பிக் பாஸ் 7: விஷ்ணுவை வெளுத்து வாங்கிய அர்ச்சனா.. கூல் சுரேஷ் இப்படி செய்யலாமா? பிக் பாஸின் பாரபட்சம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் புதியதாக டாஸ்க் ஒன்று நடைபெற்றிருக்கிறது. அதில் விஷ்ணு மற்றும் விக்ரம் இருவரும் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் அனைவருக்கும் செல்ல பெயர் வைக்க சொல்லி பிக் பாஸ் கூறி இருக்கிறார்.
அப்போது வீட்டில் விஷ்ணு எல்லோருக்கும் வைத்த பெயருக்கு அந்த நேரத்தில் பலரும் சிரித்திருந்தாலும் பிறகு சண்டை சச்சரவில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அதே நேரத்தில் நேற்று கதை சொல்லும் டாஸ்க்கில் விக்ரம் பேசிய கதையை மற்றும் எபிசோடில் கட் பண்ணி பிக் பாஸ் பாரபட்சம் காட்டி இருக்கிறார். அது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
அதாவது பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இப்போது தான் ரசிகர்களின் மத்தியில் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அதிகமான டாஸ்குகள் தொடங்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் காலை நடந்த ஒரு டாஸ்க் நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கும். என்னன்னா ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு கூல் சுரேஷ் ஜோசியம் சொல்கிறேன் என்று எல்லா போட்டியாளர்களையும் பற்றி பேசி வாங்கி கட்டிக் கொண்டார்.
அதற்கு பிறகு அந்த டாஸ்க் இன்று தொடங்கி இருக்கிறது. அதில் பிக்பாஸ் கூறியபடி விக்ரம் மற்றும் விஷ்ணு எல்லா போட்டியாளர்களுக்கும் ஒவ்வொரு பெயர் வைத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது மாயாவிற்கு மாயா ஒரு வைக்கப் போரு என்று விஷ்ணு பெயர் வைக்கிறார். அதை சரியாகத்தான் வைத்திருக்கிறார் என்று ரசிகர்களின் மனதிலும் தோன்றியிருக்கும்.
அதுபோல அடுத்ததாக பூர்ணிமாவை பற்றி விஷ்ணு சொல்லும் போது பூர்ணிமா சைதை சத்தியா என்று பழைய சத்யராஜ் படத்தோடு கம்பர் பண்ணி பூர்ணிமாவை சொல்லி இருக்கிறார். அதோடு இந்த பொண்ணு கிட்ட போய் யாராவது பேசினால் செத்துருவான் அப்படி இருக்கு என்று பூர்ணிமாவை பற்றி பல பேசி இருக்கிறார். ஆனால் இதையெல்லாம் கேட்ட பூர்ணிமா எதுவும் சொல்லாமல் சிரித்து கொண்டே இருந்தது தான் விசித்திரமாக இருந்தது.
ஒருவேளை பூர்ணிமா பாயிண்டுக்காக காத்திருக்கிறாரா? அல்லது விஷ்ணு தன்னை பற்றி சொன்னதால் பதில் பேச முடியாமல் இருக்கிறதா? என்று தெரியவில்லை. அதைத்தொடர்ந்து தான் விஷ்ணு தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்டார். அதாவது அர்ச்சனாவை பற்றி விஷ்ணு தொட்டா சிணுங்கி என்று சொல்ல அதனால் அர்ச்சனா கோவப்பட்டு விடுகிறார்.
அதற்கு விஷ்ணு நான் இதை எதற்கு சொல்கிறேன் என்றால் என்னதான் உங்களை நோக்கி பிரச்சனை வந்தாலும் அதை நீங்க உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்கிறீர்கள் என்று பாசிட்டிவாக சொல்வது போன்று சொல்லி இருந்தாலும் அர்ச்சனா அதை லேசில் விடவில்லை. வேற லெவலில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.
பிறகு மாயா மற்றும் பூர்ணிமா அர்ச்சனாவை சமாதானம் செய்த பிறகு தான் அர்ச்சனா அமைதியாக இருந்திருக்கிறார். அதுபோல தினேஷுக்கு இம்சை அரசன் என்று பட்டம் கொடுத்திருக்கிறார். அடுத்ததாக விக்ரம் ரவீனா மற்றும் மணிக்கு பை ஒன் கெட் ஒன் என்று பட்டம் கொடுத்திருக்கிறார். இது ரசிகர்கள் மனதில் இருப்பது போன்றே பட்டம் கொடுத்து விட்டார்.
அடுத்ததாக விஷ்ணு அக்ஷயாவை பார்த்து நீதாமா பருத்தி மூட்டை, ஒவ்வொரு தடவையும் நாங்கள் தூக்கி வெளியே போட அனுப்பி வைக்கிறோம். ஆனா நீ இங்கே தான் இருப்பேன்னு வந்து இருக்கிறாய் என்று சொல்ல அதனால் ஆரம்பத்தில் அக்ஷயா கோபப்பட்டாலும் பிறகு அர்ச்சனா அளவிற்கு சண்டை போடாமல் அமைதியாக இருந்து விடுகிறார். அடுத்ததாக பிக் பாஸ் விக்ரம் மற்றும் விஷ்ணு இருவரையும் மாறி மாறி பட்டம் கொடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார்.
அப்போது விக்ரம் விஷ்ணுவிற்கு இவர் ஒரு பனிக்கட்டி மாதிரி திங்கள் கிழமை, செவ்வாய்க்கிழமை வரும்போது ஸ்ட்ராங்கா பாயிண்ட் எடுத்து வைப்பாரு. அதுவே புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை வரும்போது உருகிடுவாரு என்று பாய்ண்ட் எடுத்து வைக்கிறார். இப்படியாக கலகலப்பாக இன்று காலை டாஸ்க் நடைபெற்றது.
அதே நேரத்தில் நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் கதை சொல்லும் டாஸ்க் நடைபெற்றது அதில் ஒரு சிலருடைய கதையை மட்டும்தான் எபிசோடில் ஒளிபரப்பானது. ஆனால் விக்ரம் உடைய கதை அதில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. அது குறித்து தான் ஏன் பிக் பாஸ் இப்படி ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டார் என்று கேள்விகளும் எழுந்து வருகிறது. விக்ரம் தன்னுடைய கதையை சொல்லும்போது கோர்வையாக சொல்லாமல் திணறி இருந்தார்.
அதாவது எங்க வீட்ல எங்க அப்பா ரொம்பவே கடுமையா நடந்துக்குவாங்க. அதனால ஸ்கூல் காலேஜ் படிக்கும் போது என்ன ரொம்பவே கட்டுக்கோப்பா வச்சுக்கிட்டாங்க. நான் அதனால ரொம்பவே கஷ்டப்பட்டேன். பிறகு பல போராட்டத்துக்குப் பிறகு இப்போ நடிக்கிறேன் என்றாலும் கூட பெண்களின் மீது கை பட்டாலும் எனக்கே கஷ்டமாக இருக்கிறது. அதேபோல வீட்டிலும் அதே பார்த்து பயந்து விடுகிறார்கள்.
நான் இப்போ ஒரு பெண்ணை காதலித்தேன். அதைக்கூட வீட்டில் சம்மதிக்கவில்லை என்று கண்கலங்கியபடியே பேசி இருந்தார். ஆனால் அப்போது இந்த விக்ரமுடைய கஷ்டமெல்லாம் ஒரு பிரச்சனையா என்று சொல்வது போன்று கூல் சுரேஷ் சிரித்துக் கொண்டிருக்கிறார். என்னதான் நமக்கு பெரிய பிரச்சனைகள் இருந்தாலும் எதிரே இருப்பவர்களுடைய பிரச்சனை அவர்களுக்கு பெரியதாக தானே இருக்கும். அதை எதற்காக கூல் சுரேஷ் சிரித்து அவமானம் செய்தார் என்று தான் தெரியவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications