பிக் பாஸ் 7: தொடங்கியதுமே தலைவர் பதவிக்கு சண்டை.. பூர்ணிமாவிடம் ஜர்கான கூல் சுரேஷ்.. அலர்ட் ஆகிட்டாரே
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்று பிரமாண்டமாக தொடங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதில் இரண்டு போட்டியாளர்கள் அறிமுகம் ஆகி இருக்கின்றனர். முதலாவதாக கூல் சுரேஷ் அடுத்ததாக அராத்து பூர்ணிமா அறிமுகம் ஆகி இருக்கிறார். அதில் முதல் நாளே இவர்கள் இருவருக்கும் தலைவர் பதவிக்கான வாக்குவாதம் நடந்திருக்கிறது. அது பற்றி பார்ப்போம்.

அனைவரும் ஆர்வத்தோடு எதிர்பாத்திருந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கப்பட்டிருக்கிறது. இதில் இரண்டு வீடு கான்செப்ட் முதல் முறையாக தொடங்கப்பட்டு இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கான வரவேற்பும் எதிர்பார்ப்பும் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதில் வழக்கம் போல நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் போட்டியாளர்களை வரவேற்றுக் கொண்டிருக்கிறார். அதில் முதல் போட்டியாளராக நடிகர் கூல் சுரேஷ் வந்திருக்கிறார். அதைத்தொடர்ந்து youtube மூலம் பிரபலமடைந்து இப்போது நடிகையாக மாறி இருக்கும் பூர்ணிமா அறிமுகமாகி இருக்கிறார்.
அதில் முதலில் அறிமுகமான கூல் சுரேஷிடம் பிக் பாஸ் தலைவர் பதவிக்கான பேண்ட் கொடுத்து நீங்கள் தான் தலைவர் என்றும் அடுத்து வரும் போட்டியாளரிடம் நீங்கள் விவாதம் செய்து அவர் சம்மதித்தால் நீங்கள் தலைவராக இருக்கலாம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இரண்டாவதாக வந்த அராத்து பூர்ணிமாவிடம் கூல் சுரேஷ் விவாதித்துக் கொண்டிருக்கும் போது அவர் என்னால் முடியாது நான் சின்ன பொண்ணு எனக்கு வாய்ப்பு தாருங்கள் என்று விடாப்பிடியாக பூர்ணிமா பேசிக் கொண்டிருந்தார்.
ஆரம்பத்தில் கூல் சுரேஷ் செண்டிமெண்டாக இதில் கேப்டன் என்ற C எழுத்து இருக்கு. என்னுடைய பெயரில் கூல் வருகிற C எழுத்து. அதனால் எனக்கு ரொம்பவே பிடித்தது என்றெல்லாம் பேசிப் பார்த்தார். ஆனால் பூர்ணிமா அதற்கு சம்மதிக்கவில்லை. இந்த நிலையில் வேறு வழி இல்லாமல் நீங்களே இருந்து கொள்ளுங்கள் என்று பேண்டை கழட்டி தலைவர் பதவியை பூர்ணிமாவிடம் கூல் சுரேஷ் கொடுக்க,
அதை உங்கள் கையாலே நீங்களே கட்டுங்கள் என்று பூர்ணிமா சொல்ல அதைக் கட்ட போன கூல் சுரேஷ் உடனே சுதாரித்துக் கொண்டு வேண்டவே வேண்டாம் நீங்களே கட்டிக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே சமீபத்தில் தான் மாலை போட்ட சர்ச்சையில் சிக்கி இருக்கும் நிலையில் இப்போது அடுத்த பிரச்சனையா? என்று அலர்ட் ஆகிவிட்டார் போல.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications