பிக் பாஸ் 7: விசித்ராவா இப்படி செய்தது.. அம்பலப்படுத்திய பிக் பாஸ்.. கேமரா இருக்கிறதை மறந்து விட்டாரா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் விசித்திராவிற்கு ரசிகர்களின் மத்தியில் ஆதரவு இருந்து வருகிறது.
இதுவரைக்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் வயதில் அதிகமான போட்டியாளர்கள் ஒரு சில வாரங்களில் வெளியேற்றப்பட்டு இருந்த நிலையில் விசித்ரா தான் அதிகமான நாட்கள் தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

டான்ஸ் மாரத்தான் டாஸ்க் நடைபெற்ற போது விசித்ரா செய்த செயல் இப்போது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இதுவரைக்கும் இல்லாத வகையில் பல மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் இதுவரைக்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் வயதில் அதிகமாக இருக்கும் பிரபலங்கள் தான் முதலில் வெளியேற்றப்படுவது வழக்கமாக இருக்கிறது. ஆனால் இந்த சீசனில் விசித்ரா முதல் வாரத்திலேயே ஜோவிகாவோடு படிப்பு விஷயத்தில் சண்டையிட்டு தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்ததால் அவருக்கு ரசிகர்களின் மத்தியில் அதிகமான வரவேற்பு கிடைத்தது.

அதற்கு பிறகு பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டது. இதற்கு விசித்ரா தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்து வந்ததால் பிரதீப் ரசிகர்களும் தொடர்ச்சியாக விசித்திராவிற்கு ஆதரவு கொடுத்து வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் திடீரென்று அர்ச்சனா அணியோடு இருந்த விசித்திரா ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் போனதும் மாயா மற்றும் பூர்ணிமா கேம்மில் சேர்ந்து விட்டதால் இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தது.
அதோடு அர்ச்சனா மற்றும் தினேஷோடு விசித்திரா அடிக்கடி சண்டை இட்டு கொண்டு வருவதும் அவரை அதிகமாக விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் இப்போது டான்ஸ் மாரத்தான் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. அதில் விசித்திரா நீலாம்பரியாக மாறி இருக்கிறார். அவருக்கு ஜோடியாக தினேஷ் ரஜினி ஆக மாறி இருந்தார்.
நேற்று இவர்கள் இருவருக்கும் டான்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது படையப்பா திரைப்படத்தில் இடம்பெற்ற மின்சார கண்ணா பாடலுக்கு விசித்ரா மற்றும் தினேஷ் ஆடிக்கொண்டிருந்தனர். கடைசி நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரம்யா கிருஷ்ணன் ரஜினிகாந்தை கட்டிப்பிடிப்பது போன்று விசித்திரா கட்டிப் பிடித்து இருந்தார்.
ஆனால் அந்த முத்தம் மட்டும் மிஸ்ஸிங். இதை பார்த்து ரசிகர்கள் விசித்திராவா இப்படி செய்கிறது? இங்கே சுற்றி இத்தனை கேமரா இருக்கிறதே மறந்து விட்டாரா என்று கமெண்ட் அனுப்பி வருகின்றனர். காரணம் சில தினங்களுக்கு முன்பு விசித்ரா மற்றும் கூல் சுரேஷ் இருவருடைய கைகளும் கயிறால் கட்டப்பட்டிருந்தது. அப்போது ஒருமுறை கூல் சுரேஷ் பெட்டில் வந்து படுத்து இருப்பார்.
அருகில் இருக்கும் விசித்திரா இவர் இப்படி படுத்து இருக்கிறார். நான் இவர் பக்கத்தில் இப்படி உட்கார்ந்து இருக்கிறேன். இதை பார்க்கும் என்னுடைய கணவர் என்ன நினைப்பார். இது எவ்வளவு அசிங்கமாக இருக்கிறது என்று கேட்டிருந்தார். ஆனால் நேற்று டாஸ்க்கில் தினேஷ், விசித்திரா கட்டிப் பிடித்து இருந்தார்.
ஏற்கனவே விசித்திரா ஆரம்ப காலகட்டத்தில் கவர்ச்சி நடிகை நடித்திருந்தாலும் இப்போது அந்த மாதிரி தான் நடிக்கவில்லை என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில் டாஸ்க்கில் இப்படி கட்டிபிடிப்பதை வீட்டில் உள்ளவர்கள் பார்க்க மாட்டார்களா? என்றும் சில கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனாலும் அதிகமான ரசிகர்கள் விசித்திரா மற்றும் தினேஷ் உடைய பெர்பார்மன்ஸ் அழகாக இருந்தது என்று பாராட்டியும் வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications