பிரிப்பர் ஆகி வந்திருக்கின்றனர்.
எப்படி விளையாடினால் அது மக்களிடம் எப்படி போகும் என்பதை புரிந்து கொண்டு இந்த சீசனில் போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டிருப்பதை பார்க்கும்போது நிகழ்ச்சிக்கு சுவாரசியம் இல்லை என்று அதிகமானோர் கருத்து கூறி வருகின்றனர். அதே நேரத்தில் இந்த முறை இரண்டு வீடு கான்செப்ட் இருக்கும் நிலையில் அதிகமான போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்காகவே பலர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.
இதுவரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெயில் என்று இருந்ததை இப்போது சின்ன வீடு என்று மாற்றம் வைத்து அதில் தண்டனை கொடுக்கும் போட்டியாளர்களை அங்கே அனுப்பி வைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இப்போது சின்ன வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கும் இடையே டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் டாஸ்க் லெட்டர் வந்திருக்கிறது. அதை பிரதீப் படித்துக் கொண்டிருக்கிறார். அதில் "ஆக்சிஜன் எமர்ஜென்சி" இந்த கேம் இரு வீட்டாருக்கும் ஆனது. எந்த போட்டியாளர்கள் அதிக சிலிண்டர்களை ராப் பண்ணி பாதுகாக்கிறார்களோ அந்த வீடு வெற்றி பெறும் என்று கூறப்பட்டிருக்கிறது.
அதேபோல கார்டன் பகுதியில் ஒரு பெட்டிக்குள் சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருக்கிறது. அதை எல்லோரும் ஆளுக்கு ஒன்றாக போட்டி போட்டு அள்ளிக்கொணடு ஓடிக் கொண்டிருக்கின்றனர். தாங்கள் வைத்திருக்கும் பொருள்களை எல்லோரும் மறைத்து வைக்க வேண்டும் என்பதற்காக ஓடிக்கொண்டிருக்கும்போது அங்கிருக்கும் கண்ணாடியை கவனிக்காத சில போட்டியாளர்கள் உடைத்து தள்ளிவிட்டு உள்ளே நுழைகின்றனர்.
அந்த ரூம் டிரெஸ்ஸிங் ரூம் போல இருக்கிறது. அங்கே இங்கேயுமாக எல்லாருடைய பெட்டிகளும் திறந்து குப்பை போல உடைகள் கிடைக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் இந்த டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்று அறிவித்திருக்கிறார். இதை கேட்டு எல்லா போட்டியாளர்களும் ஐயோ என்று தலையில் கை வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
நேற்றைய சாபங்கள் டாஸ்கில் ஸ்டார் பெற்ற அக்ஷயாவிற்கு கடைசியில் "சாபக்கல்" கொடுக்கப்பட்டது எதிர்பார்க்காதது, என்றும் இந்த சீசனில் யார் சரி என்று யூகிக்க முடியாமல் இருக்கிறது என்றும் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் இன்று கண்ணாடியை போட்டியாளர்கள் உடைத்திருப்பதை பார்க்கும்போது "சல்லி சல்லியா நொறுக்கிட்டாங்களே.. உங்களுக்கு சோறு போட்டது குத்தமாடா..?" என்று பிக் பாஸ் கண்டிப்பாக யோசித்து இருப்பார். என்று பலர் கணித்து வருகிறார்கள். இப்படியாக அதிகப்படியான கமெண்ட்கள் குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications