பிக் பாஸ் 7: தொடங்கியது ரேங்கிங் டாஸ்க்.. முதல் இடத்திற்காக பிரதீப் சொன்ன வார்த்தை.. வின்னர் இவரா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் அக்டோபர் 26 ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
இதில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே ரேங்கிங் டாஸ்க் தொடங்கப்பட்டு இருக்கிறது.
அதில் முதல் இடத்தில் இருக்கும் நபர் தான் இந்த சீசனில் டைட்டில் வின்னர் என்றும் கடைசி இடத்தில் இருப்பவர் தானாக எலிமினேஷன் ஆக போகிறவர் என்று கூறும் வகையில் இருப்பதாக விதிமுறையில் கூறியிருக்கின்றனர்.

இதனால் முதல் இடத்திற்கு பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பல போட்டியாளர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் இந்த சீசனில் அறிமுகமாகி இருந்தாலும் இப்போது 15 போட்டிகள் மட்டுமே உள்ளே இருக்கின்றனர். அதில் எல்லோரும் வெற்றி பெற வேண்டும் என்று குறிக்கோளோடு உள்ளே இருந்தாலும் இப்போது வந்திருக்கும் டாஸ்க்கில் சிலர் சண்டை போட வேண்டாம் என்று விட்டுக் கொடுத்து இருப்பதை பார்க்க முடிகிறது.
அதே நேரத்தில் இப்போதுதான் நிகழ்ச்சி விறுவிறுப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். நேற்றைய நிகழ்ச்சியில் விசித்திராவிற்கு மார்னிங் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் ஒவ்வொரு போட்டியாளரின் நிறை மற்றும் அவர்கள் இதை சரி செய்ய வேண்டும் என்று முக்கிய விஷயத்தை கூற வேண்டும் என்று டாஸ்க்கில் விசித்ரா ஒவ்வொருவர் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்போது மாயாவை மறைமுகமாக தாக்கி பேசிய போது மாயாவிற்கும் விசித்திராவிற்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இந்த சண்டை கொஞ்ச நேரம் போய்க் கொண்டே இருந்தது. அதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் கன்க்ஷன் ரூமில் இருந்தனர். அப்போது யாருடைய வீட்டினரின் பேச்சு உண்மையாக தெரிகிறதோ அவர்களுக்கு லைக்கும் முரண்பாடான பேச்சுக்கு டிஸ் லைக் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
அந்த வகையில் பிரதீப், ஸ்கூல் சுரேஷ் மற்றும் வனிதா குடும்பத்தினரின் பேச்சை கேட்டனர் .அப்போது பிரதீப் தன்னுடைய லைக்கை ஜோவிகாவிற்கு கொடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து ரவீனா பிரதீப் மற்றும் மணிவீட்டாரின் பேச்சைக் கேட்டு பிரதீப்பிற்கு லைக் கொடுத்துவிட்டு மணிக்கு டிஸ் லைக் கொடுத்து விட்டார். இது மணிக்கு பெரிய அளவில் அதிர்ச்சியை கொடுத்து இருந்தது.
இந்த நிலையில் இப்போது ராங்கிங் டாஸ்க் தொடங்கப்பட்டு இருக்கிறது. அதில் முதல்நிலை டைட்டில் வின்னருக்கான ரேங்க் என்றும் பதினைந்தாவது ரேங்க் எலிமினேஷனாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதில் ஒவ்வொரு ஹவுஸ்மேட்டும் ஒவ்வொரு இடத்தில் இருக்கின்றனர். அப்போது பிரதீப் முதலாவது இடத்தில் நிற்பதால் அவரிடம் எல்லோரும் சண்டைக்கு போகின்றனர்.
அப்போது பிரதீப் நீ இந்த வீட்டிற்குள் பாடி இருக்கிறதை விட நான் இந்த வீட்டிற்குள் நிறையவே பாடி இருக்கிறேன் என்று கூறுகிறார். அதற்கு ஐஸ்வர்யாவும் பிரதீப்பை திட்ட அப்போது நீங்க எல்லாம் ஏழைங்க என்றால் அப்ப நாங்க பிச்சைக்காரனா ?நான் இந்த இண்டஸ்ட்ரில முன்னுக்கு வருவதற்கு எனக்கு இந்த இடம் வேண்டும்.

வேணும்னா என்னை அடிச்சு சாவடிச்சுக்கிட்டு இந்த இடத்தை எடுத்துக்கோங்க என்று பேசிக் கொண்டு முதல் இடத்தை விட்டு நகராமல் பிரதீப் நிற்கிறார். தற்பொழுது இந்த சீசனில் பிரதீப் விளையாட்டு பலருடைய மனதை கவர்ந்திருக்கிறது. அதனால் இவர்தான் இன்று சீசனை டைட்டில் வின்னர் என்று பலர் கருத்து கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications