பிக் பாஸ் பற்றி பகீர் கிளப்பிய வனிதா.. பத்தாயிரம் கமெண்ட் இருக்காமே... கமல்ஹாசனுக்கு அடுத்த சிக்கல்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து வரும் வனிதா இந்த சீசனில் பி ஆர் மார்க்கெட்டிங் அதிகமாக இருக்கிறது என்று குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.
அதோடு பி ஆர் மார்க்கெட்டிங் மூலமாகத்தான் இந்த முறை ஓட்டிங் லிஸ்டில் மாற்றம் இருக்கிறது. அதை விஜய் டிவி சரியாக கவனிக்க வேண்டும் என்றும் வனிதா கூறி இருக்கிறார்.
ஏற்கனவே கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவது பலதரப்பட்ட விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் வனிதாவும் புதிய குற்றச்சாட்டுகளை வைத்திருக்கும் நிலையில் இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்ப்போம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஹைலைட்டாக சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகளை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதை பார்ப்பதற்காக ஒரு கூட்டமே காத்திருக்கும். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், இந்தி என பழமொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதில் கலந்து கொண்ட பிரபலங்கள் மக்களின் மத்தியில் எளிமையாக பிரபலமாகிவிடலாம் என்பதற்காகவும், சினிமாவுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதற்காகவும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக போட்டி போடுகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளரும் நடிகையுமான வனிதா விஜயகுமார் தற்போது பேட்டி ஒன்றில் பிக் பாஸ் பற்றி பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
அதில் சில போட்டியாளர்கள் காசு கொடுத்து பி ஆர் வைத்து ஓட்டிங் லிஸ்ட்டை மாற்றுகிறார்கள். அதை விஜய் டிவி ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். அதோடு நான் பிக் பாஸ் நிகழ்ச்சியாக ரிவ்யூ செய்து வருவதால் எனக்கு ஒரு பத்தாயிரம் மெசேஜ் அனுப்பி இருப்பார்கள்.
வழக்கமா எனக்கு இந்த மாதிரி மெசேஜ் வந்துட்டு தான் இருக்கும். ஆனால் இந்த சீசன்ல ரொம்ப ஜாஸ்தியா வருது. ஏன்னா இதுல ஜோவிகாவும் கலந்து கொண்டதுதான். இதுல பல ரசிகர்கள் என்ன கேக்குறாங்கன்னா அக்கா பி ஆர் பன்றோம் மார்க்கெட்டிங் பண்றோம் என்று பிக் பாஸ் வோட்டிங் லிஸ்ட்டை சேஞ்ச் பண்றாங்க, அத பத்தி கட்டாயம் பேசுங்க என்று சொல்றாங்க.
அவங்க சொன்னது போல பிக்பாஸ் வோட்டிங் எல்லாமே இப்ப உண்மையா இல்ல மக்கள் விருப்பத்துக்கு மாறா தான் இருக்கிறதா என்று தான் பலர் கேள்வி எழுப்புறாங்க. எவ்வளவோ காசு கொடுத்து இப்படி பண்ணுறாங்க. இந்த வாரத்தில் நடந்தது டோமெக்ஸ் கேம். இந்த கேம்மை பார்த்தா மக்கள் இம்ப்ரஸ் ஆகி இந்த அளவுக்கா அதிகமாக ஓட்டு போட போறாங்க? இப்ப இருக்கிற ஓட்டிங் லிஸ்ட் ல ஒருத்தங்க மட்டும் ரொம்ப டிஃபரென்ஸ்ல இருக்காங்க.
ஆனா அது பிஆர் கம்பெனி செய்த வேலை. இதுக்காக பயங்கரமா வேலை செய்றாங்க. விஜய் டிவி இந்த விஷயத்தில் ரொம்ப கவனமா இருந்து இதை ஆராய்ந்து மக்களின் உண்மையான விருப்பத்தை தெரிந்து கொண்டு செயல்படனும். ஏற்கனவே இந்த சீசனில் வெளியாகிய அவுட்டிங் லிஸ்ட் எல்லாமே நாம பார்த்துட்டு தான் இருக்கோம்.
அது ஒண்ணுமே ஜெனியூ கிடையாது. பிஆர் இருக்கு தானே காசு கொடுத்து அவங்க போட்டுட்டு போயிருவாங்க, ஆனால் ரசிகர்களுடைய உண்மையான அன்பு ஒட்டிங்கில் போய் சேராது. இப்ப இந்த சோசியல் மீடியாவில் நடக்கிற பிரச்சனைகளை பி ஆர் மார்க்கெட் தான் தீர்மானிக்கிறது.
வரவர இந்த ஷோவும் அப்படியே ஆகிட்டு. இந்த ஷோவை மட்டும் பிடிச்சவங்களை பார்த்து ரசிக்கலாம். ஷோ முடிஞ்சதும் பிடிக்காதவர்கள் வின் பண்ணுனா கிழிக்கலாம், அவ்வளவுதான். அப்புறம் அர்ச்சனா நல்லா செய்து இருந்தாங்க ஈஸ்வரி கேரக்டர் உண்மையாவே அவங்களுக்கு ஏத்தது போல தான் இருந்தது.
அர்ச்சனா வந்ததும் மாயா கூட இருந்தவங்கள பிரிக்கத்தான் பார்த்தாங்க. அப்படி என்னதான் அர்ச்சனாவுக்கு கோபம் என்று தெரியவில்லை. வெளியே இருந்து வெறும் கமெண்ட்ஸ் மட்டும் பாத்துட்டு இவங்க வைல்ட் கார்டா உள்ளே போனதும் இப்படி பண்ணுறாங்க. இப்ப அர்ச்சனாவுக்கும் வெளியில பேட் கமெண்ட்ஸ் வருது.
அதனால அவங்க கெட்டவங்களா ஆகிடுவாங்களா என்று வனிதா கேள்வி கேட்டு இருக்கிறார் .அதுபோல வனிதா தன்னுடைய ரிவியூவில் அர்ச்சனாவுக்கு அதிகமான ஓட்டுகள் வந்ததை தான் பி ஆர் டீம் வைத்து அர்ச்சனா இவ்வளவு லீடிங்கில் ஓட்டு வாங்கி இருக்கிறார் என்று குற்றச்சாட்டு வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications