பணப்பெட்டி போயிடுச்சு.. ஆனால்? கமல் கொடுத்த எச்சரிக்கை.. கலங்கும் போட்டியாளர்கள்.. பூர்ணிமா எஸ்கேப்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஜனவரி 6ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இன்று சனிக்கிழமை எபிசோடு என்பதால் வழக்கம்போல தாமதமாகவே மதியத்துக்கு மேலே ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் வார இறுதி நாட்கள் என்பதால் கமல்ஹாசன் இந்த வார நிகழ்ச்சிகளுக்கு பஞ்சாயத்து செய்வதற்காக வந்திருக்கிறார். அதிலும் பணப்பெட்டி வெளியே போன பிறகும் உள்ளே இருக்கும் பகையைப் பற்றி இந்த வாரம் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
பூர்ணிமா பணப்பெட்டியை தூக்கி சரியான முடிவு எடுத்திருந்தாலும் இன்று கமல்ஹாசன் இடம் இருந்து தப்பித்து இருக்கிறார். இல்லை என்றால் இந்த வாரம் ரோஸ்ட் பூர்ணிமாவிற்கு தான் கிடைத்திருக்கும் என்று நெட்டிசன்கள் இந்த ப்ரோமோவிற்கு கலாய்த்து வருகின்றனர். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம் .

அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் ஒருசில நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. கடைசி கட்டத்தை எட்டி இருக்கும் இந்த சீசனில் யார் டைட்டில் வின்னர் என்று யூகிக்க முடியாத வகையில் இருக்கிறது. எட்டு போட்டியாளர்கள் இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த நிலையில் நேற்று பணப்பெட்டி டாஸ்க்கில் 16 லட்சம் ரூபாயை தூக்கி கொண்டு பூர்ணிமா வெளியேறி இருந்தார்.
அதை தொடர்ந்து உள்ள ஏழு போட்டியாளர்கள் இருக்கின்றனர். அதில விஷ்ணு டிக்கெட் டூ போனால் டாஸ்க்கில் ஜெயித்து நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். அதைத்தொடர்ந்து மீதமுள்ள ஆறு போட்டியாளர்களும் எலிமினேஷனக்கான நாமினேஷனில் இருக்கின்றனர். இதனால் இவர்களில் யார் இந்த வாரம் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.
அதே நேரத்தில் இந்த வாரத்தில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அதில் வாக்குகளின் அடிப்படையில் கடைசி இடத்தில் விஜய் வர்மா மற்றும் மாயா இருக்கின்றனர். ஆனால் பிக் பாஸில் இருந்து கடைசியில் விசித்திரா மற்றும் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இது எவ்வளவு உண்மை தன்மை உள்ளது என்பது உறுதியாக தெரியவில்லை.
இந்த நிலையில் இன்று சனிக்கிழமை எபிசோடு என்பதால் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். அதற்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இந்த வாரம் கமல்ஹாசன் என்ன பேச இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு அவர் பணப்பெட்டியை பற்றி பேசி இருக்கிறார்.
அதில் பணப்பெட்டி புறப்பட்டு விட்டது, வீட்டில் இருக்கிற எல்லாருமே நான் பெட்டியை எடுத்துட்டு போயிட்டா கப்பு எல்லாம் செஞ்சு வச்சுருக்காங்க... ஐம்பது லட்சம் ரூபாய் இருக்கு, அதை யாரு எடுப்பார்கள் அப்படிங்கிற ஒரு கவலையில இருக்காங்க. ஆனா வெற்றியாளர் ஒருவர் தான் என்பது பற்றி அவர்கள் மறந்து விட்டார்களா? பணப்பெட்டி கிளம்பி போயிருந்தாலும் வீட்டிலே தங்கி இருந்த அந்தப் பகை அப்படியே இருக்கு. அது ஏன் என்பது பற்றி இன்று விசாரிப்போம் என்று சொல்லி இருக்கிறார்.

அதே நேரத்தில் மாயா என்னதான் தப்பு செஞ்சாலும் ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில் கமல்ஹாசன் பூர்ணிமாவை வைத்துதான் கிளாஸ் எடுத்துக் கொண்டிருப்பார். ஆனால் இந்த வாரம் பூர்ணிமா ஸ்மார்ட் ஆக அங்கிருந்து தப்பித்து விட்டார். இதனால் இந்த வாரம் கமல்ஹாசன் யாரை வைத்து கிளாஸ் எடுக்க போகிறார் என்று பார்க்க வேண்டும் என்றும் ப்ரோமோவில் ரசிகர்கள் கமெண்ட்களை கொட்டுகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications